Dr.சிவப்பிரகாசம் சிதம்பரநாதன்

தோற்றம் 18.12.1932 மறைவு 16.12.2009
வல்வை சிவன்கோயிலடியைப் பிறப்பிடமாகவும் மூதூர், பொத்துவில், வாழைச்சேனை ஆகிய இடங்களில் வைத்திய அதிகாரியாகக் கடமை யாற்றி ஓய்வுபெற்றவரும், கனடாவில் வாழ்ந்தவருமான ச.சிவப்பிரகாசம் சிதம்பரநாதன் அவர்கள் 16- 10- 2009 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், நாகபூஷணம் ஆகியோரின் புதல்வரும், காலஞ் சென்ற சட்டத்தரணி வேலுப்பிள்ளை மற்றும் பர்வதாவர்த்தினி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மருமகனும், பத்மலோஜினி சிதம்பரநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை – வல்வை சிவகுருவித்தி யாசாலை) அவர்களின் அன்புக் கணவரும், பத்மநாதன் (ஆinளைவசல ழக சுநஎநரெந), உமா, நளாயினி, ராதிகா (சுழலயட டீயமெ) ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமறைச்செல்வி, நகுலசிகாமணி, தங்கவேல், சிவகந்தராசா துரைரெத்தினம் (சுழலயட டீயமெ) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சந்துரு, சௌமியன் மற்றும் யாதவன், சிவகாமி, சரண்யா, பாரதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிப் பிள்ளை, ஞானமூர்த்தி, பொன்னம்மா, கமலாபாய், மற்றும் சிவானந்தன் (ஓய்வுபெற்ற தபாலதிபர்), சந்திராபாய் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உருத்திரசிகாமணி, கமலலோஜனி, சங்கரசிகாமணி, சுந்தரசிகாமணி, புவனலோஜனி, பரமசிகாமணி, இந்திரசிகாமணி, ராஜசிகாமணி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9மணிவரை
4164 Sheppard Avenue East இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு திங்கள் காலை 8 மணி முதல் 10 மணிவரை அதே மண்டபத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று Mount Plesant Crematorium இல் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: பத்மநாதன்: 416 -261 -5419, 416 -939 -1232
சிவா 416 -476 -5419