வல்வையில் பிறந்தவரும் தமிழ்நாடு திருச்சியில் வசித்து வந்தவருமாகிய அருளம்பலம் சந்திரலிங்கம் அவர்கள் 02.10.2009 திங்கட்கிழமை அன்று காலமானார்.
![]() மலர்வு : 25. 01 .1953 — உதிர்வு : 2 . 11 . 2009 அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் பூரணலட்சுமி(சின்னக்கிளி) தம்பதியினரின் கனிஷ்டபுத்திரனும், சந்திரசேகரம் தவமணிதேவி(தவம்) தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுகிர்தாவின் அன்புக்கணவரும், கிமாலினி(லண்டன்), சுதர்சன்(கனடா), ஜெயமாலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சுந்தரலிங்கம்(இலங்கை), ராசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற அன்னை கஸ்தூரிபாய், ஈஸ்வரலிங்கம்(கனடா), கதிர்காமலிங்கம்(இலங்கை), வனஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பாலச்சந்திரன், இளங்குமரன், யோகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும், சஞ்சய், ரசானி, சுஜித்தா, ரக்சனா, ரோசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர்சுதர்சன் – கனடா +16476687746 கிமாலினி – பிரித்தானியா +442086822188 ஜெயமாலினி – பிரித்தானியா +442082863055 இராசலிங்கம் – கனடா +14167470495 ஈஸ்வரலிங்கம் – கனடா +15145741342 வனஜா – கனடா +15148927337 |
இரங்கல்/மரணம்
நவம்பர் 3, 2009
அக்டோபர் 18, 2009
Dr.சிவப்பிரகாசம் சிதம்பரநாதன் அவர்கள் காலமானார்
Posted by barthee under இரங்கல்/மரணம்Leave a Comment
Dr.சிவப்பிரகாசம் சிதம்பரநாதன்

தோற்றம் 18.12.1932 மறைவு 16.12.2009
வல்வை சிவன்கோயிலடியைப் பிறப்பிடமாகவும் மூதூர், பொத்துவில், வாழைச்சேனை ஆகிய இடங்களில் வைத்திய அதிகாரியாகக் கடமை யாற்றி ஓய்வுபெற்றவரும், கனடாவில் வாழ்ந்தவருமான ச.சிவப்பிரகாசம் சிதம்பரநாதன் அவர்கள் 16- 10- 2009 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், நாகபூஷணம் ஆகியோரின் புதல்வரும், காலஞ் சென்ற சட்டத்தரணி வேலுப்பிள்ளை மற்றும் பர்வதாவர்த்தினி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மருமகனும், பத்மலோஜினி சிதம்பரநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை – வல்வை சிவகுருவித்தி யாசாலை) அவர்களின் அன்புக் கணவரும், பத்மநாதன் (ஆinளைவசல ழக சுநஎநரெந), உமா, நளாயினி, ராதிகா (சுழலயட டீயமெ) ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமறைச்செல்வி, நகுலசிகாமணி, தங்கவேல், சிவகந்தராசா துரைரெத்தினம் (சுழலயட டீயமெ) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சந்துரு, சௌமியன் மற்றும் யாதவன், சிவகாமி, சரண்யா, பாரதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிப் பிள்ளை, ஞானமூர்த்தி, பொன்னம்மா, கமலாபாய், மற்றும் சிவானந்தன் (ஓய்வுபெற்ற தபாலதிபர்), சந்திராபாய் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உருத்திரசிகாமணி, கமலலோஜனி, சங்கரசிகாமணி, சுந்தரசிகாமணி, புவனலோஜனி, பரமசிகாமணி, இந்திரசிகாமணி, ராஜசிகாமணி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9மணிவரை
4164 Sheppard Avenue East இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு திங்கள் காலை 8 மணி முதல் 10 மணிவரை அதே மண்டபத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று Mount Plesant Crematorium இல் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: பத்மநாதன்: 416 -261 -5419, 416 -939 -1232
சிவா 416 -476 -5419
செப்டம்பர் 28, 2009
அருமைச்சந்திரலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவாஞ்சலி!
Posted by barthee under இரங்கல்/மரணம்Leave a Comment

![]()

தோற்றம் 26.11.1947 மறைவு 26.10.2001
(28.09.2009 ல் 8வது திவசம்)
நினைவில் நின்று கனவில் கலந்து
உயிர் மூச்சினில் நிறைந்த நீங்கள் இன்று
நிஜத்தினில் இல்லை.
நினைவுகளுடன் உங்கள் பிரிவால் தவிக்கும்
மனைவி, மக்கள்
செப்டம்பர் 22, 2009

எழுதியவர் திரு.ச.ச.முத்து
![]()

அரிமாஸ்டர் காலமாகிவிட்டார். கூடுதலான தொலைபேசி அழைப்புகள் மரணச் செய்தியையே காவிவருவதைப் போலவே போனசனிக்கிழமை அவரின் மரணமும் வந்தது.
அறுபத்தி ஓராவது வயதில் மாரடைப்பில் காலமான அவர் கடைசி காலங்களில் எப்படி இருந்திருப்பார்?
எங்களுக்கு இன்னமும் அரிமாஸ்டர் எங்களுடைய 9ம் வகுப்புக்கு வகுப்பாசிரியராகவும் விஞ்ஞான ஆசிரியராகவும் அறிமுகமான(1974ம்ஆண்டு) அந்தநாள்தான் நினைவில் நிற்குது.
அதற்குப் பின்னர் இரண்டு வருடங்கள் எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரின் கல்லூரியுள்ளும் கல்லூரிக்கு வெளியேயுமான எல்லா அசைவுகளிலும் அரிமாஸ்டர் பெரும் பங்குகொண்டிருந்தார்.
அரிமாஸ்டர் எங்கள் வகுப்புக்கு வந்த பொழுது ஈழத் தமிழினத்தின் வரலாற்றை இன்னொரு போராட்ட பரிமாணத்துக்கு கொண்டுபோக அந்த 1974, 1975ம் ஆண்டுகள் முனைந்து நின்ற நேரமது.
அவர்பரீட்சைக்கு கற்பிக்கும் சம்பிரதாய ஆசிரியரின் வேலையுடன் அப்போது வடக்கு கிழக்கில் மேலெழுந்து வந்து கொண்டிருந்த தமிழீழ தாயகக் கோட்பாட்டின் நியாயத் தன்மைகள் மற்றும் மிதவாதத் தலைமைகள் இயல்பாகவே இயற்கையாகவே செயலிழந்துபோகும் அன்றைய போக்குகள் பற்றியெல்லாம் எங்களுடன் அந்த வகுப்பறைக்குள் உரையாடியது இப்போதும் நினைவுகூரத் தக்கது.
அவருடைய துறையான ‘விஞ்ஞானம் கற்பித்தல்’ என்ற வரையறைக்குள் அவர் தன்னுடைய முழு ஆளுமையையும் எங்கள் வகுப்பின்மீது அக்கறையுடன் செலுத்தினார்.
எங்கள் வகுப்புக்கு பிரம்பில்லாமல் வந்துபோகும் ஒரே ஆசிரியராக அவர் இருந்திருக்கிறார்.
அரிமாஸ்டர் மிகவும் விருப்புடனேயே தன்னுடைய ஆசிரிய வேலையை முழுஈடுபாட்டுடன் செய்துவந்தவர். அவர் படித்து வளர்ந்த சிதம்பராக் கல்லூரியிலேயே ஆசிரியராக இடம் கிடைத்ததும் அவரின் முழு ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
அறிவுஊட்டுதல் ஆற்றல்வளர்த்தல் போன்ற இரு தளங்களிலும் அவரின் கரிசனையும் செயல்பாடும் முழுதாக இருந்தது.
அரிமாஸ்டர் நிறைய சொல்லித்தந்தார்.தன்னால் முடிந்த வரையிலும் அதற்கு அப்பாலும் மாணவர்களை வெற்றியாளர்களாக உருவாக்க முனைந்த அந்த நல்லாசிரியருக்கு எங்களின் நன்றியறிதலே நல்ல அஞ்சலிகளாகும்.

அவரின் இழப்பால் பெரும்துயருடன் இருக்கும் அவரின் மனைவி மகள் மற்றும் உறவினர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த ஆறுதல்கள்.
எங்களின் மாணவப்பருவத்தையும் அந்த அற்புதமான சிதம்பராக் கல்லூரியையும் நினைக்கும் போதெல்லாம் அரிமாஸ்டரின் நினைவும் அதனுடன் கட்டாயம் எம் நெஞ்சுள் எழும்…!
நன்றியுடன்
ச.ச.முத்து
செப்டம்பர் 21, 2009

தோற்றம் 12.12.1948 மறைவு 19.09.2009
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் திரு. இரத்தினசிகாமணி சச்சிதானந்தம் (அரி மாஸ்டர்) அவர்கள் செப்டம்பர் மாதம் 19ம் திகதி அன்று சனிக்கிழமை திருச்சியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் – ராஜலட்சுமி ஆகியோரின் மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – பாக்கியலட்சுமி ஆகியோரின் மருமகனும், ராஜலட்சுமியின் கணவரும், ரெளத்ரியின் தந்தையும், விமலனின் மாமனாரும், காலம்சென்ற தேவசிகாமணி, வடிவுடையம்மா (இந்தியா), புத்திரசிகாமணி (புத்திங் – இந்தியா) குணஈஸ்வரி (கனடா), சுகுமார் (கனடா) ஆகியோரின் சகோதரும்.
நிர்மலாதேவி (கொழும்பு), குகநாதன் (இந்தியா), பிரேமச்சந்திரன் (கண்ணன் – கனடா), ஷோபா (இந்தியா), தங்கத்திரவியம் (சாந்தி – கனடா), வள்ளிநாயகி (கிண்ணியம்மா – இந்தியா), நித்தியானந்தவேல், மகாலட்சுமி (இலங்கை), பாலசுப்பிரமணியம் (பாலி – லண்டன்), சதானந்தவேல் (அப்பி – ஜேர்மனி), சண்முகநாதன் (இலங்கை), நவலட்சுமி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
Kannan & Guneswarie – கனடா 1-416-944-3677
Sukumar கனடா 1-416-757-7666
Kuganathan- இந்தியா 91-984-043-0052
செப்டம்பர் 13, 2009

பிறப்பு : 19 06 1930 இறப்பு : 13 09 2009
வல்வையை பிறப்பிடமாகவும் இந்தியாவில் திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வரெத்தினம் அவர்கள் 13.09.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை பார்வதம் தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்ற வடிவேலு சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுவீப் பொன்னுத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முத்துலட்சுமியின்(இன்பருட்டி) சகோதரியும்,
செல்வமலர்(இந்தியா), வசந்தமலர்(டென்மார்க்), நிர்மலாதேவி(இந்தியா), சாந்தகுமாரி(இந்தியா), யோகேந்திரன்(இந்தியா), காலஞ்சென்ற சந்திரகுமாரி, சிவகுமார்(UK ), பாலகுமார்(UK ), செல்வகுமாரி(நோர்வே), ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற அழகுசுந்தரம், செல்வக்கதிரமலை(டென்மார்க்), இலட்சுமிகாந்தன்(இந்தியா), சூரியலிங்கம்(இந்தியா), வரலட்சுமி(இந்தியா), காலஞ்சென்ற அருட்சிவம், சுபோஜினி(UK ), ஜெயவாணி(UK ), கருணாகரன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற சுதாகரன், காலஞ்சென்ற ரஜனி, மாலினி, பிரபாகரன், உமாகரன், தவச்செல்வம், ரூபறாணி, சத்தியப்பிரியா, காலஞ்சென்ற வான்மதி, சந்திரமதி, பிறேமலதா, காலஞ்சென்ற ராஜ்மோகன், ராதிகா, பிரகாஷ், ரமேஷ், நிஷா, மயூரன், கமலதாசன், சந்திரதாசன், ஜீவிதா, அசோகதாசன், கஜந்தன், ப்ரீத்தா, தினேஷ்குமார், சதீஷ்குமார், திலீபன், லகஷன், விதுஷன், சந்தோஷ், சாருகன், சரண், ஜெயகாந், ஜெயதீபன் ஆகியோரின் பேத்தியும்,
ஓவியா,நித்தியா, இனியா, சினேகா, தூயவன், பிரித்திகா, மதுமிதா, சயன், கீர்த்தன், ரிதன், கிஷோக், மணிகண்டன், சந்தியா, விஜயபாஸ்கர், பிருந்தவன், துஷிதா, சஞ்சயன், சைரா, சரிஸ், தருண், குறிஞ்சிகன், ஆருகன், நிலானி, சஞ்ஜீவன், ஆரியன், ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14.09.2009 திங்கட்கிழமை அன்று திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
யோகேந்திரன் – இந்தியா
தொலைபேசி: +914312455558
சிவகுமார் – பிரித்தானியா
தொலைபேசி: +442476726843
பாலகுமார் – பிரித்தானியா
தொலைபேசி: +442081492487
செப்டம்பர் 13, 2009

பிறப்பு : 25 -10-1948 — இறப்பு : 12- 09-2009
வல்வையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செந்தில்மணி என அழைக்கப்படும், பகவதியம்மா சத்தியமூர்த்தி அவர்கள் 12.09.2009 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், முன்னாள் அமுதா ஹோட்டல் உரிமையாளர் திரு.சந்தியமூர்த்தியின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவரான ஸ்ரீஸ்கந்தராஜா மல்லிகைக்கண்டு அவர்களின் மூத்தமகளும், காலஞ்சென்ற பேரம்பலம் தங்கரத்தினம் அவர்களின் அன்புமருமகளும்,
ஜெகநாதன், மேனகா ஆகியோரின் அன்புத்தாயாரும், மஞ்சுவின் அன்புமாமியாரும், டிலக்சனின் அன்புப்பேத்தியாரும்,
யோகராசா, ஆனந்தராசா, தவராசா, காலஞ்சென்ற துரைராசா, திருமதி லட்சுமிதேவி முருகையா அவர்களின் அன்புச்சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அருண்
+447825133095
செப்டம்பர் 12, 2009
சந்திரகாந்தி அம்மாள் சண்முகசுந்தரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி
Posted by barthee under இரங்கல்/மரணம்Leave a Comment


கீழே முன்னர் பதிவேற்றப்பட்ட அன்னாரின் மரண அறிவித்தலை பார்வையிடலாம்
ஆகஸ்ட் 22, 2009
![]()

![]()
தாயின் மடியில் 01.02.1922 இறைவன் தாளில் 19.08.2009
வல்வை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் பசுபதி (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற பதிவாளர்) அவர்கள் 19.08.2009 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் இராசரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சபாரத்தினம் செல்வப்பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்
காலஞ்சென்ற அன்னலெட்சுமியின் அன்புக்கணவரும், சிவப்பிரகாசம் (முன்னாள் இலங்கை மின்சாரசபை பொறியியல் உதவியாளர்), ஜெயப்பிரகாசம் ஆகியோரின் அன்புத் தந்தையும்
சுதாதேவி, ராஜகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்ற நாகமுத்து, குமாரசாமி, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், மகமாயிதேவி, ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
பிரசாத்-ரேகா, வித்யா-பிரேம்குமார், வசந்தன் ஆகியோரின் அன்பு பேரனும்
பிரணவி, ராகவ், சஞ்ஜித் ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வல்வை ஊறணி மயானத்தில் 20.08.2009 அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சிவப்பிரகாசம் +1 905 970 0242
ஜெயப்பிரகாசம் +1 905 306 0897

ஆகஸ்ட் 21, 2009

தோற்றம் 09.01.1939 மறைவு 21.08.2009
வல்வையை பிறப்பிடமாகவும், ஹெந்தள வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரநாதன் புஸ்பவதனா அவர்கள் 21.08.2009 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேல்பிள்ளை மகமாசியம்மா ஆகியோரின் புதல்வியும், காலஞ்சென்ற பண்டிதர் வைத்திலிங்கம் இலட்சுமிகாந்தம் ஆகியோரின் மருமகளும், சங்கரநாதனின்(Railway headguard, Rtd) மனைவியும், சிவநேசன்(முகுந்தன்), கலைநேசன்(அகிலன்), கலைவாணி, யாழினி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னார், இராமரட்ணம்(சுபாஸ் – டென்மார்க்), விஜயசந்திரன்(ஜெயம் – கனடா), ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியும், இளங்கோ, இளவேணி, பிரதீபா, கோமிதா ஆகியோரின அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 21.08.2009 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணிக்கு வத்தளை மகிந்தமலர்ச்சாலையில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
முகுந்தன் – கொழும்பு +94 114945847
சுபாஸ் – டென்மார்க் +45 54857634
ஜெயம் – கனடா +1 9056730158















