இன்று இரவு 8-10 மணிவரை கனடாவில் மிகவும் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்தது.

வளர்பிறையாகி முழுநிலவாகி தேய்பிறையாகும் நிலா

சூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வரும் போது, அதன் நிழல் பூமியின் மீது விழும். அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைப்பது போல தோன்றுகிறது. இது சூரிய கிரகணம் ஆகும். அதுபோல சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனில் படாமல் மறைக்கப்படுகிறது. அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சந்திரகிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா ஒரு நிமிடம் ஓடும் இந்தப்படத்தில் பார்க்கல்லாம்

சந்திர கிரகணம் குறித்து காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் புராணக்கதையும் உண்டு. அது:சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்கநினைக்கிறார்.(விழுங்குகின்ரார்)

ஆனால் சந்திரன் பகவானை பிரார்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது எனகூறப்படுகிறது.

இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவர் அவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும் எனநம்பப்படுகிறது.

கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில்ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞான காரணம் கூறப்படுகிறது.

சந்திரகிரகணம் தோன்றும் விதமும் இடமும்.