சனி, மே 3rd, 2008


இந்த TV யின் தடிமன் 3mm. மட்டுமே!

சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ள சோனி நிறுவனத்தின் XEL-1 என்கிற தொலைக்காட்சி பெட்டி 3மிமீ தடிமன் மற்றும் 2 கிலோ எடை மட்டுமே கொண்டு உலகின் மிக மெல்லிய தொலைக்காட்சி பெட்டியாக இருக்கிறது.OLED(Organic Light Emitting Diode) தொழில்நுட்பத்தை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. திரையின் அகலம் 11”.மிக குறைந்த அளவு மின்சாரத்தை மட்டும் எடுத்து கொள்கிறது.LCD திரை தொலைக்காட்சி பெட்டிகளை விட வண்ணங்களை சிறப்பாகவும் படங்களை துல்லியமாகவும் காட்டுகிறது இந்த தொலைக்காட்சி பெட்டி.

LCD திரைக்கும் OLED திரைக்கும் உள்ள வித்தியாசம் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இந்த OLED நுட்ப முறை தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் மற்றும் தடகள வீரரான டேவிட் ப்ளைன் சிகாகோவில் நடை பெற்ற ஒப்ரா வின்ப்ரீ ஷோவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முந்தைய சாதனை 16 நிமிடங்கள் 32 வினாடிகள். இவர் சாதனை 17 நிமிடங்கள் 4 வினாடிகள்.