நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.

நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் பொரித்து போட்டு விடுமாம்.

 

உதாரணமாய் உங்கள் கணிணியின் சர்கியூட் போர்டு அந்த அசூர மின்காந்த அலைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் உருகிப்போகும்.

 

(To ignite an E-bomb, a starter current energizes the stator coil, creating a magnetic field. The explosion (A) expands the tube, short-circuiting the coil and compressing the magnetic field forward (B). The pulse is emitted (C) at high frequencies that defeat protective devices like Faraday Cages. )

இதில் ஹார்ட் டிஸ்க் எம்மாத்திரம். அதிலுள்ள அனைத்து டேட்டாவும் அழிபட்டு போகும். தொலைப்பேசிகள், கைபேசிகள், தொலைகாட்சிகள் எல்லாம் செயலிழந்துபோம். மின்சார வசதி துண்டிக்கப்பட்டு விடும். வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிடும். மொத்ததில் எலக்ட்ரானிக் சர்கியூட்கள் உள்ள அனைத்து சாதனங்களும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். நடை பிணமாக.

இத்தகைய E-bomb-களை பற்றி இன்னும் எந்த நாடும் அப்பட்டமாக பேச விட்டாலும் ஆளாளுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இந்தியாவில் IIT, Kharagpur இதில் மும்முரமாய் இருக்கின்றதாம்.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

எப்படி அண்டர் கிரவுண்ட் அதாவது பேஸ்மென்டில் நீங்கள் இருக்கும் போது அல்லது சில லிப்டில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைக்காதோ அது போல சிக்னல் கிடைக்காத இடத்தில் உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால் தப்பித்தீர்கள். இதனை Faraday cage அல்லது Faraday shield என்கின்றார்கள்.

இப்போதுதான் புரிகின்றது எதற்கு அநேக டேட்டா சென்டர்கள் தரையின்அடியில் அமைக்கபடுகின்றன வென்று.சில United States national security கட்டிடங்கள் இது மாதிரி ஃபாரடே பாதுகாப்புக்குள் கட்டப்பட்டுள்ளனவாம்.

வெறும் நானூறே டாலருக்கு இந்த E-bomb-களை தயாரிக்கலாமாம். நவ நாகரீக நகரொன்றை Time machine எதுவுமின்றி 200 ஆண்டுகளுக்குப் பின்தள்ளலாம் ஒரு சொடுக்கில்.

நல்லாருக்கு.வாழுக விஞ்ஞானம்.