புருவத்தை உயர்த்தி பார்த்த காலம் எல்லாம் புராணக் கதைகளாகிவிடுமோ என அச்சாமாக உள்ளது!
சாதாரணமாக எடை போட முடியாத இந்த புலம்பெயர் தமிழர்களின் சக்திபற்றி உலகமே அதிசயித்த காலம் எல்லாம் என்னவாயிற்று என்று எடைபோட வேண்டியுள்ளது.
வேறு யாவருக்கும் இல்லாத உரிமையும், கீர்த்தியும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் இலங்கை தமிழருக்கு கடவுள்போல் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சாமிமார்கள்தான்.
இலங்கையில் அனாதரவாய் இருக்கும் தமிழருக்கு அபயம் கொடுக்க இருக்கும் சாமிமார்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்த அதி எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்த புலம்பெயர் தமிழர்கள்.
Torontoவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆட்களே இல்லாத வேளையில், அண்மையில் வந்த “கந்தசாமி”க்கு கால்கடுக்க நின்றது நெஞ்சை நெருட்டுகின்றது.
EXCUSEME Mr தமிழ்ச்சாமி!
ஒரு காப்பி குடிப்போம் வாங்க சாமி!
நீங்கள் Hot Drinks உம், Cool Drinks குடித்து மறந்து போச்சா
iced cappuccino குடித்ததெல்லாம் மறந்து போச்சா?
Long Drive போய் போராட்டம் செய்ததெல்லாம் மறந்து போச்சா?
சினிமா என்றவுடன் உற்சாகமாக ஓடும் உங்களுக்கும் அதே பாணியில் அழைத்தால் ஒருவேளை வருவீர்களா?
சினிமா கலைஞர்களை அழைத்து உங்களை கூட்டம் கூட்டும் நிலமைக்கும் சென்றாலும் செல்வார்கள் சில தமிழ் ஆவலர்கள்!
அப்படி ஏதும் அசம்பாவிதம் நடைபெறும் முன், வரும் சனிக்கிழமை - அமெரிக்க துனைத்தூதுவரகத்திற்கு முன்னால் நடைபெறும் கவன ஈர்ப்பு 150வது நாளை பூர்த்தியாவதை முன்னிட்டு ஒரு மாபெரும் கவன ஈர்ப்பு நடைபெற உள்ளது. எனவே தயவுசெய்து தமிழ் சாமிகளே, உங்களை நம்பியிருக்கும் நாதியற்ற உங்கள் உறவுகளுக்காக…. குறைந்தது ஒரு Cappuccinoவையோ, Coffieயையோ எடுத்துக்கொண்டு வந்து சேருங்கள்!
உங்களை உற்சாகமாக வரவளைக்க இந்தப்பாடல்
( உங்கள் ரசணையுடனும் ஒருதரம் நானும் வந்து பார்ப்போமே! அதற்காக அங்கு வருபவர்களுக்கு கந்தசாமி DVD தந்தால்தான் வருவேன் என்று யாரும் அடம் பிடிக்காதீர்கள்)
ரெம்ப நாளாச்சு… ஹி…ஹீ… எங்கே இருக்கு அமெரிக்க தூதுவரகம் என்று தலையை சொறிபவர்களுக்கு கீழே உள்ள வரைபடம் உதவும்!
View Larger Map
செப்டம்பர் 22, 2009 at 6:01 பிற்பகல்
Nice article. This is for canadians only. How about the Thamils all over the world? Write something commonly to open the eyes of the world Thamils.