மார்ச் 2008


குகா ராஜசேகரத்திற்கு இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்களை

தமிழ் நெவிக்கேஷன்

தெரிவித்துக்கொள்கின்றது.

ஸ்பீக்கர் என்னும் ஒரு சாதனம் மட்டும் இல்லை என்றால்…

ரேடியோ இல்லை, டிவி இல்லை, தொலைபேசி இல்லை ஏன் MP3 பிளையர் கூட இலலை !!!

A.R.ரகுமானின் பாடலை கேட்பதென்றால் அவருக்கு முன்னால் பத்தடி தூரத்தில் இருந்த்து மைக்(ஒலிவாங்கி) பிடிக்காமல் பாடுவதை கேட்டால் தான் உண்டு.

தனது தொலைபேசிக்காக முதலில் ஸ்பீக்கரை வடிவமைத்த அலக்ஸாண்டர் கிரஹாம் பெல்(Alexander Graham Bell ) க்கு இந்த இடத்தில் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

Alexander Graham Bell 

திரு.பெல் அவர்கள் இளமையில் தொலைபேசியில் கதைப்பதை பாருங்கள்…. அட இதுதான்க ‘மைக்’

Alexander Graham Bell speaking on phone, 1892

இந்த அய்யா மட்டும் இல்லை என்றால் தொலைபேசி என்ற பேச்சே கிடையாது… யாரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றாலும் பேனாவும் பேப்பரும் எடுத்தே ஆகவேண்டும். அப்போதெல்லாம் அஞ்சல் துறைதான் விஸ்வரூபமெடுத்து வளர்ந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

(ஸ்பீக்கரின் பாகங்களை பாருங்கள்)

உங்களால் அப்படி ஒரு வாழ்வை வாழமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இப்படியான சங்கடங்களை எல்லம் தூக்கி எறிந்து,  இன்று நீங்கள் ஆடிப்பாட காரணமாக இருக்கும் ஸ்பீக்கர் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்று பாருங்களேன்.

முற்றிலும் இலவசமான ஒரு 411 சேவையினை நம்ம கூகிழ் வழங்குகின்றது.

ஜமாய்ங்கள் !

கீர்த்திவாசன் ரவீந்திரன் அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

இதோ கீர்த்திவாசனின் ஒளிப்பதிவில் தயாரான ஒரு பாடல்காட்சி

 

தேவையான பொருள்கள்:

ஆக்கம் : ஜெயஸ்ரீ கோவிந்தரரஜன்

கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக் கீரை – 1 கப்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய்

methi roti (maavu)methi roti 1 (मेथी रोटी)

செய்முறை:

  • வெந்தயக் கீரையை, தனித் தனி இலையாக ஆய்ந்து ( ஒரு கப் எடுத்து, தண்ணீரில் அலசி நீரை வடியவைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கீரையை லேசாக 2, 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். கீரை சுண்டிவிடும்.
  • கோதுமை மாவு, கடலை மாவு, தயிர், மிளகாய்த் தூள், தேவையான உப்பு, சுண்டிய கீரை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சிறிது சிறிதாக வெந்நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.
  • குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • மைதா மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.) நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
  • திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.
  • இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.

methi roti (मेथी रोटी)

* இந்தச் சப்பாத்தி ஆறியதும் சாதாச் சப்பாத்தியைப் போல் இல்லாமல் சிறிது மொறுமொறுப்பாக ஆகலாம். ஆனாலும் சுவையாக இருக்கும்.

* நீண்ட பிரயாணங்களுக்கும் எடுத்துப் போகலாம். கெடாது.

 வீடியோவை தேடித்தேடி அலையாமல் ஒரே இடத்திலேயே பல வீடியோக்களை பாருங்கள். கீழே உள்ள முக்கோணம் போன்ற அம்முக்குறியை அமுக்குவதன் மூலம் அடுத்தடுத்து வீடியோக்களை தெரிவு செய்யல்லாம்.

ராஜ்குமார் உமா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஐங்கரனின் பிறந்தநாள் வீடியோவில் இருந்து பாடல் எங்கே என்று பலர் e-mail மூலம் கேட்டிருந்தனர்.

ஏன் அவர்களுக்கு பாடல் தெரியவில்லை என்று புரியவில்லை. எனினும் இதோ மிகவும் தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையில் அமைத்துள்ளேன்.

இதனை கிளிக் பண்ணுவதன் மூலம் Full Screen னிலும் பார்க்கலாம். 

ஐங்கரனின் பாடல்

அல்லது இங்கேயே பார்க்கப்போகின்றீர்களா?

சற்று சிறிதாக இங்கேயே பாருங்கள்

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »