எறும்பு நேயர் ஒருவரின் விருப்பப்பாடல் ( அட அவர் தன்னன அப்படித்தான் அறிமுகப்படுத்தினார் ) மேலும் அவர் கூறியது…

– எனக்கு கல்யாணம் பேசிய காலங்களில் நான் மெல்லிதாக இருபேன், இவ கொஞ்கம் குண்டாக இருப்பா…  அப்போது என்மீது இவவுக்கு ஒரு இது இருந்ததுதான்… அந்தக்காலத்தில் வந்த இந்தப்பாடலின் “நான் எறும்பு நீ இரும்பு” என்னும் வசனத்தை பிடித்துவைத்துக்கொண்டு, இவவை கடுப்பேத்தவே இந்தப்பாடலை அடிக்கடி பாடுவேன்…. நாகேஷ்சும் சச்சுவும் பாடிய பாடல்… கன நாளாச்சு இந்தப்பாட்டைக் கேட்டு, எங்கே எப்படி இந்தப்பாட்டை கேக்கிறது என்று தெரியவிலை… தம்பி பார்த்திபன், உம்மால முடிஞ்சா இந்தப்பாட்டை மலரும் நினனவாக இந்த எறும்பிற்காகவும், இரும்பிற்காகவும் ஒலிபரப்புங்கள். –

மேலே உள்ள அனனத்தையும் e-mailல் ஆங்கிலத்தில்  Ennakku kalyaanam peaciya  kaalangkalil …என உச்சரித்து நகைச்சுவையாக எழுதியிருந்தார். அதனை வாசிப்பதற்கு இலகுவாக நான் தமிழில் எழுதியுள்ளேன்.

அண்ணா எறும்பண்ணா… உங்களுக்காகத்தானே எனது www.barthee.com ல் இடது பக்கத்தில்  என்று ஒரு இலகுவான வழி காட்டியுள்ளேன்.

இன்றும் அதே நகைச்சுவை உணர்வுடன் இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ! இதோ எறும்பு அண்ணாவிற்காகவும், இரும்பு அண்ணிக்காகவும் 🙂  அந்த மலரும் நினனவுப் பாடல்…