ஜனவரி 27 கிரிகோரியன் ஆண்டின் 27வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 நாட்கள் உள்ளன.

  • 1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
  • 1938 – நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
  • 1967 – அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1974 – சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

  • 1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
  • 1967 – அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்: எட்வர்ட் வைட், (பி. 1930), வேர்ஜில் கிறிசம், (பி. 1926), றொஜர் காபி, (பி. 1935),

ஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 25வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 நாட்கள் உள்ளன.

  • 1881 – தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்
  • 1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
  • 2005 – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

  • 1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)
  • 1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்

இறப்புகள்

  • 1922 – சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (பி. 1855)
  • 2006 – நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர்

சிறப்பு நாள்

  • ரஷ்யா: மாணவர் நாள் (தத்தியானா நாள்)

 

கனடாவில் வாழ்கின்ற வெளிநாட்டுத் தம்பதி ஒன்று அவர்களின் குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்டி உள்ளது.

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்தவர் டேவிட். கியூபாவைச் சேர்ந்தவர் ஸ்பானி. இவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தமிழ் இலக்கியங்கள் மீது ஸ்பானிக்கு நாட்டம் அதிகம். எனவே குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்டி உள்ளார்.

குழந்தையின் பெயர் சாந்தி

 தமிழர்கள் ஆங்கில பெயர்கள் சூட்டும் வேளை வெளிநாட்டுவர் தமிழ் பெயர் சூட்டுவது குறிப்பிடத்தக்கது.

Thanks: சிறுப்பிட்டி

ரவ்வவ கேசரி -

 அவசர விருந்தாளி என்று குறைந்த நேரத்தில் செய்திட பல நேரங்களில் கைகொடுக்கும் சுலபமான இனிப்பு வகை உணவு.

ravai kesari 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்
ஏலப்பொடி
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்

ravai kesari 3

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.
  • இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.
  • ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
  • ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
  • இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.
  • பொரித்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.

ravai kesari 2

* இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம். அல்லது விருந்துகளின் இறுதியில் dessert உணவு மாதிரி தருவதாக இருந்தால் இப்படிச் செய்யலாம்; ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி, ஒவ்வொரு முறையும் ஒரு முந்திரி, சில கிஸ்மிஸ்களை அடியில் போட்டு, அந்தக் கரண்டியால் சூடான கேசரியை எடுத்து கப்பில் போட்டால் ஒரே அளவாகவும் மேல்ப்பகுதி அலங்கரித்தும் இருக்கும். 5, 6 தடவைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் கரண்டியில் சிறிது நெய் தடவினால் ஒட்டாமல் விழும்.

* கேசரிக்கு கிஸ்மிஸ் பழைய ஸ்டைல். ஒரு திருமணத்தில் டூட்டிஃப்ரூட்டியைப் பார்த்டேன். கிஸ்மிஸ் மாதிரி இடையில் புளிக்காமல் சுவையாக இருந்தது.

* கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில்  1 3/4 கப். வடஇந்தியர்கள் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சர்க்கரை மட்டும் சேர்ப்பதைத் தான் தாங்க முடியவில்லை என்றால் அல்வா என்று சொல்லிவிட்டு அநியாயத்துக்கு ‘சூஜி கா அல்வா’ என்று கேசரியை நீட்டுகிற(அல்வா கொடுப்பது என்பது இதுதானா?) செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே. ) கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்(எப்படி ஆகும்?) சிறிது கோதுமை மாவை நன்கு வறுத்துச் சேர்க்கவும்.

* பலருக்கு கேசரியில் பால் சேர்ப்பது பிடித்திருக்கிறது. எனக்கு பாலின் ஃப்ளேவர் இதில் வருவதில் விருப்பமில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு ஒரு கப் கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளலாம்.

# 2.

புதிதாகச் செய்பவர்கள், ரவை கட்டி தட்டிவிடும் என்று அஞ்சுபவர்கள், கேசரி பொலபொலவென உதிராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள், அந்தப் பதினைந்து நிமிட நேரம் கூட கவனிக்க நேரமில்லாமல் வேறு வேலை இருப்பவர்கள் கீழே சொல்லியுள்ள மாதிரியும் செய்யலாம்.

  • ஒரு கப் ரவையை 1/2 கப் நெய்யில் பொரித்த மாதிரி பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த ரவையுடன் ஒரு கப் சூடான பால், கேசரி கலர், ஏலப்பொடியும் கலந்து வைக்கவும்.
  • குக்கர் உள்பாத்திரத்தில் தேவையான சர்க்கரையை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும்(பாகு ஆகிவிட வேண்டாம்.) பால் சேர்த்த ரவையையும் சேர்த்துக் கலந்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடலாம். மீதி நெய், வறுத்த முந்திரி இத்யாதிகளைக் கலந்து பரிமாறலாம். இந்த முறையில் ரைஸ் குக்கரிலும் செய்யலாம். கேசரி உதிர் உதிராக வரும். அளவு நிறைய செய்யும்போது இந்த முறை வசதியானதும் கூட.

Thanks : Jayashree Govindarajan


தேவையானப்பொருட்கள்:

ரவா – 1 கப்
அன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது ‍- 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 4 அல்லது 6 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்ப‌ருப்பு ‍- சிறிது
காய்ந்த‌ திராட்சை – சிறிது
ஏல‌க்காய் பொடி – 1 டீஸ்பூன்
கேச‌ரி அல்ல‌து ம‌ஞ்ச‌ள் நிற‌ க‌ல‌ர் ‍- சிறிது

செய்முறை:

ஒரு வாண‌லியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும்.

அதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.

அன்னாசிப்பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். (மைக்ரோ அவனில் வைத்தும் வேக விடலாம்). சூடு ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும். ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் அன்னாசிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கட்டி எதுவும் இல்லாமல், நன்றாகக் கிளறி, கேசரி அல்லது மஞ்சள் கலர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் கிளறவும். கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்பு: இத்துடன், இரண்டுத் துளி “அன்னாசிப்பழ எஸ்ஸென்ஸ்” சேர்த்தால், இன்னும் வாசனையாக இருக்கும். அன்னாசிப் பழம், மிகவும் இனிப்பாக இருந்தால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

நன்றி: கமலா

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.