யாஹூவை வாங்கும் திட்டத்தை கைவிட்டது மைக்ரோசாப்ட்

கடந்த மூன்று மாதங்களாக இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்து வந்த பேரம் படியாததால் இந்த திட்டத்தை கை விட்டு விட்டதாக மைக்ரோசாப்ட் இன் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர்(Steve Ballmer)தெரிவித்துள்ளார்.யாஹூ தலைமை செயல்அதிகாரி ஜெர்ரி யாங்கிற்கு(Jerry Yang)அனுப்பியுள்ள கடிதத்தில் இதை தெரிவித்து உள்ளார்.முதலில் மைக்ரோசாப்ட் 42.3பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக இருந்தது.பின் மீண்டும் அதை அதிகரித்து 47.5 பில்லியன் டாலர்கள் தருவதாக கூறியது.ஆனால் யாஹூ 53 பில்லியன் டாலர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.இந்த விலை மைக்ரோசாப்ட்க்கு சரி வராததால் பேரம் இத்தோடு முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார் ஸ்டீவ் பால்மர்.