Croc Cage Diving என அழைக்கப்படும் இந்த முதலையுடன் சேர்ந்து மூள்கும் விளையாட்டு முன்பு அறிமுகமான shark cage divingஐ ஒத்ததாகும். அதாவது ஒரு கூண்டினுள் உங்களை இறக்கி கூண்டை அப்படியே முதலை உள்ள தடாகத்தினுள் இறக்குவார்கள்.

இவ் விளையாட்டை 12வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களும் + மனதிலே தில் உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவர். பளிங்குபோல் தெளிந்த, வெதுவெதுப்பான நீர் உள்ள தடாகத்தினுள் 4மீட்டர் நீளமான ஆளைக்கொல்லும் ‘நைல் முதலை’ களுடன் நீங்கள் உல்லாசமாக (?!) விளையாடலாம்!

நைல் முதலையின் அடக்கமான தொற்றம் !

உங்கள் முகத்திற்கு சில அங்குலம் முன்னால் வரை அகோர பற்களுடன் உலாவும் முதலைகளை - உங்கள் கைகளை நீட்டி தடவிப்பார்ப்பது உங்கள் சொந்தவிருப்பம் ! அதற்குமுன்னால் சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலையின் வாயில் எதுவாகினும் மாட்ட அது ஒரு செல்லக்கடி கடிக்கும். அந்தக்கடினின் அளவு ஒரு சதுர அங்குலத்திற்கு ஒரு தொன் அழுத்தம் இருக்கும் ! பரவாயில்லையா?

உலகில் முதல் முறையும், ஒரே ஒரு இடத்திலும் இது தற்போதைக்கு அமைந்துள்ளது. பின்னர் மக்களின் வரவேற்பையும், முதலையின் ஒத்துளைப்பைபும் பொறுத்து மற்றய இடங்களிலும் அதாவது நம்ம ஊர் மிருகக்காட்சி சாலைகளிலும் அமையல்லாம் !

பொறுமை இல்லா வீரத்தமிழர்கள் இப்பவே போய் முதலையுடன் குளிக்க South Africa நாட்டின் Western Cape மாகானத்தில் அமைந்துள்ள Oudtshoorn நகருக்கு செல்லவும்.