என்னோட ஆளை காதலிக்கும் போது இந்த பாடலை 99% அப்படியே உல்ட்டா பண்ணி நானே கவிதை எழுதியமாதிரி பந்தாவா அனுப்பிவைத்திருந்தேன்!

(இந்தப்படம் வரும்போதுதான் நம்மாளு பிறந்திருப்பா இவவுக்கெங்கே இந்தப்பாட்டு தெரியப்போகுது என்று ஒரு நம்பிக்கையில்)

நம்மாளும் ‘நல்லாத்தான் வர்ணிக்கின்றீர்கள்’ என்று நற்சான்றிதழ் வேறு வழங்கியிருந்தா.

இப்படியே நாட்கள் உறுண்டோட… ஒரு நாள் திருச்சியில் இருந்து சென்னைக்கு வீடியோ கோச் பஸ்ஸில் நாங்கள் போய்க்கொண்டிருக்க…. அதில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை போட்டனர்.  நானும் என் மனைவியிடம் இந்தப்படம் வெளிவந்த காலங்களில் டிக்கட் எடுக்க எவ்வளவு கஸ்ட்டப்பட்டேன், அப்படி இப்படி என்று அந்தநாளைய கதைளை அளந்துவிட்டுக்கொண்டு படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம்.

அப்போது இந்தப்பாட்டு ஸீனும் வந்தது…. நானும் பாடலை ரசிக்கத்தொடங்கினேன்.

பாடல் தொடங்கி சில செக்கன்களில் உச்சந்தலையில் சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது… நான் கவிதை எழுதிய விடயம் ஞாபகத்துக்குவர, விக்கித்து அருகில் இருந்த மனைவியை அப்பாவியாய் பார்த்தேன்….!

அப்பாடா…. அவளிடம் அவ்வளவு பெரிய கண்ணை அண்டைக்குத்தான் பார்த்தேன் !

என் தலையே உலகம் சுற்றியது போல் இருந்தது.

அப்புறம் என்ன? அசடுவளிதல்… குழைதல்… என்பன போன்றன சில அன்று பஸ்ஸினுள் அரங்கேறியது!

இதோ அந்தப்பாடல்…. (எவ்வளவு தைரியம் பார்த்தீர்களா அந்தப்பாடலை இங்கே போட!!!)