மனிதனை ஒன்றாயிருக்க விட்டால் அவன் நம்மளையே கவுத்துடுவான்னு நினைச்சதாலோ என்னவோ கடவுள் ஊருக்கு ஊரு அவனிடையே பிரிவினைகளை விட்டு வைத்தான்.

ஜாதியால் அவர்களுக்குள் சண்டை போட விட்டான்,

மோதத்தால் ஒன்றாய் இருந்தவர்களை பிரிய விட்டான்,

மொழியால் பிரியவிட்டு நன்றாக அவர்களை முட்டி மோத விட்டான்,

கலரால் துரைகள் அடிமைகளென பிரித்து அவர்களை வகைவகையாக்கினான்,

நிலத்தால் தங்களுக்குள்ளே எல்லைகளை பிரித்து மாறிமாறி சேற்றை வீச வைத்தான்.

மொத்த மனித இனமும் சேர்ந்திருந்தால் அது கடவுளுக்கு தான் ஆபத்து போலும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இத்தனை பிளவுகளும் பிரிவுகளும் அவனிடையே இல்லாதிருந்தால் இத்தனை தூரம் அவன் வளந்திருப்பானா என்பதும் சந்தேகமே.

கடந்த வருடம் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் முழு இந்தியாவும் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தது. அராபிய தேசங்களில் ஈட் தினம் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கா ஹாலோயீன் கொண்டாடியது.

இந்த வருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்துஉலகம் ஹோலி கொண்டாடிக்கொண்டிருந்தது, இஸ்லாமிய உலகம் இன்னொரு ஈட் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவர்கள் ஈஸ்டரும் யூதர்கள் ஏதோ ஒரு தங்கள் பண்டிகை ஒன்றையும் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு வருடமும் ஒரு இடத்தில் கொண்டாடப்படும் பண்டிகையானது இன்னொரு இடத்திலும் இன்னொரு வடிவில் கொண்டப்படுகின்றது.என்ன ஒன்றிரண்டு நாள் வித்தியாசமிருக்கும், பெயர் வேறிருக்கும். அவ்வளவுதான்.

பாருங்கள் மனிதரையெல்லாம் அடையாளம் தெரியாத மெல்லிய கயிறொன்று தொட்டு செல்வது போலுள்ளது. யாருக்கும் அது கண்ணுக்கு தெரியவில்லை.
அக்கயிறால் பாவம் நம்மை கெட்டியாய் கட்டவும் முடியவில்லை.

“இமயச் சாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்பவன் மருந்து கொண்டு ஓடினான்”-னு ஆசையாய் பாடினார் பாவேந்தர்.

கலியுகத்தில் ரொம்ப தான் ஆசைப்பட்டு விட்டாரோ??

நன்றி: கோபி