டைட்டானிக் கப்பல் மூழ்க தரம் குறைந்த ரிவிட்டுகளை பயன்படுத்தியதால் தான் அது பனிப் பாறையில் மோதியவுடன் உடைந்து கடலில் மூழ்க நேரிட்டதாக இரு ஆராச்சியாளர்கள் திமோத்தி போக்கே மற்றும் ஜெனிபர் மேக் கார்த்தி கூறுகின்றனர்.


டைட்டானிக் கப்பல் கட்டப்படும் போது

1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இரவில் அது வட அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது பெரும் பனிப்பாறை மீது மோதியது. இதில் கப்பல் உடைந்து, கடல் நீர் உள்ளே புகுந்து 1,500 பேருடன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது குறித்து நீண்ட காலமாகவே பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது இந்த இரு ஆராச்சியாளர்களும் எழுதியுள்ள புத்தகத்தில் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த ரிவிட்டுகள் சரியில்லாதது தான் கப்பல் உடைந்ததற்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.


டைட்டானிக் கப்பல் சௌதாம்ப்டன், இங்கிலாந்திலிருந்து புறப்படும் போது

டைட்டானிக் கப்பலை கட்டிய வட அயர்லாந்தை சேர்ந்த ஹார்லான்ட் அன்ட் உல்ப் நிறுவனம் ஒரே சமயத்தில் மூன்று கப்பல்களைக் கட்ட வேண்டியிருந்ததால் டைட்டானிக் கப்பலை விரைவில் கட்டிமுடிப்பதற்காகவும் குறைந்த விலையில் முடிக்கவும் தரம் குறைந்த ரிவெட்டுகளை பயன்படுத்தியதாக திமோத்தி கூறுகிறார். இவர் ஒரு உலோகவியலாளர். ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலை கழகத்தில் உலோகவியல் ஆராய்ச்சிக்காக டைட்டானிக் கப்பலின் ரிவெட்டுகளை பற்றி படிக்கும் ஜெனிபர் அது பற்றி ரசாயன முறையிலும் கணினி வடிவமைப்பு மூலமும் ஆராய்ந்த போது அந்த ரிவிட்டுகள் தரம் குறைந்ததாக இருந்தது என கூறுகிறார்.

இரும்பு ரிவிட்டுக்களுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அதற்குப் பதில் ஸ்டீல் ரிவிட்டுக்களைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இரும்பை விட ஸ்டீல் ரிவிட்டுகள் உறுதியானவை.கப்பலின் மையப் பகுதியில் ஸ்டீல் ரிவிட்டுக்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் கப்பலின் அடிப்பாகத்திலும்,பிற பகுதிகளிலும் இரும்பு ரிவிட்டுக்களைப் பயன்படுத்தியுள்ளனர்.ஆனால் இரும்பு ரிவிட்டுகள் பொருத்தப்பட்ட அடிப்பாகத்தில் தான் பனிப்பாறை மோதியது.

டிமோத்தியின் கூற்று என்னவெனில் தரமான ரிவிட்டுக்களை பயன்படுத்தியிருந்தால் பாதிப்பு சிறிது குறைந்து மூழ்கும் வேகம் குறைந்திருக்கும். மேலும் பலரை காப்பற்றியிருக்கலாம் என்கிறார். ஆனால் இந்த கப்பல் கட்டிய நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் லிவிங்ஸ்டன் இதை மறுக்கிறார்.

வில்லியம் கார்ச்கி எனும் பொறியாளர் ரிவிட்டுகளின் தரத்தை விட அது அடிக்கப்பட்ட முறை தவறு என்கிறார். மேலும் விவரங்களுக்கு
Book by metallurgists blames rivets for Titanic tragedy