உலக சாதனைக்கு ஒரு இணைய தளம் தயாராகிறது

Internet Big Bang (இணைய பெரு வெடிப்பு!!) என்கிற இணைய தளம் ஒரே சமயத்தில் அதிக பட்ச எண்ணிக்கையிலான பயனர்கள் ஒரு இணைய தளத்தில் இணையும் சாதனைக்கு தயாராகிறது [Highest number of people on the same website at the same time].

ஜூன் 20 ம் தேதி லாஸ் ஏன்ஜெலஸ் நேரம் மதியம் 12 மணிக்கு இந்த சாதனை நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை நேரப்படி ஜூன் 21 ம் தேதி அதிகாலை 12:30 மணி, 

லண்டன் ஜுரோப் நேரப்படி இரவு 8மணி ஆகும்.

இதுவரை (இந்த கட்டுரையை எழுதும் போது) மூன்று லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இசைந்துள்ளனர். நான் 398 833வது ஆளாக கலந்துகொள்ள சம்மதித்துள்ளேன் ! அட ஒரு உலகசாதனைக்கு நானும் பங்குபற்றினேன் என்று ஒரு பெருமை தானே?

பிறகென்ன நீங்களும் ரெடியா?

இந்த நிகழ்வை அதற்கு முந்தைய நாள் நினைவு படுத்த தானியங்கு மின்னஞ்சல் வசதியும் (Automatic Reminder) உள்ளது.அத்தனை நுழைவுகளையும் தாங்கும் வகையில் அதன் வழங்கிகள்(Servers) அமைக்கப்பட்டுள்ளன.

உள் நுழைய Internet Big Bang