இந்தியாவில் மகாரஸ்ரா மானிலத்தில் உள்ள சோலாப்பூர் நகரில் பிறந்த கைக்குழந்தைகளின் கதியைப் பாருங்கள். மூட நம்பிக்கை என்பது பிறந்த குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இங்கு.
உலகமே போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமும் இதே மதம் தான், இதே நாட்டுக்குத்தான் ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் என்ன பலன்…?
பள்ளிவாசலின் உச்சியில் இருந்தே பச்சிளம் குழந்தைகளின் உசிருடன் விளையாடும் இந்த பாபாக்களை என்னவென்று சொல்வது?
நாளைய வல்லரசு, கணணி உலகில் கொடிகட்டி பறக்கின்றோம்….அது இது எனவெல்லாம் வாய்கிளியப் பேசுபவர்கள் யாருமே இது மாதிரி அறிவுகெட்ட தனங்களை கண்டுக்கவே மாட்டார்களா?
கீழே பாருங்கள், நாளைய இந்தியாவின் வரும்கால தூண்கள் படும் வேதனையை.
ஜூலை 13, 2008 at 6:01 பிற்பகல்
இப்படி ஒரு முட்டாள்தனமான முடப்பழக்கம் இவ்வளவு பகிரங்கமாக நடக்கின்றது. அரசு எப்படி இதை அங்கீகிரிக்கின்றது?
தயவு செய்து இஸ்லாத்துடன் இதை தொடர்பு படுத்த வேண்டாம். இந்த அயோக்கியத்தனத்திற்கும் இஸ்லாத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை. மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயல்.