இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

உங்கள் நண்பர்களையோ, உறவினர்களையோ, பிள்ளைகளையோ ஏன் உங்களைக்கூட கண்காணிக்கல்லாம் !

படத்தில் பார்க்கும் பொருள்தான் அது. இதனை காருக்கடியில் ஒட்டிவிட்டால்( காந்தம் அதனுடன் வருகின்றது) கார்போகும் மூலை முடுக்கெல்லாம் தெரிந்துவிடும். அத்துடன் காரை எவ்வளவு வேகமாக ஒட்டுகின்றீர்கள் – எங்கு park பண்ணியுள்ளீர்கள் – எவ்வளவு நேரம் நின்றீர்கள்… போன்ற விலாவாரியான விபரங்களை படத்துடன் காட்டிக்கொடுத்துவிடும்.

இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில்.

    

230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணல்லாம் இந்த LandAirSea GPS Tracking Key யை.

சிறிதாக தீப்பெட்டிமாதிரி இருக்கும். ஒரு USB கொக்கியும் இருக்கின்றது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.

பார்த்தி – உங்களை இதைக்காட்டி எல்லாம் பயமுறுத்தவில்லை ! எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை.

ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான்.

மேலும் அறிய
http://www.trackingkey.com