அறிவியல்


ஒரு வண்ணத்துப் பூச்சி உங்கள் கையில் இருக்கிறது, அதை படமாக வரைய நினைக்கிறீர்கள். கோடுகளால் அவுட்லைன் வரைந்து முடித்த பிறகு தான், ஆஹா… இந்த நிறத்துக்கு எங்கே போவது என குழம்பிப் போய் முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள் !

இலையுதிர்காலத்தில் கனடாவில் இலைகள்  கொட்டிக்கிடக்கும்  வீதியில்  நடக்கிறீர்கள், வண்ண வண்ண இலைகளைப் பார்த்து பிரமிக்கிறீர்கள். அதை ஓவியமாய் தீட்ட அமர்ந்தால் அங்கும் நிறப் பற்றாக்குறை உங்களை ஆட்டிப் படைக்கும்.

இப்படிப்பட்ட தவிப்புகள் இனிமேல் இருக்காது என தோன்றுகிறது. எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ, அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.

கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.

காதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம்

வியக்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பு இதோ…

P1

 

 இதன் தொழில் நுட்பம் இதோ…

P4

 

 

P2

 

P3

Thanks :  http://winarco.com/color-picker-pen-by-jinsun-park/ மற்றும் திரு.சேவியர்

அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.

இந்த வீடியோ பலவருடங்களுக்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். எனவே  பொய்ப் பிரச்சாரங்களை  நம்ப  வேண்டாம். அந்த  வீடியோவை  பார்க்காதவர்கள் இதோ  கீழே  பார்க்கவும். 

 

Tanya2

உலகிலேயே இவள் மட்டும் தான் இப்படி என அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர் மருத்துவர்கள். என்ன மருத்துவம் பார்த்தாலும், என்ன ஆபரேஷன் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இவளுடைய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் உலகில் மருந்தே இல்லை என்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி ! எடை சுமார் 215 கிலோ.

பதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் ! இது விபரீத வளர்ச்சி ! உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் !

இவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 !

சிறு வயதில் சாதாரணமாய் தான் இருந்திருக்கிறாள். டீன் ஏஜில் தான் இந்த திடீர் வளர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. செருப்பு Tanya_Beforeவாங்கி வருவாள், அடுத்த மாதமே அது சின்னதாகிவிடும். வாங்கி கொண்டு வரும் ஆடைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதிர்ச்சியும், குழப்பமும், கவலையும் ஒட்டு மொத்தமாக அவளைச் சூழ்ந்து கொண்டது அப்போது தான்.

பதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.

இந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் !

எப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.

கேரன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்கா முழுதும் தேடி ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தார்கள். கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்பாடா, ஒரு வழியாக எனது சிக்கல் தீர்ந்தது என மகிழ்ந்தாள் தான்யா. ஆனால் அந்த மகிழ்ச்சி tranya3நீடிக்கவில்லை. அவள் தொடந்து வளர்ந்தாள்.

சரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.

பல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.

தன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் ? நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.

“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே !

கடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா !

நன்றி: சேவியர்

தற்போது மேலை நாடுகளிலும், ஏன் இந்தியா – இலங்கை போன்ற நாடுகளிலும் குழந்தைகளை எளிதாக எடுத்துச்செல்ல இந்த Strollers என்னும் தள்ளு வண்டியை உபயோகிப்பது சகஜம்.

எளிதாக உருட்டிச்செல்லும் இந்த Strollersகளினால் அதே எளிதாக ஆபத்துக்கள் வருவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது.

சரியான முறைகளில் அதனை உபயோகிக்காவிடின் அதனால் பெரும் அனர்த்தங்கள் தான் நிகழும்.  காரணம், இதற்கு இலகுவாக உருட்ட 4 அல்லது 6 சில்லுகள் உள்ளன. இவை சிறிய சரிவிலும் உறுண்டோடும் தன்மையைக் கொண்டது.

எங்கும் தற்காலிகமாக நிறுத்தும் தேவை ஏற்பட்டாலும், அதில் உள்ள Lockகுடன் கூடிய Brakeகை அழுத்தி விடவேண்டும்.

இவை நிற்க, பல பெண்கள் தற்போது அழகிற்காக குதி உயர்ந்த பாதணிகளை பரவலாக அணிந்து வருகின்றனர். நடைமுறையில் இந்த பாதணிகளை அணிந்து அவர்கள் படும் பாடு செல்லிமாளாது.

சில தரைகளில் நடக்க தடுமாறுவதும், கால் மடங்கி சுழுக்கு ஏற்படுவதும்,  டொக்… டொக்… என்று அனைவரின்  கவனத்தை  சிதறடித்து  முகச்சுளிப்பை  ஏற்படுத்துவதும்  நாம் அப்பப்ப காணக்கூடியதாகவே இருக்கின்றது. பத்தாததுக்கு அவர்களுக்கு காலில் ஏற்படும் வலிவேறு தொடர்கதையாகின்றது.

சரி… இந்த Strollerகளுக்கும், High Keels பாதணிகளுக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கின்றீர்கள்?

அவுஸ்திரேலியாவில் மெல்போன் நகரில் ஒரு இரயில் வண்டி நிலையத்தில் ஒரு தாய் தன் குழந்தையை Strollerல் எடுத்துவந்து இரயில் ஓடும் தளத்தில் அதனை நிறுத்திவிட்டு, brake போடாமல் விட…. அது மெதுவாக உறுண்டு இரயில் தண்டவாளத்தை நோக்கி நகர…. Strollerஐ பிடிக்க அந்தத் தாய் முயல…. அவர் அணிந்திருந்த High Keels பாதணி அதற்கு இடையூறாக…. அந்த தாயால் உறுண்டோடும் தன் குழந்தையை பிடிக்கமுடியாமல் போக…. அதேகணமே இரயிலும் வர…..

இதற்கு மேல் என்னத்தை எழுதுவது…? கிழே உள்ள வீடியோவை  நீங்களே பாருங்கள்!

நேயர் S.Puni அவர்களே நீங்கள் அர்த்தமுள்ள இந்து மதம் – MP3 ஒலியில்  கேட்ட கேள்விக்கு, இந்த பகுதி உங்கள் கேள்விக்கான பதில்.

நேயர் ‘JooJoo’ எவ்வாறு MP3 கோப்புகளை  சேமிப்பது என்  வைரமுத்துவின் கவிதைகள் MP3 வடிவில் என்னும் பதிவில் மறுமொழி இட்டிருந்தார்.

உங்களுக்கும் மற்றய நேயர்களுக்கும் இந்த கேள்வி பயனுள்ளதாக இருக்கும்  (தெரிந்த புலிகளுக்கு இல்லை)

www.barthee.com அல்லது www.tamilnavigation.net மூலம் வருபவர்கள் திரையின் இடது பக்கத்தில் -  அருகே உள்ளவாறு  ஒரு பெயர்ப் பலகை சுற்றுவதைப் பார்ப்பீர்கள். அதனை கிளிக் பண்ணுவதன் மூலம், அல்லது இங்கு அந்த பலகையை கிளிக் பண்ணுவதன் மூலம் - பல MP3 பாடல் தளங்களுக்கு செல்வதற்கும், அதனை எவ்வாறு சேமிக்கல்லாம் என்பது பற்றியும் மிகவு இலகுவாக எழுதப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நேயரே.

ZINK  -(Zero Ink) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மையற்ற நவீன தொழில் நுட்பத்துடன் அச்சியந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சாதாரண Printerகளைப் போல் அடிக்கடி ink மாற்றவேண்டிய தேவையே இல்லை. Inkகே இல்லாத தொழில் நுட்பத்துடன் இயங்குகின்றது இந்த Printer.

இதன்மூலம் எம் புகைப்பட கருவிமூலம் படங்களை நேரடியாக Print போட்டுக் கொள்ளலாம்.

இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்ட கிறிஸ்டலுடன் சேர்ந்த அச்சுத்தாழ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் விசேட அம்சம் என்னவென்றால் முக்கியமான அரிய புகைப்படங்களை பல காலத்துக்கு அழியாமல் வைத்திருக்க உதவும். கைக்கடக்கமானது எங்கும் இலகுவாக எடுத்துச்செல்லலாம்.

மேலும் விபரம் அறிய http://www.zink.com/

கனவில் தோன்றிய காட்சிகளை புகைப்படமாக பதிவுசெய்யும் தொழில்நுட்பம் – ஜப்பானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு.

ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் மனதை வாசித்தல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் திட்ட ஒழுங்கமைப்புக்கு ஏற்ப ஒப்பீடு செய்து புகைப்படமாக மாற்றும் வல்லமை கொண்டதாகும்.

எனினும், தற்போது கறுப்புவெள்ளை புகைப்பட பிரதிமையாக காட்சிப்படுத்தப்படும் இந்தப் புகைப்படங்கள் தொடர்பான துல்லியத் தன்மையை மேம்படுத்த, மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அட வெச்சிட்டான்யா ஆப்பு!

சிம்ரன், சினேகா, தமணா என்று கனவு கண்டு கொண்டிருந்தவர்களுக்கு இனி விடிஞ்சதும் விடியாததுமாய்  தலையில் இடிதான்!

 

 

தற்போதய காலகட்டத்தில் நம் குழந்தைகழுக்கு  தமிழ் கற்றுக் கொடுப்பதென்றால் மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கின்றது.

தமிழ் Class களுக்கு சென்றாலும், பின்னர் வீட்டில் இருந்து   Computerல் அவற்றை சொல்லிக்கொடுக்கும் போது பெற்றோருக்கும் இலகுவாக இருக்கும், குழந்தைகளுக்கும் ஆர்வமாக இருக்கும்.

இது சம்பந்தமாக  மேற்கொண்ட ஒரு ஆய்வில்  ஆரம்பகட்டமாக சில குழந்தைகளை உற்படுத்தி Computerல் இவற்றை கற்றுக்கொடுத்தும்  மற்றும் சாதாரண முறைகளில்  கற்பிப்பது  போல் கற்றுக் கொடுத்தும், பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கையில்  குழந்தைகள்  Computerல்  கற்பதில் ஆர்வமாக இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.

சபைக் கூச்சமின்மை, சக குழந்தைகளுடன் பழகுதல்,  தன் சமூகத்துடன்  ஈடுபாடு என்பன இந்த Computerல் மட்டும் கற்பதனால்  கிடைக்காது   போகும்  என்ற  விடயத்தையும்  கருத்தில்   கொள்ள வேண்டும். 

கணணியில் கற்கும் முறை என்பது,  தம் குழந்தைகளை தமிழ் வகுப்புகளுக்கு விடமுடியாமல் இருக்கும் பெற்றோருக்கும், தமிழ் வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளின் மேலும் மேம்பட்ட அறிவுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதோ கீழே உள்ள படத்தினூடக உங்கள் மழழைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள், தமிழை வளருங்கள்!

எம் அடுத்த சந்ததியினருக்கு தமிழை கற்பிக்கும் தார்மீக பொறுப்பு எங்களுக்கே!

கனடாவில் இன்று பெரும்பாலான பள்ளிகள் ஆரம்பம். (குவல்வ் நகரத்தில் மட்டும் கடந்த 1ம் திகதி ஆரம்பித்தது ஏன் என்பது புதிர்தான்!)

இந்த பள்ளி ஆரம்பமாமும் காலங்களில் மாணவர்கள் தமது விடுமுறைகளைப் பற்றியும் எங்கு சென்றோம், என்ன செய்தோம் என சக மாணவர்களிடம் சொல்லி மகிழ்வார்கள். சிலர் தம் தோழர்களை கவர்வதுக்கு என்றே ஆய்த்தமாக செல்வார்கள்.

அப்படி நீங்களும் உங்கள் நண்பர்களையும் கவர வேண்டுமா?

இதோ ஒரு விடயம்! இதை உங்கள் நண்பர்களுக்கு மட்டும் இல்லாமல் உங்கள் ஆசிரியரையும் அசத்துங்கள்.

எமது கணக்குப் பாடத்தில் என்னென்ன விந்தைகள் இருக்கு என்று ஒரு சிறு உதாரனம்…

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

ஆச்சரியமாக இருக்கின்றதா?

கூடவே கீழே உள்ளதையும் பாருங்கள்:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

Now, take a look at this…

101%

From a strictly mathematical viewpoint:

What Equals 100%?
What does it mean to give MORE than 100%?

Ever wonder about those people who say they are giving more than 100%?

We have all been in situations where someone wants you to
GIVE OVER 100%.

How about ACHIEVING 101%?

What equals 100% in life?

Here’s a little mathematical formula that might help
answer these questions:

If:

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is represented as:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.

If:

H-A-R-D-W-O- R- K

8+1+18+4+23+ 15+18+11 = 98%

And:

K-N-O-W-L-E- D-G-E

11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%

But:

A-T-T-I-T-U- D-E

1+20+20+9+20+ 21+4+5 = 100%

THEN, look how far the love of God will take you:

L-O-V-E-O-F- G-O-D

12+15+22+5+15+ 6+7+15+4 = 101%

Therefore, one can conclude with mathematical certainty that:

While Hard Work and Knowledge will get you close, and Attitude will
get you there, It’s the Love of God that will put you over the top!

It’s up to you if you share this with your friends & loved ones just
the way I did..

Have a nice day & God bless!!

திருடர்கள் ஜாக்கிரதை, நாய்கள் ஜாக்கிரதை என்பது போல் இது என்ன மாம்பழம் ஜாக்கிரதை?

தற்போதைய மாம்பழ சீசனில் எல்லோருமே மாம்பழத்தை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். கனிகளிளே மாங்கனி ஒரு தேன் கனிதான். தினசரி சாப்பிட்டாலும் திகட்டாத கனி.

Torontoவில் இருக்கும் நேயர் ஒருவருக்கு montrealலில் இருந்து இன்னுமொரு நேயர், ‘montreal மாம்பழம் சுவை கூடியது’ என அனுப்பி வைப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் மாம்பழத்து மகிமையை!

இப்படிப்பட்ட மாங்கனியிலும் ஒரு பிரச்சனை!

மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து மாம்பழம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம், சுவாசப்பிரச்சனை, தலைவலி, வயிற்றுப் பொருமல் என்பன வந்துள்ளது.

தொடர்ந்து மாம்பழம் சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும் என சாதாரணமாக இருந்து விடுவார்கள். ஆனால் இதுவல்ல காரணம்.

இந்த கல்சியம் காபைட்டை சிறு துண்டுகளாக உடைத்து பொட்டலம் கட்டி மாம்பழ பெட்டிகளின் ஓரமாய் வைத்து விடுவார்கள்

இந்த கல்சியம் காபைட்டை சிறு துண்டுகளாக உடைத்து பொட்டலம் கட்டி மாம்பழ பெட்டிகளின் ஓரமாய் வைத்து விடுவார்கள்

வியாபாரிகள் மாம்பழங்களை பழுக்க வைக்க கல்சியம் கார்பைடு என்னும் இரசாயண பொருளை போட்டு பழுக்க வைக்கின்றனர். இந்த கல்சியம் கார்பைடு CaC2  என விஞ்ஞான குறியீட்டைக்  கொண்ட உடலுக்கு கேடுவிளைவிக்கும்  இந்த பொருள்  வெல்டிங் செய்ய உபயோகிக்கப்படும்  ஒரு தடை செய்யப்பட்ட  இரசாயணம்.

CaC2 + 2 H2O → C2H2 + Ca(OH)2  என்னும் இரசாயண நிகழ்வை நாம் பள்ளிநாட்களில் திரு.செல்வரெத்தினம் ஆசிரியர் அவர்கள் திரும்பத்திரும்ப சொல்லித்தந்தது ஞாபகத்திற்கு வருகின்றது (அவர் எங்கிருக்கின்ராரோ? தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்)

இதிலிருந்து  வெளிவரும் அசெட்டிலின் என்னும்  வாயு  காய்கள்  மேல்  பரவி, தோலை பழுக்கவைக்கும். இதனால் நல்ல பொன் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே வாயூறும் வர்ணத்தில் காட்சியை கொடுக்கும். மொத்தமாக லாறிகளில் ஏற்றும் போதுகூட ஓரமாய் இந்த பொட்டலங்களை போட்டு விடுவவர்கள்.

இதேபோல் எத்திரல் என்னும் இன்னொரு இரசாயணத்தை தண்ணீரில் கரைத்து காய்களை அதனுள் முக்கி எடுத்தால் எல்லா காய்களும் ஒரே சீராக பழுக்கும்.  விற்பனனக்கு ஏதுவாக இருக்கும்.

எனவே கூடியவரை காயாக வாங்கி, வீட்டிலே பழுக்க வைப்பதுதான் சிறந்தது.

ஞாபகம் வருதா…? கட்டிலுக்கடியில் இருட்டில் சாக்குவிரித்து, வைக்கோல் போட்டு பழுக்கவைத்து … தினமும் பழுத்துவிட்டதா? என கட்டிலுக்கு அடியில் குனிந்து குனிந்து பார்த்தது ஞாபகம் இருக்கா?

 

 

அடுத்த பக்கம் »