ஸ்பீக்கர் என்னும் ஒரு சாதனம் மட்டும் இல்லை என்றால்…

ரேடியோ இல்லை, டிவி இல்லை, தொலைபேசி இல்லை ஏன் MP3 பிளையர் கூட இலலை !!!

A.R.ரகுமானின் பாடலை கேட்பதென்றால் அவருக்கு முன்னால் பத்தடி தூரத்தில் இருந்த்து மைக்(ஒலிவாங்கி) பிடிக்காமல் பாடுவதை கேட்டால் தான் உண்டு.

தனது தொலைபேசிக்காக முதலில் ஸ்பீக்கரை வடிவமைத்த அலக்ஸாண்டர் கிரஹாம் பெல்(Alexander Graham Bell ) க்கு இந்த இடத்தில் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

Alexander Graham Bell 

திரு.பெல் அவர்கள் இளமையில் தொலைபேசியில் கதைப்பதை பாருங்கள்…. அட இதுதான்க ‘மைக்’

Alexander Graham Bell speaking on phone, 1892

இந்த அய்யா மட்டும் இல்லை என்றால் தொலைபேசி என்ற பேச்சே கிடையாது… யாரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றாலும் பேனாவும் பேப்பரும் எடுத்தே ஆகவேண்டும். அப்போதெல்லாம் அஞ்சல் துறைதான் விஸ்வரூபமெடுத்து வளர்ந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

(ஸ்பீக்கரின் பாகங்களை பாருங்கள்)

உங்களால் அப்படி ஒரு வாழ்வை வாழமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இப்படியான சங்கடங்களை எல்லம் தூக்கி எறிந்து,  இன்று நீங்கள் ஆடிப்பாட காரணமாக இருக்கும் ஸ்பீக்கர் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்று பாருங்களேன்.