பிப்ரவரி 2008


இப்போது எங்குபார்த்தாலும் RE-MIX பாடல்கள்தான்…

எங்கு ஆரம்பித்தது என்று தெரியவில்லை, இடையேவந்த சிவாஜி, அழகிய தமிழ் மகன், பில்லா வரையாகக்கொண்ட அனைத்து இந்தியப்படங்களிலும் RE-MIX பாடல் இப்போ பிரபலம்.

அட அது இல்லிங்க விசயம்…. நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என் ஒரு ஈழத்துப்பாடலுக்கான RE-MIX.

பாடலை பார்க்க இங்கு கிளிக்பண்ணுங்கள்,

 நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.

நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் பொரித்து போட்டு விடுமாம்.

 

உதாரணமாய் உங்கள் கணிணியின் சர்கியூட் போர்டு அந்த அசூர மின்காந்த அலைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் உருகிப்போகும்.

 

(To ignite an E-bomb, a starter current energizes the stator coil, creating a magnetic field. The explosion (A) expands the tube, short-circuiting the coil and compressing the magnetic field forward (B). The pulse is emitted (C) at high frequencies that defeat protective devices like Faraday Cages. )

இதில் ஹார்ட் டிஸ்க் எம்மாத்திரம். அதிலுள்ள அனைத்து டேட்டாவும் அழிபட்டு போகும். தொலைப்பேசிகள், கைபேசிகள், தொலைகாட்சிகள் எல்லாம் செயலிழந்துபோம். மின்சார வசதி துண்டிக்கப்பட்டு விடும். வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிடும். மொத்ததில் எலக்ட்ரானிக் சர்கியூட்கள் உள்ள அனைத்து சாதனங்களும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். நடை பிணமாக.

இத்தகைய E-bomb-களை பற்றி இன்னும் எந்த நாடும் அப்பட்டமாக பேச விட்டாலும் ஆளாளுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இந்தியாவில் IIT, Kharagpur இதில் மும்முரமாய் இருக்கின்றதாம்.

இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

எப்படி அண்டர் கிரவுண்ட் அதாவது பேஸ்மென்டில் நீங்கள் இருக்கும் போது அல்லது சில லிப்டில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைக்காதோ அது போல சிக்னல் கிடைக்காத இடத்தில் உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால் தப்பித்தீர்கள். இதனை Faraday cage அல்லது Faraday shield என்கின்றார்கள்.

இப்போதுதான் புரிகின்றது எதற்கு அநேக டேட்டா சென்டர்கள் தரையின்அடியில் அமைக்கபடுகின்றன வென்று.சில United States national security கட்டிடங்கள் இது மாதிரி ஃபாரடே பாதுகாப்புக்குள் கட்டப்பட்டுள்ளனவாம்.

வெறும் நானூறே டாலருக்கு இந்த E-bomb-களை தயாரிக்கலாமாம். நவ நாகரீக நகரொன்றை Time machine எதுவுமின்றி 200 ஆண்டுகளுக்குப் பின்தள்ளலாம் ஒரு சொடுக்கில்.

நல்லாருக்கு.வாழுக விஞ்ஞானம்.


காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி பதினான்காம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.

இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் ஆனந்தக் கூச்சலிட, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினர் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.


 சரி முதலில் காதலர் தினத்தின் வரலாற்றை பார்ப்போம்...

கிபி இருநூறாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார். மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோவையும் ஒருதரம் பாருங்களேன்.

இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் புனித வாலண்டைன் மிகவும் பிரசித்தம்.

இந்த ‘தினங்கள்’. அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர் தினம், மனைவியர் தினம், எதிர் வீட்டுக்காரன் தினம் (கொஞ்சநாளில் தமிழ் நெவிக்கேஷன் தினம் கொண்டாட இருக்கின்றேன் !??!)என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்காவிடில் அது சாவான பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.

முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் (அட் நீங்கள் தாங்க) தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும், பூங்கொத்துகளிலும், சாக்லேட் சாக்கெட்களிலும், வைர நகை வாங்குவதிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.

காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், ஏதேனும் அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

 

இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள், 36 மில்லியன் இதயவடிவிலான சாக்லெட் பெட்டிகள் என்பன அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்.

ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்.

தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும், பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்த்து அட்டைகள், பரிசுகள், பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?.

காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 365 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா ?

அட இதுக்கு என்னதான் மாற்றுவழி பார்த்திபா....? என நீங்கள் கேட்பது கேட்கிறது எனக்கு... இந்த பாட்டை கொஞ்சம் கூர்ந்து பாருங்க பல விஷயங்கள் நன்றாக புரியும்.

காதல் என்பது மைல் கல்லா பயணமா ? சிந்திப்போம். வர்த்தக வலையில் விழுந்து விடாமலும், சதிகாரர்களின் சதுரங்கத்தில் வெட்டுப்படாமலும் நம்மைக் காத்துக் கொள்வோம்.

சரி கொசிராக சில கவிதைகள்:...

‘உங்களுக்கு என்ன வேண்டும்’
என கொஞ்சலாய்
நீ கேட்பதே
போதுமானதாய் இருக்கிறது
என் காதலர் தினத்திற்கு !

நீ
என்னுடன் பேசிமுடித்து
புறப்பட்ட பின்
அருகில் வந்து
அமர்ந்து கொள்கின்றன
நீ
பேசிய வார்த்தைகளும்
நான்
பேச நினைத்த வார்த்தைகளும்

 

 

Theesam

Raaga

Tamilsongs

Lankamovie

Tamilmp3world

Thaalam

Tamilmp3city

Tamilchoice

Tamilbeat

Tamilmaha

Tminetwork

MurugeshMp3

MayuraNet

Tamilvibe

Tamilmasala

Dishant

rose4you

Sinhalasongs

TamilriverMp3

Vanninet

Tmzweb

Tamilspring

Goodindia

Thanus

oosai

Tamil4ever

Tamilstyle

Oldtamilmp3

Inimai

Mlanka

vakeesmp3

mp3.tamilgrounds

Tamiljothy

Luckytamil

mp3.lktamilan

Tamilmp3beat

 

வெப்பக்கத்தில் உள்ள MP3 பாடலை நேரடியாக MP3 playerல் சேமிக்க:-

1. பாடலின் linkன் மேல் மெளஸ்ஸை வைத்து ‘வல’ கிளிக் பண்ணவேண்டும்.
2. வரும் Boxன் உள் Save Target As… ஐ கிளிக் பண்ணவேண்டும்.
3. வரும் Boxன் உள் Computerஐ ‘இட’ கிளிக் பண்ணவேண்டும்.
4. வரும் Boxன் உள் Removable Disk(E) ஐ ‘இட’ கிளிக் பண்ணி, Save வை ‘இட’ கிளிக் பண்ணி சேமிக்க வேண்டும்.

வெப்பக்கத்தில் உள்ள MP3 பாடலை Computerல் உள்ள Music Folderல் சேமிக்க:-

1. பாடலின் linkன் மேல் மெளஸ்ஸை வைத்து ‘வல’ கிளிக்பண்ணவேண்டும்.
2. வரும் Boxன் உள் Save Target As… ஐ கிளிக்பண்ண வேண்டும்.
3. வரும் Boxன் உள் Computerஐ ‘இட’ கிளிக் பண்ணவேண்டும்.
4. வரும் Boxன் உள் My Document ஐ ‘இட’ கிளிக் பண்ணி,
  பின்னர் My Music ஐ இரண்டு முறை ‘இட’ கிளிக் பண்ணி பின் Save வை ‘இட’ கிளிக் பண்ணி சேமிக்க வேண்டும்.
Computerல் உள்ள Music Folderல் உள்ள பாடலை MP3 playerல் சேமிக்க:-

1. Music Folderல் இருந்து தேவையான பாடலின் மீது மெளஸ்ஸை வைத்து ‘வல’ கிளிக்பண்ணவேண்டும்.
2. வரும் Boxன் உள் Send to > என்னும் வரியின் மீது மெளஸை வைக்கும் போது
  உண்டாகும் Boxன் உள் Removable Disk(E) ஐ ‘இட’ கிளிக் பண்ணி சேமிக்க வேண்டும்.

ரோபோ ( தமிழில் இயந்திரா) படம் 130 கோடி செலவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக்கப்படுகிறது.

இதில் இரஜினி காந்துடன் நாயகியாக நடிக்க த்ரிசா,நயன் தாரா, ஸ்ரேயா என எதிர்பார்த்திருந்த வேளையில் இயக்குனர் சங்கர் இரஜினியின் நீண்டநாள் கனவான ஐஸ்வர்யா ராய் பச்சனை படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனால் இதற்கான விலையாக இந்திய திரைப்பட வரலாற்றிலேயே அதிகபட்ச ஊதியமாக ஆறு கோடி ரூபாய் பேசியிருக்கிறார்.

ஐஸ்வர்யா இதுவரை இந்தி படங்களுக்கு இரண்டு கோடியும் ஹாலிவுட் படங்களுக்கு நான்கு கோடி ரூபாய்களும் ஊதியம் பெற்று வந்தார்.

இதோ பாருங்கள் ஐஸ்வரியாவின் ரசிகரின் வேலையை…

Dr.பாலகிருஷ்னன் நிர்மலா தேவி தம்பதிகளின் புதல்வன்     

பாலமுருகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!   

                                                                                                                                                                                                                                      

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »