தேவையானப் பொருட்கள்
மைதா மாவு -5கிளாஸ்
நெய் -50கிராம்
கொத்துக்கறி–500கிராம்
உருளைக்கிழங்கு -300கிராம்
கேரட் -இரண்டு
பச்சைபட்டாணி -ஒருகோப்பை
வெங்காயம் -ஒன்று
பச்சைமிளகாய் -இரண்டு
கரம்மசாலாதூள் -இரண்டுகரண்டி
இஞ்சி பூண்டு விழுது -இரண்டுகரண்டி
மஞ்சள்தூள் -ஒருடேபிள்ஸ்பூன்
உப்பு -ஒருகரண்டி
எண்ணெய் -அரைலிட்டர்

செய்முறை
உருளைக்கிழங்கு கேரட் பட்டாணியை நன்றாக வேகவிடவும்
வெங்காயத்தை வெட்டிக்கொள்ளவும் பச்சைமிளகாய் மல்லிதழையை பொடியாக நறுக்கவும்
நெய்யை சூடுபண்ணி மாவில் ஊற்றி நன்றாக பிசைந்து அரைகப் தண்ணீர் பிசைந்து சின்ன சின்ன உருண்டைபோட்டு அரைமணி நேரம் வைக்கவும்
வேகவைத்த காய்களை தோல் எடுத்து உருளைக்கிழங்கை உதிர்க்கவும் கேரட்டை பொடியாக நறுக்கவும்
ஒரு வாணலியில் கொத்தியகறியைப்போட்டு மசாலாதூள் உப்பு போட்டு வேகவிடவும் கறிவெந்ததும் அதனுடன் எல்லாதூள்களையும் போட்டு நன்கு பொரியவிடவும் அதில் வேகவைத்த காய்களைப்போட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கிவைக்கவும்
பின் ஒரு உருண்டையை எடுத்து மெல்லிய அப்பளமாக இட்டு அதில் ஒன்றரைகரண்டி மசாலாகலவையை எடுத்து அதில் வைத்து சுற்றிலும் தண்ணீர் தடவி முக்கோணமாக மடிக்கவும் இதே போல எல்லா உருண்டைகளையும் செய்துவைக்கவும்
ஒரு பெரிய வாண்லியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் சமோசாக்களைப்போட்டு இருபுறமும் சிவக்க விட்டு பொரித்து எடுக்கவும்