Advertisements

பலருக்கும் இவ்விடயம் இரண்டு வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்,

 1. சிலவேளைகளில் நாம் எம் வாகனங்களை park பண்ணுவதற்கு மிக சிரமப்படுவோம். இடம் கிடைப்பதும், அப்படி கிடைத்தாலும் அதிக பணம் செலுத்துவதுமாகவே இருக்கும்.

உங்கள் தொலைபேசியில் உள்ள Rover Parking APP மூலம் இலகுவாக, மிகவும் குறைந்த செலவில் இனி பாக் பண்ணலாம்.

roverparking-1

2. உங்களிடம் park பண்ண இடம் இருக்கின்றதா? இனி சும்மா இருந்த இடதை தேவையானவர்களுக்கு park பண்ண விட்டு, மாதம் $250வரை மேலதிக வருமானமாக ஈட்டலாம்.

நீங்கள் செய்யவேண்டியது Rover Parking என்னும் APP இனை உங்கள் Phoneல் download செய்து அதில் register பண்ணவேண்டியதுதான்.

நீங்கள் உங்கள் parking spaceஐ யாருக்காவது கொடுத்தால், park பண்ணுபவருடன் உங்களுக்கு எந்த கதையும் இல்லை. நீங்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்பதும் இல்லை. காலையில் புறப்பட்டு, மாலைதான் வீடு வருவீர்கள் என்றால் – சும்மா இருக்கும் உங்கள் வீட்டு பாக்கிங்கை Rover Parking APP சந்தர்ப்பம் கிடைக்கும்போது உபயோகப்படுத்தி – அதற்குரிய பணத்தை உங்கள் வங்கியில் செலுத்திவிடும். யாருடைய வாகனம், எவ்வளவு பணம் போன்ற மிகுதியினை Rover Parking APP பார்த்துக்கொள்ளும். உங்களுக்கு எந்த தலைவலியும் இல்லை.

3000_per_yr_infographic

இபோதுதான் ஆரம்பித்துள்ள இந்த சேவை, நாளடைவில் விஸ்திகரிக்கப்படும். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது உபயோகத்தில் வந்துள்ளது.

 

அம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது.

உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother’s Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.

ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.

தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ocy2016-082

fb_img_1475354568142.jpg

மில்லியன் பேருக்கு மேல் பார்க்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு குறும்படம் இது.
இது சொல்வது ஒரு காதல் கதை. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் காதல் கதைகள் எப்படி சாத்தியமில்லாது போகலாம் எனச் சொல்லும் காதல் கதை.

ஒருவருடன் இன்னுமொருவருவர் இலகுவாக தொடர்பைப் பேணுவதற்கும், புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதற்கும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக், டுவிட்டர், இஸ்டாகிராம், வட்ஸ் அப், வைபர், கூகுள் மேப், விக்கிபீடியா என எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. இவற்றின் மூலம் அதிகமானோரை நண்பர்களாகக் கொண்டிருப்பதாகவும் உங்கள் தேவைகள் இலகுவாக பூர்த்தி செய்யப்படுவதாகவும் கர்வம் கொள்ளாதீர்கள். மனதைத் தொட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு இருக்கும் வேர்ச்சுவல் நண்பர்கள் அதிகமா, நிஜ நண்பர்கள் அதிகமா? பேஸ்புக்கில் ஒரே நேரத்துடன் நூறு நண்பர்களுடன் பேசும் போதும், உங்களை வாட்டும் தனிமை எது? 5 நிமிடம் கொண்ட இக்குறும்படத்தை முடியும் வரை அமைதியாக அமர்ந்து பாருங்கள். முடிவில் அடுத்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என ஒரு ஆலோசனையையும் வழங்கிச் செல்கிறது இக்குறும்படம்.

இதனை இயக்கிய Gary Turk ற்கு ஒரு சல்யூட். எத்தனையோ பேர் சொல்லத் தயங்கும் உண்மையை அழகாகச் சொல்லிச் செல்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இவ்வீடியோவையும் யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றின் மூலம் தான் பிரபல்யமடையச் செய்யும் சூழ்நிலை தவிர்க்கமுடியாதுள்ளது. இது தான் காலமுரண்!!