வாழ்த்துக்கள்



தைப்பொங்கல் தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
 
 பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.


பொங்க வைக்கும் முறை
பொங்கல் நாளன்று புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

பிற மாநிலங்களில் பொங்கல்
இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.
 

கிருஜாந்தினி கேதீஸ்வரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் கனடா ஒரு திருப்புமுனை !

 இங்கிருக்கும் தழிழர்களின் வளர்ச்சி அளப்பரியது. தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பெருமை மிக்க நாடுகளிலே முன்னனியில் இருப்பது கனடா தான்.

 

செருப்புக்கூட இல்லாதிருந்தவர்கள் – சொகுசு கார்களில் !
 
பாயில் படுத்துறங்கியவர்கள்  – பங்களாவில் !
 
ஆரம்ப பள்ளியே அறியாதவர் – அசரடிக்கின்றனர் ஆங்கிலத்தில் !
 
காகம் என்று களித்து விடப்பட்டவர்கள் – காதல் ரோமியோ ஜூலியட்டுக்கள் !

இப்படிப்பட்ட அபார வளர்ச்சிக்கு உதவிய கனடாவை - கனடாவில் வாழும் ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும்.

உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்து, உல்லாசமாக வாழும் நிலமைக்கு வாழ்வை வடிவமைத்துத் தந்த கனடாவிற்கு இன்று பிறந்தநாள் !

கனடாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை…

பொருள் தேடுதல், செல்வம் தேடுதல் என எம் தந்தையர் எல்லாம் எம்மை நல்லநிலமைக்கு கொண்டுவர எம்மைவிட்டு கொஞ்சம் தள்ளியே இருப்பது போல் தோன்றினாலும், அந்த தந்தையரின் எண்ணத்தில் இருந்து எந்த பிள்ளையும் தள்ளியே இருந்ததில்லை.

1997ம் ஆண்டு நான் கப்பலில் வேலைசெய்துகொண்டிருந்த போது எமது கப்பல் ஒரு புயலினுள் சிக்கி அல்லோல கல்லோலப்பட்டது. எம் Captain அவசர நிலலயை பிரகணப்படுத்த – அனைவரையும் Life Jacketஐ அணிந்துகொண்டு அவரவர் குலதெய்வங்களை எல்லாம் வணங்கிக்கொண்டு நின்றகின்றோம்.

ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருதரம் நான் weather Report எடுத்து Captain னிடம் கொடுக்கும் போதும் What happend Marconi? என்று பதட்டத்துடன் கேட்ட அத்தனை மாலுமிகளும் இன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றனர். 

( மார்க்கோணி என்பது Radio Officerஐ கப்பலில் கூப்பிடும் இன்னும் ஒரு பெயர்)

ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டுக்காரர்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது – அது தந்தையர் என்னும் ஒற்றுமை தான்!

அப்போது ஒரு மாலுமி ” நான் சாவதுக்கு பயப்படவிலை – என் பிள்ளைகள் அனாதையாகி விடுங்களே என்றுதான் …. ” என்று கூறி மேற்கொண்டு பேசமுடியாமல் நா தளுதளுத்து கண்களில் நீர் முட்ட நிற்பதைப்பார்த்த எம் கப்டன்,  அந்த மாலுமியை கட்டி அணைத்து ” எமக்கு ஒன்றும் நடக்காது, நாம் எல்லாரும் எங்களின் பிள்ளைகளைப் பார்ப்போம்” என்று கூறி அவனும் கண்கலங்கினான்.

 இதனைப்பார்த்த மற்றய மாலுமிகளும் கண்ணீர் விட, திடீரென கப்டன் ” FUXXXXX சூராவளியே எங்கள் கப்பலை விட்டு போ அங்காலே” என்று ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை கொண்டு கத்தவும், பின்னர் மாலுமிகள் அனைவரும் கப்டனைப்போல் திரும்பவும் கத்தினர்….

அங்கே அனைவரும் கண்ணீர் விடது சாவதற்கு பயந்து அல்ல ….

மாலுமிகள் என்பதை மறந்து வீராப்புக்கொண்டு சூறாவளியையே திட்டியது, சூறாவளியை விட தாம் பலசாலிகள் என்பது அல்ல….

எல்லாம் தங்கள் குழந்தைகளுக்காகத்தான் என்பதை சொல்லத்தேவையில்லை.

இது போல் இன்னும் எத்தனை எத்தனை தந்தையர் தம் வாழ்வில் வெளியே சொல்லமுடியாத வேதனைகளையும், சோதனைகளையும் தாங்கி தம் பிள்ளைகளுக்காக வாழ்கின்றனர் தெரியுமா?

“தாயிற்சிறந்தோர் கோயிலும் இல்லை” என்று ஓர் அறிஞன் கூறிச்சிசென்றார்… அந்த கோயிலிலேயே இருக்கும் தெய்வங்கள் தான் இந்த தந்தையர் என்பதை நான் இங்கு ஆணித்தரமாக கூறுவேன்!

 தந்தையர் தினம் என்று மட்டும் காத்திருக்காமல், இந்த தெய்வங்களை அப்பப்ப சந்தோசமாக வைத்திருப்பது எம் அனைவரின் கடமையும் ஆகும்!

 

 

நோர்வேயில் வசிக்கும்

சிவநடேசன்(கட்டி) நீலவேணி தம்பதிகளின் புதல்வன்

செல்வ நடேசனுக்கு இன்று பிறந்தநாள்.

இவரை அப்பா, அம்மா, சகோதரன் அசோக், சகோதரிகள் அமுதா, ராதா,

மச்சான்மார் ஹரன், பிரேம்குமார் மற்றும்

உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.

நல்லோர்கள் உனை பாராட்ட வேண்டும்

நலமாக

நீ நூறு ஆண்டு காலம் வாழவேண்டும்

திரு பிரேம்குமார் திருமதி மதிவவதனா தம்பதிகளின்

செல்வப்புதல்வி செல்வி.தாரணி

இன்று தனது பிறந்தநாளை Torontoவில் உள்ள

தனது இலலத்தில் கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா பிறேம்குமார், அம்மா மதிவதனா,

அன்பு அண்ணா அனுஜன் மற்றும்

அப்பாச்சி, அம்மாச்சி, சித்தப்பாமார், சித்திமார்,

 மாமாமார், மாமிமார் அகியோர் அனைவரும்

பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென

அன்புடன் வாழ்த்துகின்றனர்.

Bramptonல் வசிக்கும் திரு.குணாளன் திருமதி துளசிகா

தம்பதிகளின் செல்வப்புதல்வன்

செல்வன். கிரிதரனுக்கு

இன்று 4வது பிறந்ததினம்

இவரை அன்பு அப்பா குணாளன், அன்பு அம்மா துளசிகா

அன்புத தங்கை தாமரை

மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும்

பல் கலையும் கற்று பல்லாண்டு

வாழ்க வழ்க வென வாழ்த்துகின்றனர்!

Torontoவில் வசிக்கும் திரு.பகிரதன் திருமதி ஜெயா(சசி)

தம்பதிகளின் செல்வப்புதல்வன்

செல்வன். அச்சுதனுக்கு இன்று 7வது இனிய பிறந்தநாள்.

இவரை அப்பா பகிரதன், அம்மா ஜெயா

அக்கா அர்ச்சனா மற்றும் உற்றார் உரவினர் அனைவரும்

அச்சுதனை வாழ்க வாழ்கவென் வாழ்த்துகின்றனர்! 

இன்று பிறந்தநாளை காணும் தாரணி, கிரிதரன் மற்றும் அச்சுதன் ஆகியோருக்கா இந்ந இனிய பாடல்!

 

உலகின் மறுபக்கத்தில் வாழும் என் அன்னை திருமதி வேதநாயகிக்காக இந்த அன்னையர் தினப்பதிவு!

கருவிலே உருவான காலம் முதல் என்னன காதலித்து, எனக்கு உருவமும் உணர்வும் தந்து இவ் உலகிலே என்னை பெற்றெடுத்து…

விருப்போடு பாலூட்டி – தாலாட்டி, தெருவினிலே புழுதி பிரட்டிவந்தாலும் அருவருப்பின்றி எனை அணைத்து அமுதூட்டி சீராட்டி எனை வளர்த்த தாயே !

நீ அறியாத கல்வியெல்லாம் நான் கற்க வேண்டுமென்று கல்வியின் பயனை உரைத்த பாரதியே…

வாலிபத்தின் வாயிலுக்கு நான்வந்த வேளையிலும் படிப்பித்தேன் என்று எனக்கு விலையேதும் வைக்காமல் நானாக துணையைத் தேட வரமளித்த தாயே !

எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள் கடந்து என்னை கரைசேர்த்த அன்புக்கலமே

உன்போன்ற அன்னையருக்கு இவ் உலகு வாழும் காலமெல்லாம் அன்னனயர் தினமே !!!

 

 

 

வல்வை தீருவிலைச் சேர்ந்த

பிரதீபன் (பிரபு) யசோதை தம்பதிகளின்

தவப்புதல்வன் “அபினாஷ்” இன் தொட்டிலிடும் விழாவை

27.04.2008 அன்று 11.00 மணிக்கு

‘விமிகா மண்டபத்தில்’(JANE & fINCH)

 வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்கள்

என்பதை அன்புடன் திரிவித்துக் கொள்கிறார்கள்.

பிரபு : 416 712 1134,   416 847 9814.

Vimika Banquet Hall
1959 Finch Avenue West Downsview
Ontario M3N 2V3

Map ற்கு இங்கு கிளிக் பண்ணவும்

இந்த நாட்டில் பங்கெடுக்கும் கனேடிய தமிழ் மக்களை நினைவுபடுத்தும் இச்சந்தர்ப்பத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சக கனடா நாட்டுக் குடிமகன் என்ற வகையில், பொதுவான கலாச்சாரம், கருத்துக்கள், சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதில் நாங்கள் பெருமைப்படுகின்றோம்.

நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஆலயங்களுக்குச் சென்று நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் வரவேண்டும் என பிரார்த்தியுங்கள்.
வருகிற ஆண்டு சமாதானமும், நம்பிப்கையும் சுபீட்சமும் நிலவ கனடா அரசாங்கத்தின் சார்பில், பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அடுத்த பக்கம் »