உங்களின் தெரிந்தவர்கள் யாராவது விமானத்தில் பயணம் செய்கின்றார்களா?

எப்போ விமானம் புறப்பட்டது? எப்போ விமானம் வரும்? இபோ எந்த இடத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கின்றது? ……

அப்பப்பா ஒன்றுமே சரியாக தெரியாமல் ஒரே டென்ஸனாக இருக்கின்றதா? இவை அனைத்திற்கும் அருமையான ஒரு தீர்வு இதோ !

http://flightaware.com/

இந்த இணைய தளத்தில் விமான சேவை நிறுவனம் மற்றும் அந்த குறிப்பிட்ட விமான எண் கொடுத்தால் போதும், விமானம் எப்போது புறப்பட்டது, எப்போது அது டேக் ஆப் ஆனது, இப்போது பூமியிலிருந்து எவ்வளவு உயரத்தில் அது பறந்து கொண்டிருக்கின்றது? புறப்பட்ட இடத்திலிருந்து அது எவ்வளவு தூரம் போயிருக்கின்றது? இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்? இன்னும் எவ்வளவு நேரமாகும்? இதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து சொல்கின்றார்கள்.
விமானம் தற்போது பறந்து கொண்டிருக்கும் இடத்தை அழகாய் ஒரு மேப்பும் வரைந்து காட்டுகின்றார்கள்.

பிறகு என்ன…. உறவுகாரருடன் சேர்ந்து நீங்களும் பறந்தமாதிரித்தான் !

– கேபிகே