Dr.சிவப்பிரகாசம் சிதம்பரநாதன்

sitham2

தோற்றம் 18.12.1932                                        மறைவு 16.12.2009

வல்வை சிவன்கோயிலடியைப் பிறப்பிடமாகவும் மூதூர், பொத்துவில், வாழைச்சேனை ஆகிய இடங்களில் வைத்திய அதிகாரியாகக் கடமை யாற்றி ஓய்வுபெற்றவரும், கனடாவில் வாழ்ந்தவருமான ச.சிவப்பிரகாசம் சிதம்பரநாதன் அவர்கள் 16- 10- 2009 வெள்ளிக்கிழமை காலமானார்.

 அன்னார் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், நாகபூஷணம் ஆகியோரின் புதல்வரும், காலஞ் சென்ற  சட்டத்தரணி வேலுப்பிள்ளை மற்றும் பர்வதாவர்த்தினி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மருமகனும், பத்மலோஜினி சிதம்பரநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை – வல்வை சிவகுருவித்தி யாசாலை) அவர்களின் அன்புக் கணவரும், பத்மநாதன் (ஆinளைவசல ழக சுநஎநரெந), உமா, நளாயினி, ராதிகா (சுழலயட டீயமெ) ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமறைச்செல்வி, நகுலசிகாமணி, தங்கவேல், சிவகந்தராசா துரைரெத்தினம் (சுழலயட டீயமெ) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சந்துரு, சௌமியன் மற்றும் யாதவன், சிவகாமி, சரண்யா, பாரதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
   
 காலஞ்சென்றவர்களான லட்சுமிப் பிள்ளை, ஞானமூர்த்தி, பொன்னம்மா, கமலாபாய், மற்றும் சிவானந்தன் (ஓய்வுபெற்ற தபாலதிபர்), சந்திராபாய் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

  உருத்திரசிகாமணி, கமலலோஜனி, சங்கரசிகாமணி, சுந்தரசிகாமணி, புவனலோஜனி, பரமசிகாமணி, இந்திரசிகாமணி, ராஜசிகாமணி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

 அன்னாரின் பூதவுடல் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9மணிவரை

4164 Sheppard Avenue East இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு திங்கள் காலை 8 மணி முதல் 10 மணிவரை அதே மண்டபத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று Mount Plesant Crematorium இல் தகனம் செய்யப்படும்.

 இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: பத்மநாதன்: 416 -261 -5419, 416 -939 -1232

சிவா  416 -476 -5419


View Larger Map

தற்போது மேலை நாடுகளிலும், ஏன் இந்தியா – இலங்கை போன்ற நாடுகளிலும் குழந்தைகளை எளிதாக எடுத்துச்செல்ல இந்த Strollers என்னும் தள்ளு வண்டியை உபயோகிப்பது சகஜம்.

எளிதாக உருட்டிச்செல்லும் இந்த Strollersகளினால் அதே எளிதாக ஆபத்துக்கள் வருவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது.

சரியான முறைகளில் அதனை உபயோகிக்காவிடின் அதனால் பெரும் அனர்த்தங்கள் தான் நிகழும்.  காரணம், இதற்கு இலகுவாக உருட்ட 4 அல்லது 6 சில்லுகள் உள்ளன. இவை சிறிய சரிவிலும் உறுண்டோடும் தன்மையைக் கொண்டது.

எங்கும் தற்காலிகமாக நிறுத்தும் தேவை ஏற்பட்டாலும், அதில் உள்ள Lockகுடன் கூடிய Brakeகை அழுத்தி விடவேண்டும்.

இவை நிற்க, பல பெண்கள் தற்போது அழகிற்காக குதி உயர்ந்த பாதணிகளை பரவலாக அணிந்து வருகின்றனர். நடைமுறையில் இந்த பாதணிகளை அணிந்து அவர்கள் படும் பாடு செல்லிமாளாது.

சில தரைகளில் நடக்க தடுமாறுவதும், கால் மடங்கி சுழுக்கு ஏற்படுவதும்,  டொக்… டொக்… என்று அனைவரின்  கவனத்தை  சிதறடித்து  முகச்சுளிப்பை  ஏற்படுத்துவதும்  நாம் அப்பப்ப காணக்கூடியதாகவே இருக்கின்றது. பத்தாததுக்கு அவர்களுக்கு காலில் ஏற்படும் வலிவேறு தொடர்கதையாகின்றது.

சரி… இந்த Strollerகளுக்கும், High Keels பாதணிகளுக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கின்றீர்கள்?

அவுஸ்திரேலியாவில் மெல்போன் நகரில் ஒரு இரயில் வண்டி நிலையத்தில் ஒரு தாய் தன் குழந்தையை Strollerல் எடுத்துவந்து இரயில் ஓடும் தளத்தில் அதனை நிறுத்திவிட்டு, brake போடாமல் விட…. அது மெதுவாக உறுண்டு இரயில் தண்டவாளத்தை நோக்கி நகர…. Strollerஐ பிடிக்க அந்தத் தாய் முயல…. அவர் அணிந்திருந்த High Keels பாதணி அதற்கு இடையூறாக…. அந்த தாயால் உறுண்டோடும் தன் குழந்தையை பிடிக்கமுடியாமல் போக…. அதேகணமே இரயிலும் வர…..

இதற்கு மேல் என்னத்தை எழுதுவது…? கிழே உள்ள வீடியோவை  நீங்களே பாருங்கள்!

Street View என்னும் கூகிளின் ஒரு சேவை தற்போது கனடாவிலும் காலடிவைத்துவிட்டது. கனடா முழுவதும் இந்த சேவை தற்போது இல்லாவிடினும் கூடிய விரைவில் இது விரிவுபடுத்தப்படும்.

Toronto பெரும்பாகம், Kitchener, Waterloo, Montreal, Ottawa,Calgary, Vancouver போன்ற நகரங்களில் இன்றைய தேதியில் இந்த சேவை உண்டு.

கூகிள் வரைபடத்தில், படத்தை பெரிது-சிறிதாக்க உபயோகிக்கும் Toolன் மேல்ப்புறத்தில் ஒரு மனிதர் தோன்றுவார். இவர் மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் அந்த வரைபடத்தில் Street View சேவை உள்ளது என்று பொருள்.

இந்த மனிதரை கிளிக் பண்ணியபடி பிடித்துக்கொண்டு வெளியே இழுத்தால் வரைபடத்தில் நீலநிறத்தில்  விதிகளின் வர்ணம் மாறும்.  நீல நிறத்தில் மாறிய வீதிகளில் அந்த மஞ்சள் மனிதரை இழுத்துச் சென்று எமக்கு தேவையான இடத்தில் விட்டால் அந்த வீதியை நாம் நேரடியாக பார்ப்பதுபோல் பார்க்கல்லாம்.

இதுசம்பந்தமாக முன்னர் இட்ட பதிவு

Torontoவிற்கும் வரும் Google Street View

நம் வீட்டில் எப்போது பிரியாணி செய்தாலும் நமது இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் செய்வது போல் இருப்பது இல்லை என்ற குறை இருந்து வந்தது.  அதனால் என் இஸ்லாமிய  தோழியிடம் அவர்களின்  பிரியாணி  செய்முறையை கேட்டு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. அந்த பிரியாணி செய்முறை உங்களுக்காகவும்  என் எழுதியுள்ளார் கல்ப்பனா.

 

தேவையான பொருட்கள்

  • அரிசி              -   1 கிலோ
  • மட்டன்           -   1 கிலோ
  • இஞ்சி             -  100 கிராம்
  • பூண்டு            -   100 கிராம்
  • தக்காளி        -  1/4 கிலோ
  • வொங்காயம்        -  1/4 கிலோ
  • பச்சைமிளகாய்   -  10
  • பட்டை               -   10
  • லவங்கம்         -   10
  • ஏலக்காய்         -   10
  • மிளகாய் தூள்     -   1 1/2 ஸ்பூன்
  • மல்லித்தூள்        -   2 ஸ்பூன்
  • தயிர்                  -   250 கிராம்
  • எலும்மிச்சை       – 1
  • புதினா                      -    1/2     கட்டு
  • கொத்தமல்லி      -  1/2     கட்டு
  • எண்ணெய்        -   50 கிராம் (தேவைக்கு)
  • நெய்              -     50 கிராம் (தேவைக்கு)
  • உப்பு              -    தேவைக்கு
  • கேசரிப்பவுடர்      -  தேவைக்கு

அரைக்க வேண்டியவை

இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.

பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.   (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்     

(நன்றி: கல்பனா)

Twinkle Twinkle little star… என்னும் அரிவரிப் பாடலை நாம் எல்லோரும் அறிவோம். அந்தப்பாடலை ‘ரேவதி சங்கரன்’ என்னும் தமிழ் நடிகைஒருவர் நகைச்சுவையாக பாடியுள்ளார். அந்தவீடியோவை ஏற்கனவே பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் பார்த்து மகிழுங்கள்!

(இந்த வீடியோவை அனுப்பிய நேயர் Kirujanthini Keatheeswaranக்கு நன்றி)

 

ஜப்பானியப் பெண்கள் உடுத்தும் ஆடைகளைப் பொருத்தவரை, பேஷனுக்கு பெயரெடுத்த பாரீஸ் நகரைப் பின்னுக்கு தள்ளிவிடும் போலிருக்கிறது டோக்கியோ. ஜப்பான் தன்னுடையப் பாரம்பரியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நழுவி, நவீனத்துவத்தைப் போற்ற துவங்கிவிட்டது.

பெண்களுக்குப் பிடித்த ஜீன்ஸ் பேண்டில் கூட கிளாமரை கொண்டுவந்துவிட்டார்கள் அங்கே.

ஜீன்ஸில், பிகினி ஜீன்ஸ் (லோ கட்) என்கிற நவீன வடிவத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜீன்ஸில் துவங்கிய இந்த ஆடை புரட்சி சகல துணிவகைகளிலும் வரத் துவங்கிவிட்டது. இதன் விலை சுமார் 100$ தான்.

இந்த பிகினி ஜீன்ஸை சாண்ட்ரா தனிமுரா என்ற பெண்தான் டிசைன் செய்திருக்கிறார். பாம்பின் கால் பாம்பறியுமா? அல்லது பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்று சொல்வதா?

பல நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய  நூலின் ஒலி வடிவம் அனைத்தையும் MP3 வடிவில் இங்கு பதிவேற்றப் பட்டுள்ளது. கேட்டு பயன் பெறுங்கள். 

இதனை டவுன்லோட் செய்து உங்கள் MP3 Playerல் கேட்டும் மகிழலாம்.

2009ஆம் ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரைடர், ஜாக் சோஸ்டாக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Australian-born Elizabeth Blackburn, British-born Jack Szostak and Carol Greider

மரபியல் விஞ்ஞானிகளான அவர்கள் மூவரும் செல் பிரிவின் போது குரோமோசோம்கள் எப்படி அழியாமல் தொடர்ந்து டிஎன்ஏ மூலக்கூறுகளை கொண்டு செல்கிறது என்பதை கண்டுபிடித்ததன் காரணத்துக்காக அவர்களுக்கு இந்த விருது விஞ்ஞானிகள் ஒரே சமயத்தில் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

60 வயதான எலிசபெத் பிளாக்பர்ன், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் உயிரியியல் பிரிவில் பேராசிரியராக இருக்கிறார். 48 வயதான கரோல் கிரைடர், பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியியல் பேராசிரியராக உள்ளார்.

லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் ஜாக் சோஸ்டாக் தற்போது பாஸ்டனில் உள்ள மாசாசூட்ஸ் பொது மருத்துவமனையில் மரபியல் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

மேலும், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கப்படும்

நேயர் S.Puni அவர்களே நீங்கள் அர்த்தமுள்ள இந்து மதம் – MP3 ஒலியில்  கேட்ட கேள்விக்கு, இந்த பகுதி உங்கள் கேள்விக்கான பதில்.

நேயர் ‘JooJoo’ எவ்வாறு MP3 கோப்புகளை  சேமிப்பது என்  வைரமுத்துவின் கவிதைகள் MP3 வடிவில் என்னும் பதிவில் மறுமொழி இட்டிருந்தார்.

உங்களுக்கும் மற்றய நேயர்களுக்கும் இந்த கேள்வி பயனுள்ளதாக இருக்கும்  (தெரிந்த புலிகளுக்கு இல்லை)

www.barthee.com அல்லது www.tamilnavigation.net மூலம் வருபவர்கள் திரையின் இடது பக்கத்தில் -  அருகே உள்ளவாறு  ஒரு பெயர்ப் பலகை சுற்றுவதைப் பார்ப்பீர்கள். அதனை கிளிக் பண்ணுவதன் மூலம், அல்லது இங்கு அந்த பலகையை கிளிக் பண்ணுவதன் மூலம் - பல MP3 பாடல் தளங்களுக்கு செல்வதற்கும், அதனை எவ்வாறு சேமிக்கல்லாம் என்பது பற்றியும் மிகவு இலகுவாக எழுதப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நேயரே.

« முந்தைய பக்கம்அடுத்த பக்கம் »