மனைவிக்கு பரிசு கொடுக்க மறக்கும் ரகமா நீங்கள்?

இதோ உங்களுக்காக ஒரு சிறப்பு மோதிரம்!

இந்த மோதிரத்தில் உங்கள் கல்யாண நாளை பதிவுசெய்துவிட்டால் 24 மணிநேரத்திற்கு முன்னால் இருந்து ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 10 செக்கனுக்கு சுமார் 50 பாகை செல்சியஸ் சுடு வந்து உங்களை உசார்ப்படுத்தும் !

50 பாகை செல்சியஸ் என்பது கொதிக்கும் தண்ணீரின் அரைவாசி சூடு.

( கல்யாணத்தை கட்டி கையை சுட்டுக்கொண்ட கதை இதுவா? ) இதன் இன்றைய விலை 90 டொலர்கள்.

கல்யாணதினத்தை ஞாபகப்படுத்த மட்டுமில்லாமல், பிறந்தநாள் ஞாபகத்திற்கு கூட இதனை பயன்படுத்தல்லாம். ஏன் சிலருக்கு நீங்கள் கடன் கொடுக்கும் போதுகூட திருப்பித்தரும் திகதியை செட்பண்ணிவிட்டு அவங்க கையில் மாட்டிவிடுங்க 🙂