திசெம்பர் 2007


 by Jayashree Govindarajan

இனிப்புகள் செய்ய ஆரம்பிக்கிற யாராவது இதை ஒருமுறையாவது செய்யாமல் இருந்திருப்பார்களா என்பது ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு பிரபலமான, சுலபமான ஒன்று. எந்தத் தவறும் நேர்ந்துவிடாது என்பதால் யாரும் தைரியமாகச் செய்யலாம்.
 
தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலப்பொடி

seven star cake

செய்முறை:

 • கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.
 • தேங்காயை அதன் தோல் சேர்ந்துவிடாமல் வெள்ளைப் பகுதியாக மட்டும் துருவி, 1 டேபிள்ஸ்பூன் பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு அடிகனமான வாணலியில், காய்ச்சி ஆறிய பாலில் கடலை மாவை கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.
 • அத்துடன் நெய், சர்க்கரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து நிதாமான சூட்டில் கிளற ஆரம்பிக்கவும்.
 • கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல், நுரைத்துக் கொண்டு வரும்போது ஏலப்பொடி தூவி, இறக்கவும். இந்தப் பதத்தில் கேக் மாதிரி மென்மையாக வரும்.
 • இன்னும் சிறிது நேரம் இழுத்துக் கிளறியும் இறக்கலாம். இந்தப் பதத்தில் பர்பி மாதிரி இறுக்கமாக வரும். ஆனால் தேங்காய் சேர்த்திருப்பதால் மைசூர்பாகு மாதிரி பாறையாகிவிடும் பயம் இதில் இல்லை. இதுவும் சாப்பிட மென்மையாகவே இருக்கும். சொல்லவருவது, தெரியாமல் பதம் தாண்டி இறக்கிவிட்டாலும் தவறாகிவிடாது. சுவையாகவே இருக்கும். 
 • ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் வேண்டிய வடிவில் வில்லைகள் போடலாம்.

* வாயில் போட்டதும் மைசூர் பாகா, தேங்காய் பர்பியா என்று நாக்கு ஒரு நொடி குழம்பும். குழம்பட்டும். ) ஆனால் இரண்டையும் விட இந்த ஸ்வீட் சுவையாக இருக்கும். புதிதாகச் செய்பவர்கள் இதிலிருந்து ஆரம்பித்தால் ஸ்வீட் செய்வதில் ஒரு தைரியம் வரும்.

 by Jayashree Govindarajan

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு

thakkaalikkai thuvaiyal chutney

செய்முறை:

 • தக்காளிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
 • அத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
 • வறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

* வறுத்த கலவையோடு ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் சட்னி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு திரும்பத் திரும்ப என்ன சட்னி என்று யோசிக்கவைக்கும். இது வீட்டில் இன்று ஹிட் ஆனது.

 by Jayashree Govindarajan

தேவையான பொருள்கள்:

தக்காளி – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 5, 6
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

thakkaali koottu

செய்முறை:

 • பயத்தம் பருப்பை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
 • தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர்விட்டு மூடி வேகவைக்கவும்.
 • முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுது, வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
 • கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

* நீரைக் குறைத்து கால் கப் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பதால் காரல் இருந்தால் மறைந்து சுவையும் மணமும் அதிகரிக்கும். நான் சேர்த்திருக்கிறேன்.

 by Jayashree Govindarajan

பெண்களுக்கு மல்லிகைப் பூவோடு ஏன் அல்வாவைப் பிடிக்கும் என்று முடிவெடுத்தார்கள், தெரியவில்லை. இது தமிழ் கலாசாரத்தில் (அதாங்க தமிழ் சினிமாவில்!) மட்டும் தானா அல்லது இந்தியாவுக்கே பொதுவானதா என்றும் தெரியவில்லை. ஆனால் தமிழில் பட்டை, நாமம் என்பதற்கெல்லாம் அர்த்தமே மாறிப்போனது போல் அல்வாவுக்கும் அர்த்தம் மாறிப்போனது தமிழில் மட்டும் தான், அது நிச்சயம். எப்படி இருந்தாலும் கோதுமை அல்வா இனிப்புகளில் ராணி என்றால் மிகை இல்லை. 

தேவையான பொருள்கள்:

சம்பா கோதுமை – 250 கிராம்

சர்க்கரை – 1 கிலோ

நெய் – 350 கிராம்

ஏலப்பொடி

முந்திரி

கேசரிப் பவுடர்

பால் – 1 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)

kothumai paal halwa 1

செய்முறை:

 • சம்பா கோதுமையை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து பால் எடுத்து அதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்.
 • அடுப்பில் அடிகனமான வாணலியில் சர்க்கரையை, கம்பிப் பதமாகப் பாகு வைக்கவும்.
 • பாகில் ஒரு டீஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.
 • இப்போது கோதுமைப் பாலின் தெளிவை இறுத்துவிட்டு, கெட்டிப் பாலை மட்டும் பாகில் விடவும்.
 • அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, கேசரிப் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
 • இப்போது சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் அல்வா அடிப்பிடிக்காமல் வேகமாகப் பந்து மாதிரி கிளம்பி சீக்கிரம் கெட்டியான பதத்திற்கு வரும். (சாறு சேர்க்காமலும் செய்யலாம்.)
 • கலவை கொதித்து கெட்டியாக வர ஆரம்பிக்கும்போது கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
 • இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
 • இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக் கொள்ளவும்.
 • ஆறாவது கப் வெந்நீரும், மிச்சமிருக்கும் நெய்யையும் சேர்த்த பின் வருவதே சரியான பதம். கிளறிக்கொண்டே இருந்தால் வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.
 • மேலே சீவிய முந்திரி அல்லது முழு முந்திரிப் பருப்பால் அலங்கரிக்கவும்.

kothumai paal halwa 2

* பொதுவாக அல்வாக்களுக்கு முந்திரியை விட வெள்ளரி விதைகளை வறுத்துச் சேர்ப்பதே சரியாகவும் சுவையாகவும் இருக்கும்.

* ஒருவேளை தவறுதலாக கலவை இறுகி, பாறை மாதிரி ஆகிவிட்டால், ஒரு தேங்காயை அரைத்துப் பாலெடுத்து, அதை அல்வாவில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அல்வா நெகிழ்ந்து சரியான பதத்திற்கு வந்துவிடும். சுவை மாறுபட்டாலும் பொருள் பாழாகாது.

* சம்பா கோதுமை ரவையிலும் இந்த அல்வாவைச் செய்யலாம்.

* சம்பா கோதுமை கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ரெடி மிக்ஸ் வாங்கியும் செய்யலாம். ரெடி மிக்ஸில் செய்தால் மொழுக்கென்று இருக்கும், நன்றாக இருக்காது என்பது தவறான அபிப்ராயம். அந்த பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் சும்மா 15 நிமிடங்கள் மட்டும் கிளறி இறக்காமல் பொறுமையாகச் செய்தால் ஓரளவு சுவையாக வரும்.

 • எந்தக் கம்பெனியாக இருந்தாலும், பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் பொருள்களைச் சேர்த்து அடுப்பில் வாணலியில் வைக்கவும்.
 • மேலே சொல்லியிருப்பது போல் ஒருமுறை கெட்டியானதும் இறக்கி விடாமல் கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
 • இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
 • இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து முடிக்கவும். 
 • இறுதியில் கெட்டியாகி, வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, உடனே இறக்கி விடாமல் மேலும் சில நிமிடங்கள் இழுத்துக் கிளறி, பின் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.

 by Jayashree Govindarajan

தேவையான பொருட்கள் :
மட்டன் – ½ கிலோ
பச்சைமிளகாய் – 6
தனியா – 3 தேக்கரண்டி
பொட்டுக் கடலை – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 4
தேங்காய் – ½ மூடி
பட்டை – சிறிதளவு
கிராம்பு – 2
சோம்பு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 1
இலை, பூ – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1. சின்ன வெங்காயம், தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. பச்சை மிளகாய், தனியா, பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

3. அடுப்பின் மீது அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் பட்டை இலை, கிராம்பு, பூ போட்டுத் தாளிக்கவும்.

4. அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

5. அரைத்த மசாலாவை அதில் போட்டுப் பச்சை வாசம் போகும் வரை வதக்கி அதில் மட்டனையும் உப்புப் போட்டு வதக்கவும்.

6. 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அது பாதியாக வற்றித் திரண்டு வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

தமிழ் பற்றி உலாவரும் சில உண்மைகள் நம்மை மனம் நிறைய வைக்கின்றது.

உலகின் மிக பழமையான நகரத்தின் பெயர் “ஊர்” (Ur) என்கின்றார்கள். இது பற்றிய குறிப்பு பைபிளிலும் உள்ளது. அட இது நம்ம தமிழ் வார்த்தையல்லவா?.

சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம். Singam+Ur=Singapore. உலகில் ஒரு நாட்டின் பெயரே தமிழில் இருக்கின்றது நமக்கு பெருமையல்லவா?.

யானையையே கொல்லும் பாம்பு – அதை ஆனை கொன்றான் எனலாம்- அது ஆனைகொண்டான் ஆகி- அப்படியே Anaconda ஆனது- திரைப்படமும் வந்தது.

அரிசி (Arici) Rice ஆனது
கட்டுமரக்காரன் Catamaran ஆனது
காசு Cash என ஆனது
சுருட்டு Cheroot ஆனது
குருந்தம் அல்லது குருவிந்தம் Corundum ஆனது
கயிறு Coir ஆனது
கறி Curry ஆனது
கிடங்கு Godown ஆனது
பச்சை இலை Perfume Patchouli ஆனது

முன்பு மயில்-ஐ தோகை என அழைத்தார்களாம்- இதில் தோகை எனும் வார்த்தை Tuki ஆகி பின் மயில் போல் சிறகு விரிக்கும் வான்கோழியை பார்த்து ஏமாந்து Turkey என்றார்கள்.

அது போல்
இஞ்சிவேரிலிருந்து Ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து Papaaya-வும்,
சக்கவிலிருந்து Jack-கும்,
தேக்குவிலிருந்து Teak-கும்,
கொய்யாவிலிருந்து Guava-வும்,
வெற்றிலயிலிருந்து Betel-லும் வந்தது.

அது போல
Vettri (வெற்றி) தான் Victory ஆனதோ?
Parisu (பரிசு) தான் Prize ஆனதோ?
Idhara (இதர) தான் Other ஆனதோ?
Sarkkarai (சர்க்கரை) தான் Sugar ஆனதோ?
Pathukavar (பாதுகாவலர்) தான் Father ஆனதோ?
Tharai (தரை) தான் Terra ஆனதோ?
Akkam (அக்கம்) தான் Aqua ஆனதோ?
Tholai (தொலை) தான் Tele ஆனதோ?

“காசுக்கு எட்டு” எனும் தமிழ் வார்த்தை Cashew nut ஆன கதை உங்களுக்குத் தெரியுமா?

இப்படி தமிழின் மகத்துவம் சொல்லித்தீராதவை.
என்ன, இலங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வரும் செய்திகள் தான் இப்போது நம்மை கவலையுற வைக்கின்றன.

நன்றி கேபிகே

அடுத்த பக்கம் »