Street View என்னும் கூகிளின் ஒரு சேவை தற்போது கனடாவிலும் காலடிவைத்துவிட்டது. கனடா முழுவதும் இந்த சேவை தற்போது இல்லாவிடினும் கூடிய விரைவில் இது விரிவுபடுத்தப்படும்.
Toronto பெரும்பாகம், Kitchener, Waterloo, Montreal, Ottawa,Calgary, Vancouver போன்ற நகரங்களில் இன்றைய தேதியில் இந்த சேவை உண்டு.
![]()
![]()
கூகிள் வரைபடத்தில், படத்தை பெரிது-சிறிதாக்க உபயோகிக்கும் Toolன் மேல்ப்புறத்தில் ஒரு மனிதர் தோன்றுவார். இவர் மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் அந்த வரைபடத்தில் Street View சேவை உள்ளது என்று பொருள்.
இந்த மனிதரை கிளிக் பண்ணியபடி பிடித்துக்கொண்டு வெளியே இழுத்தால் வரைபடத்தில் நீலநிறத்தில் விதிகளின் வர்ணம் மாறும். நீல நிறத்தில் மாறிய வீதிகளில் அந்த மஞ்சள் மனிதரை இழுத்துச் சென்று எமக்கு தேவையான இடத்தில் விட்டால் அந்த வீதியை நாம் நேரடியாக பார்ப்பதுபோல் பார்க்கல்லாம்.

இதுசம்பந்தமாக முன்னர் இட்ட பதிவு