ஞாயிறு, மே 18th, 2008


பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளும், M.S.விஸ்வநாதனின் இசையும், P.சுசிலாவின் குரலும், K.R.விஜயாவின் நடிப்பும் இந்தப்பாட்டுக்கு நான்கு முனைப்போட்டி!

குறிப்பாக கே.ஆர்.விஜயாவின் முகபாவத்தைக்குறிப்பிடல்லாம். இப்போதுள்ள நடிகைகள் யாராவது இப்படி நடிப்பார்களா என்பது சந்தேகமே!

பஞ்சவர்னக்கிளி என்னும் திரைப்படட்தில் வந்த இந்தப் பாடல் எக்காலத்திற்கும் ஏற்ற ஒரு அருமையான பாடல்.

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
– பாரதிதாசன்

சரித்திரத்தில் பிரபலமான நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு ஒரே படத்தில் இணைந்து உள்ளனர்.

முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை கண்டுபிடியுங்கள். அனைவரையும் கண்டுபிடிப்பது மிக கடினமே.

இந்த படத்தின் படைப்பாளி யார் என தெரியவில்லை. இருந்தாலும் இது சுவாரஸ்யமான படமே.

உலகத்திலேயே மிகச்சிறந்த ஓவியம் என்று கூட சொல்லல்லாம்.

படத்தை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.