புதன், நவம்பர் 21st, 2007


இன்று ஹலோ தினம்! இமெயில், மொபைல் போன் என தகவல் தொடர்பு வசதிகள் பெருகி, உலகமே சுருங்கிவிட்டதால், இன்று ஒருவருக்கொருவர் சந்தித்து மனம் விட்டு பேசுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த குறையை போக்கத் தான் ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவ.,21ம் தேதி ஹலோ தினமாக கொண்டாடப்படுகிறது. 1973ம் ஆண்டு எகிப்து, இஸ்ரேலிடையே நிகழ்ந்த மோதல்களும், சமாதானமுமே ஹலோ தினம் உருவாக காரணமாக இருந்தது. இன்று 180 நாடுகள் ஹலோ தினம் கொண்டாடுகின்றன. இந்த ஹலோ தினத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் 10 பேரை சந்தித்து ஹலோ கூறினால் போதுமானது.தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் இருவர் பேசிக்கொள்ளும் போது தீர்வு கிடைக்கிறது. பெரிய சிக்கல்களுக்கும் சுமூகமான முடிவை எட்ட வழி பிறக்கிறது. இதன் மூலம் உலக அமைதிக்கு வழி கிடைக்கிறது.நம் இதயத்தில் உள்ள சுயநலமும், பயமும் அகன்று நம்பிக்கையும், இரக்கமும் உருவாகும் போது தான் அமைதி பிறக்கும் என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன். இவ்வாறு தனிநபர்களிடையே ஏற்படும் சமாதானம், உலக அமைதிக்கும் உதவுகிறது.நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் ஹலோ தினத்துக்கு பின்னணியில் உள்ள உன்னத நோக்கத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகில் அமைதி ஏற்படுத்துவதற்கு முதல் படியாக இரு இதயங்களுக்கிடையே சமாதானத்தை உருவாக்குவதே ஹலோ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்.

தனது சொந்த மகளையே அவளுடைய பதினைந்தாவது வயதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி என்பவர் திருமணம் செய்திருக்கிறார்.அந்த திருமணத்திற்கு அவர் சொன்ன காரணம் “கடவுளின் கட்டளை”. அல்லா சொல்லிவிட்டார் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ள அனுமதியும் வாங்கியிருக்கிறார் அவர்.

இந்த விஷயம் நடந்து ஐந்தாறு மாதங்களாகியிருக்கின்றன. இப்போது அந்தப் பெண் தன்னுடைய தந்தையால் தாயாகியிருக்கிறாள்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட கிராமத்தினர் கொதித்துப் போயிருக்கின்றனர். அந்த கோபம் கொலையாக மாறும் முன் காவல் துறையினர் அலியையும், அவர் மனைவியையும் காப்பாற்றியிருக்கின்றனர்.

இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து இவர்களை விடுதலை செய்து “நீதியை” நிலைநாட்டியிருக்கிறது நீதி மன்றம். குறைந்த பட்சம் ஒரு மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்துக்காகவேனும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது கிராமத்து மக்களின் கோரிக்கை.

கோபக் கிராமத்தினருக்குப் பயந்து கணவனும் மனைவியும் தலைமறைவாகியிருக்கின்றனர் இப்போது.

கடவுளுக்கு ஒரு விண்ணப்பம்: இப்படி தேவையற்ற திருமணங்களைச் செய்யச் சொல்லி உங்கள் பக்தர்களை வற்புறுத்தாதீர்கள்.

மனிதர்களுக்கு ஒரு விண்ணப்பம் : கடவுளிடம் எதையும் எழுத்து மூலம் வாங்கிக் கொண்டு செயல்படுங்கள். சட்டம் ஆதாரங்களை எதிர்பார்க்கும்.

பொதுவாக நாம் காலிஃப்ளவர் சமைக்கும்பொழுது பூவை சமைத்து விட்டு அதன் தண்டையும் , இலையையும் எடுத்து எறிவது வழக்கம். அந்த இலையையும், தண்டையும் உபயோகித்து இந்த சத்தான சூப்பைத் தயாரிக்கலாம் . குழந்தைகளுக்கும் , வயதானவர்களுக்கும் ஏற்றதாகும்.
தேவையான பொருட்கள்:
ஒரு பூவிலிருந்து நீக்கப்பட்ட இலைகளும் தண்டுப்பகுதியும்,
தக்காளி -1
உருளைக்கிழங்கு – 1(துருவிக் கொள்ளவும்),
வெங்காயம் – 1(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
பூண்டு – 3(அ) 4 பல்,
மிளகு – 7(அ) 8 (காரத்திற்கேற்ப) ,
ஜீரகம் – 1 தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப ,
மேலே தூவுவதற்கு – (கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர் எல்லாம் கலந்து 2(அ) 3 மேசைக்கரண்டி),
அரிசி கலந்த நீர் – 2 கப்
சர்க்கரை – 1 தேக்கரண்டி,
பால் – 50 ml (optional)

செய்முறை: காலி ஃப்ளவரின் சுற்றியுள்ள இலையையும், தண்டுப்பகுதியையும் நன்றாகக் கழுவிய பின்னர் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு குக்கர் பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய இலை,தண்டுப்பகுதியுடன் , அரிசி களைந்த நீர், நறுக்கிய தக்காளித் துண்டுகள், துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய பூண்டு துண்டுகள், நறுக்கிய வெங்காயம், மிளகு, ஜீரகம்,உப்பு, சர்க்கரை சேர்த்துத் தேவையான நீர் ஊற்றி , மேல் தட்டில் பொடியாக நறுக்கிய காய்கறித்துண்டுகளைச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். குக்கர் பாத்திரத்தில் வேக வைத்த காய்கறிகளின் நீரை ஒரு பாத்திரத்தில் வடித்து விட்டு காய்கறிகளை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வடிகட்டிய நீரையும் சேர்த்து சிறிது ஓடவிடவும். பரிமாறும் பொழுது இந்த சூப்பை நன்றாக சூடு பண்ணி கீழே இறக்கி பாலைக் கலந்து தனியாக வைத்திருக்கும் காய்கறித்துண்டுகளைத் தூவி கப்களில் ஊற்றிப் பரிமாறவும்.

சைனீஸ் சூப் போன்று விரும்புபவர்கள் இதனுடன் ஒரு தேக்கரண்டி வினிகர், ஒரு சிட்டிகை அஜினமோட்டோ சேர்த்துப் பரிமாறலாம்.. இந்த சத்தான சிக்கன சூப் நட்சத்திர ஹோட்டல் சூப்களை விடச் சுவையாக இருக்கும்.

– பிரேமா சுரேந்திரநாத்

நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான “wrist” என்பது தமிழில் “மணிக்கட்டு” என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.

நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது.

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும் கூறப்படுகிறது.

காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

[Egyptian shadow clock]

 மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது.

  [Early water clock]

கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்

[Su Sung water clock tower] 

கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (pendulum) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார்.

இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார்.

  • A.M.–Ante meridiem, from the Latin for “before noon”
  • P.M.– Post meridiem, from the Latin for “after noon”

இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன.

 

பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம்.

ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன. அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் 1920களில் குவாட்ஸ் கடிகாரம் வந்தது. குவாட்ஸ் என்பது ஒருவகை கிரிஸ்டல் (Crystal) இந்த குவாட்ஸ்ஸினூடாக மின்சாரத்தை செலுத்தும் போது அது சீராக துடிக்கும் (Osillates) இந்த துடிப்பை வைத்து கடிகாரத்தின் ஓட்டத்தை உண்டுபண்ணினார்கள். 

இன்றுகடிகாரங்கள் பைனரி வரை வந்துவிட்டது.

(வெற்றிக்கலை நூலிலிருந்து)

அபெல்லஸ் படைத்த ஓவியம் :

கிரேக்க நாட்டைச் சேர்ந்த அபெல்லஸ், எழில் தேவதையை ஓவியமாகத் தீட்டுமுன்னர் கிரீஸ் முழுவது பல வருடங்கள் சுற்றி அலைந்து அழகிய பெண்களை உற்றுக் கவனித்தானாம். அவர்களது எழில், நடை, உடை, பாவனை, சாயல், நளினம் இவற்றைக் கவனித்து, தான் கண்ட சிறப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து வீனஸ் தேவதைக்கு உருக்கொடுத்தானாம்!

நாகரீகமுள்ள கிரேக்கப் பெண்களின் பண்பாட்டின் வெளிப்பாடே அவன் படைத்த வீனஸ்ஓவியம் ஆயிற்று அழகுடன் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை விட்டு விட்டு அகஒளியை வளர்க்கும் வழியைப் பார்த்தாலே போதும். அதற்காக ஆடை அணிகலன்கள் வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. “ஆடைபாதி ஆள்பாதி” என்பது முதுமொழி. குண்டா, ஒல்லியா, உயரமா, குட்டையா, கறுப்பா, சிவப்பா, தன்னிடம் உள்ள சிறப்பு அம்சம் என்ன என்று இவற்றை எல்லாம் கவனித்து, உடையை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அணியத்தக்க ஆடை எது என்பதை நல்ல டெய்லரோ, அழகு நிலையப் பணியாளரோ சுலபமாகக் கூறிவிடுவர்.

நாசம் விளைவிக்கும் நச்சு குணங்கள் :

நல்ல குணங்களைக் கூட்டுவதோடு, தன்னிடமுள்ள எதிர்மறைக் குணங்களைப் பட்டியலிட்டு அவற்றைக் களையவும் வேண்டும். நாசம் விளைவிக்கும் நச்சுக்களாக விளங்கும் இவைகளைப் பட்டியலிட்டுப் பார்க்கலாமா?

பொய் புரட்டு செய்தல், நாணயமின்மை, பேராசை, வெறுப்பு, பொறாமை, கோபம், பயம், பழிவாங்கும் மனப்பான்மை, அடுத்தவரைக் குறை கூறுதல், கிசுகிசுக்களைப் பரப்புவது, தேவையற்ற அதிக உற்சாகம், நழுவும் மனப்பான்மை, எதையும் அளவுக்கு மீறி கூட்டி உரைத்தல், தன் தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தல், நான் என்ற அகம்பாவம், வறட்டுப் பிடிவாதம், சுயநலம்.உங்களின் நல்ல பண்புகளை உங்கள் நடத்தை மூலம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கணமும் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். இல்லத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், தெருவில் அண்டை அயலார், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், இவர்கள் அனைவரும் இடைவிடாது உங்களை எடைபோட்டுக் கொண்டே இருப்பதை மறக்க வேண்டாம்.
ஒவ்வொரு செய்கையும் ஒரு மனிதனின் நிழலின் நீட்டிப்பே. எமர்ஸன்

ராணிக்கு மூடப்பட்ட கதவு :

விக்டோரியா மகாராணிக்கும் அவரது கணவர் பிரின்ஸ் ஆல்பர்ட்டுக்கும் ஒருமுறை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராணியாரின் பேச்சினால் மனம் புண்பட்ட ஆல்பர்ட், தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். ஐந்து நிமிடம் கழித்து அறையைத் தட்டும் சத்தம் கேட்டது. “யார் அது?” வினவினார் ஆல்பர்ட். “நாந்தான் மகாராணி வந்திருக்கிறேன்” கதவு திறக்கப் படவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினார் விக்டோரியா. “நாந்தான் உங்கள் மனைவி விக்டோரியா வந்திருக்கிறேன்” உடனே கதவைத் திறந்தார் ஆல்பர்ட், சமாதானம் ஏற்பட்டது.

“நான்” என்ற அகம்பாவமும், பெண்மைக்கு ஒவ்வாத சொற்களும் இனிய ஆளுமைக்கு எதிரானவை.

வெப்ஸ்டரின் எளிமை :

வாஷிங்டன் நகரிலிருந்து ஒரு அரசியல்வாதி டேனியல் வெப்ஸ்டரைப் பார்க்க அவரின் இருப்பிடமான மார்ஷ்பீல்டு என்னும் இடத்திற்கு வந்தார். வழியிலே ஒரு நீரோடை. அதைத்தாண்ட அவரால் முடியவில்லை. அருகே கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஒரு விவசாயி வேலை செய்வதைப் பார்த்த அவர் “அப்பா, என்னை அக்கரை சேர்த்துவிடு. உனக்கு கொஞ்சம் மதுபானம் தருகிறேன்” என்றார். அந்த விவசாயி அரசியல்வாதியைத் தன் தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு அனயாசமாக அக்கரை வந்தார். வெகுமதியாகத் தரப்பட்ட மதுபானத்தையும் வாங்கவில்லை. வெப்ஸ்டரின் வீட்டையும் சுட்டிக் காட்டினார். சற்று நேரம் கழித்து வெப்ஸ்டர் வீட்டுக் கதவைத் தட்டியவுடன் கதவை திறந்து கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் “விருந்தாளி” திகைத்தார். கதவைத் திறந்தது வேறு யாருமில்லை, விவசாயியாக இருந்த வெப்ஸ்டர்தான்!

ஜெபர்சனின் பாடம் :

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜெபர்சன் ஒரு முறை தன் பேரனுடன் குதிரை சவாரி செய்யும்போது வழியிலே ஒரு நீக்ரோ அடிமை அவர்களைப் பார்த்தவுடன் தனது தொப்பியை மரியாதை நிமித்தம் எடுத்துத் தலைகுனிந்து வணங்கினான். ஜனாதிபதி உடனே பதில் மரியாதை தெரிவிக்கத் தன் தொப்பியை எடுத்தார். ஆனால் பேரனோ அந்த அடிமையை அலட்சியமாக நோக்கினான். ‘தாமஸ்’! என்று பேரனைக் கூப்பிட்ட ஜெபர்ஸன் “அந்த அடிமை உன்னைவிடச் சிறந்த கனவானாக இருக்க நீ அனுமதிக்கலாமா?” என்று கேட்டார். வெட்கிய பேரன் தன் தொப்பியை எடுத்து பதில் வணக்கம் கூறி தானும் ஒரு கனவானே என நிரூபித்தான். நல்ல பண்புகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

அரிஸ்டாட்டிலின் விளக்கம் :

அரிஸ்டாட்டில் கனவான் (‘GENTLEMAN’) என யாரைக் குறிப்பிடுகிறார் தெரியுமா?

“நல்லது கெட்டது எது வந்தபோதிலும் நடுநிலையில் பெருந்தன்மையுடன் நடப்பவனே கனவான். தன்னை உயர்த்தவோ, தாழ்த்தவோ அவன் அனுமதிப்பதில்லை. வெற்றியில் மகிழ்ச்சியோ, தோல்வியில் வருத்தமோ அவன் அடைவதில்லை. அபாயத்தை அவன் தேர்ந்தெடுப்பதுமில்லை. அணுகுவதுமில்லை. தன்னைப் பற்றித் தானாக பேசுவதுமில்லை. மற்றவரைப் பேச விடுவதுமில்லை. தன்னைமட்டும் புகழ வேண்டும், மற்றவரை இகழ வேண்டும்” என்று அவன் நினைப்பதில்லை.

ஒரு கனவான் கனவான்தான். இதற்கு மேல் எதற்கு விளக்கம்? ஆம், A GENTLEMAN IS A GENTLEMAN அவ்வளவுதான்.

ஒவ்வொருவரும் தன்னுடன் தனது ஆளுமையைச் சூழ்ந்து சுமந்து செல்கிறான். ஒரு சூழ்நிலையை உருவாக்கியவாறே இருக்கிறான். இதில் அவனது ஆளுமையின் நல்ல, கெட்ட குணங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நல்லதைப் பெருக்குங்கள், நச்சுகளை அகற்றுங்கள்.

உங்களின் சங்கேத மொழி என்ன?

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் மெக்ஸிகோவில் ஜெர்மன் அரசு ஒரு ஒற்றர் படையை அமைத்திருந்தது. ஒற்றர்கள், ரகசியமாகத் தங்கள் செய்திகளை பெர்லினுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சங்கேத மொழி (CODED MESSAGE) இருந்தது.

அமெரிக்க நிபுணர்களுக்கு அந்த சங்கேதமொழி ஒரு சவாலாக இருந்தது. தீவிரமான ஆராய்ச்சிக்குப் பின்னர் அந்த சங்கேத மொழிக்கு ஆதாரம் ஏதோ ஒரு அகராதி தான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

எந்த அகராதியாக இருக்கக்கூடும் அது? கடைசியாக அதை கண்டே பிடித்துவிட்டனர். அவர்கள் மேஜையின் மீது இருந்த அகராதிதான் அது! அது ஜெர்மனியின் ராணுவ ரகசியங்களை அமெரிக்காவிற்கு விளக்கிவிட்டது.

நான் விரும்பாத ஒரு மனிதனை இதுவரை நான் சந்திக்கவே இல்லை – யாரோ

நாம் நமது ஆளுமையை உயர்த்த நமக்குத் தடையாக இருக்கும் சங்கேத மொழியை உடைத்து சிக்கலை அவிழ்க்க வேண்டும். நாம் வெற்றி பெறாமல் இருக்க எந்த சங்கேத மொழியை நம்மை அறியாமல் அனுப்புகிறோம்? இதை அறிந்து தவறைத் திருத்தினால் சரியான செய்தியை அனுப்பினால் வெற்றிபெறுவது எளிது.

இன்னும் அதிகப்படுத்துங்கள் :

இரண்டே வார்த்தைகளில் நமது ஆளுமையை உயர்த்திவிடலாம் “இன்னும் அதிகப்படுத்துங்கள்” ஆம்! நல்லவற்றை “இன்னும் அதிகப்படுத்துங்கள்” நல்ல நண்பர்களை இன்னும் அதிகப்படுத்துங்கள். தீய குணங்களை ஒழிப்பதை இன்னும் அதிகப்படுத்துங்கள். இந்த ஒரே ஒரு உத்திமட்டும் போதும். உங்களுக்கு அளப்பரிய முன்னேற்றத்தைத் தர!

இன்றே ஆரம்பியுங்கள் :

ஒரு விளக்கு அதன் ஒளியின் தீவிரத்தைப் பொறுத்தே தனது பிரகாசத்தைத் தரும்!! அதுபோலவே ஒரு மனிதனின் மனோசக்தியே அவனது சூழ்நிலையில், வாழ்க்கையில் பிரகாசத்தைத் தரும். அவனது செல்வ நிலைக்கும் சேர்த்து! இந்த பிரகாசத்தை உயர்த்தி வெளிப்படுத்த இனிய ஆளுமை இன்றியமையாத தேவையாகும். இதை என்றிலிருந்து உயர்த்த ஆரம்பிப்பது? இன்றே! இப்பொழுதே! இக்கணமே!

உங்கள் குழந்தையிடம், மனைவியிடம் அல்லது கணவரிடம் இதை ஆரம்பிக்கலாம். அட நன்றாகச் சமைத்திருக்கிறாயே என்று மனைவியிடமோ அழகாகப் படிக்கிறாயே என்று குழந்தையிடமோ கூறினால் ஏற்படும் சூழ்நிலையே தனிதான்!

நல்ல ஒரு வழிகாட்டி :

இனிமையாக எப்படி மற்றவருடன் பழகுவது, அனைவரையும் வயப்படுத்துவது எப்படி என்பதைக் கற்று உணர நல்ல புத்தகம் ஒன்று இருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கானவகளுக்கு வழி காட்டிய இந்தப் புத்தகம் இன்று உங்களுக்கும் வழியைக் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறது.

டேல் கார்னிகி எழுதிய HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE என்ற புத்தகம் அது.

இனிமையான ஆளுமையை வெற்றி பெறத் துடிப்பவர் அடைய வேண்டிய நான்காவது குணாதிசயமாகும்.