இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நாம் அசட்டையாய் சொல்லிக் கொண்டிருக்க எங்கோ யாரோ உழைத்து இது மாதிரி அற்புதங்களையெல்லாம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆமாம் நம் தாய்மொழியாம் தமிழில் கூட இப்போது ஜிபிஎஸ் வந்துவிட்டது. இப்போது இந்திய 8 மொழிகளில் வந்துள்ளது – குஜராத்தி, கன்னடம், ஒரிசா, தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, மற்றும் தமிழ் மொழிகளில் இப்போது சாத்தியமாகின்றது.

 இடது புறம் திரும்பு மக்கா , வலது புறம் திரும்பு மக்காவென தமிழில் அந்த GPS அம்மணி உங்களுக்கு வழிகாட்டும். இந்த கருவியை சமீபத்தில் SatNav Technologies எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு விதமான வழிகளில் பல்வேறு விலைவாசிகளில் ஜிபிஎஸ் தீர்வுகளை இவர்கள் அளிக்கின்றனர். ஆர்வமுள்ளோர் இவர்களின் http://www.satguide.inஎனும் தளம் போய் ஒரு கணம் பார்க்கலாம்.

சில ஹைலைட்கள்

# நீங்கள் GPS வாங்காவிட்டாலும் பரவாயில்லை,உங்கள் மடிக்கணிணியை அல்லது PDA-வை அல்லது மொபைல்போனை GPS போல பயன்படுத்த அவர்கள் வழி செய்து தருகின்றார்கள்.

# நடந்து போகும் போதும் ஆட்டோவில் போகும்போதும் கூட இதை பயன் படுத்தலாம் என்கின்றார்கள்.

# இந்தியாவாயிருந்தாலும் எல்லா GPS-களும் பயன்படுத்துவது இந்த 24 அமெரிக்க சட்டலைட்டுகளைத்தான்.

# MP3 இசை கூட பாடும் வசதி இவர்கள் தரும் GPS-ல் உள்ளது.

# GPS க்கும் GPRS க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தெரியுமோ?

# வாங்கும் செலவு மட்டும் தான் பெருசு,மாதம் தோறும் பணம் எதுவும் கட்டவேண்டியதில்லை.

# பிற்காலத்தில் மேப்பை அப்டேட் செய்ய வேண்டுமாயின் பணம் கட்டவேண்டியது வரும்.

# இந்த ஜிபிஎஸ்களை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாமாம்,ஆனால் முதலில் Destinator தளத்திலிருந்து அந்த நாட்டுக்கான மேப்பை வாங்கி நிறுவ வேண்டும்.

சரி GPS எவ்வாறு வேலை செய்கின்றது என்று கொஞ்சம் பாருங்களேன்.

-PKP