தான் சாப்பிடாமல் ஏழைநாடுகள் பணக்கார நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் ஒரு சுவையான பருப்பு இது.இன்று உலக அளவில் இந்தியாவின் கேரளா ஏற்றுமதியில் நம்பர் ஒன்னாம்.

இதன் பெயர்காரணம்-கேஸிவ்நட்-பற்றி பேச்சு வந்த போது ஒரு சுவையான கதையொன்றை கேள்விபட்டேன்.அந்த பெயர்க்காரணம் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

அந்த காலத்தில் இந்த அண்டிப்பருப்பை நம் ஆட்கள் அழகாக வறுத்து உப்பிட்டு சூடாக “காசுக்கு எட்டு…காசுக்கு எட்டு”என கூவி விற்பனை செய்தார்களாம்.இதைக் கேட்ட நம்மூர் வந்த மேற்க்கத்தியர் “வாட் இஸ் இட் காஸ்க்கெட்” என வினவினராம்.சுவைத்துப்பார்த்துவிட்டு “ஓ காஸ்கெட் இஸ் நைஸ்” என்றனராம். அதுவே படிப்படியாக மருவி காஸிவ்நெட் ஆகி விட்டதாம்.கதை எப்படி இருக்கு?

ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்.யாருக்கு தெரியும்?.

முந்திரிப்பழத்தில் இருந்து பிரித்தெடுத்த முந்திரிக்கொட்டை

பின்னர் அதனை நெருப்பில் இட்டு சூடாக்கி அதன் கடினமான கோதை பிரித்தெடுப்பார்கள்

முந்திரிக்கொட்டையை சூடாக்க நெருப்புத்தான்வேண்டும் வேண்டும் என்று இல்லை…..

இதோ இன்னும் ஒரு வழியும் இருக்குது…….

‘பார்த்திபனுக்கு குறும்பு ஜாஸ்த்தி’  – என்று நீங்கள் சொல்வது கேட்கின்றது… … சினிமாவில மட்டும் பம்பரம் விடுவதையும், கயங்குண்டு விளையாடுவதையும், முட்டை பொரிப்பதையும் ரசிக்கின்றீர்கள்தானே?…

எவ்வவவவளவு பண்ணுறம், இதுகூடவா பண்ணமாட்டம்….?!?!!?

சரி இப்ப விசயத்துக்கு வருவோம்….

இது போல் மாங்காயிலிருந்து mango-வும்,
இஞ்சிவேரிலிருந்து ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து papaaya-வும்,
சக்கவிலிருந்து jack-கும்,
தேக்குவிலிருந்து teak-கும்,
கொய்யாவிலிருந்து guava-வும்,
வெற்றிலயிலிருந்து betel-லும் வந்திருக்கும் போலும்.