ஞாயிறு, மே 11th, 2008


உலகின் மறுபக்கத்தில் வாழும் என் அன்னை திருமதி வேதநாயகிக்காக இந்த அன்னையர் தினப்பதிவு!

கருவிலே உருவான காலம் முதல் என்னன காதலித்து, எனக்கு உருவமும் உணர்வும் தந்து இவ் உலகிலே என்னை பெற்றெடுத்து…

விருப்போடு பாலூட்டி – தாலாட்டி, தெருவினிலே புழுதி பிரட்டிவந்தாலும் அருவருப்பின்றி எனை அணைத்து அமுதூட்டி சீராட்டி எனை வளர்த்த தாயே !

நீ அறியாத கல்வியெல்லாம் நான் கற்க வேண்டுமென்று கல்வியின் பயனை உரைத்த பாரதியே…

வாலிபத்தின் வாயிலுக்கு நான்வந்த வேளையிலும் படிப்பித்தேன் என்று எனக்கு விலையேதும் வைக்காமல் நானாக துணையைத் தேட வரமளித்த தாயே !

எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள் கடந்து என்னை கரைசேர்த்த அன்புக்கலமே

உன்போன்ற அன்னையருக்கு இவ் உலகு வாழும் காலமெல்லாம் அன்னனயர் தினமே !!!

 

இன்று பிறந்தநாளை காணும் திருமதி மதிவதனா பிறேம்குமாரை

அன்புக் கணவன் திரு பிறேம்குமார்

அன்பு குழந்தைகள் அனுஜன், தாரணி

தாயார் ஞானா

மற்றும் சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள்

அகியோர் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்!