மே 2008


இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நாம் அசட்டையாய் சொல்லிக் கொண்டிருக்க எங்கோ யாரோ உழைத்து இது மாதிரி அற்புதங்களையெல்லாம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆமாம் நம் தாய்மொழியாம் தமிழில் கூட இப்போது ஜிபிஎஸ் வந்துவிட்டது. இப்போது இந்திய 8 மொழிகளில் வந்துள்ளது – குஜராத்தி, கன்னடம், ஒரிசா, தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, மற்றும் தமிழ் மொழிகளில் இப்போது சாத்தியமாகின்றது.

 இடது புறம் திரும்பு மக்கா , வலது புறம் திரும்பு மக்காவென தமிழில் அந்த GPS அம்மணி உங்களுக்கு வழிகாட்டும். இந்த கருவியை சமீபத்தில் SatNav Technologies எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு விதமான வழிகளில் பல்வேறு விலைவாசிகளில் ஜிபிஎஸ் தீர்வுகளை இவர்கள் அளிக்கின்றனர். ஆர்வமுள்ளோர் இவர்களின் http://www.satguide.inஎனும் தளம் போய் ஒரு கணம் பார்க்கலாம்.

சில ஹைலைட்கள்

# நீங்கள் GPS வாங்காவிட்டாலும் பரவாயில்லை,உங்கள் மடிக்கணிணியை அல்லது PDA-வை அல்லது மொபைல்போனை GPS போல பயன்படுத்த அவர்கள் வழி செய்து தருகின்றார்கள்.

# நடந்து போகும் போதும் ஆட்டோவில் போகும்போதும் கூட இதை பயன் படுத்தலாம் என்கின்றார்கள்.

# இந்தியாவாயிருந்தாலும் எல்லா GPS-களும் பயன்படுத்துவது இந்த 24 அமெரிக்க சட்டலைட்டுகளைத்தான்.

# MP3 இசை கூட பாடும் வசதி இவர்கள் தரும் GPS-ல் உள்ளது.

# GPS க்கும் GPRS க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தெரியுமோ?

# வாங்கும் செலவு மட்டும் தான் பெருசு,மாதம் தோறும் பணம் எதுவும் கட்டவேண்டியதில்லை.

# பிற்காலத்தில் மேப்பை அப்டேட் செய்ய வேண்டுமாயின் பணம் கட்டவேண்டியது வரும்.

# இந்த ஜிபிஎஸ்களை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாமாம்,ஆனால் முதலில் Destinator தளத்திலிருந்து அந்த நாட்டுக்கான மேப்பை வாங்கி நிறுவ வேண்டும்.

சரி GPS எவ்வாறு வேலை செய்கின்றது என்று கொஞ்சம் பாருங்களேன்.

-PKP

விபத்துகளை தடுப்பதற்கு அந்தக்காலம் தொட்டு ஆயிரமாயிரம் அறிவுரைகளை அள்ளிவளங்கினாலும், ஆயிரத்தி ஒரு சட்டங்களை போட்டாலும் – விபத்தின் விகிதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது !

மொத்தத்தில் இந்த விபத்திற்குரிய அடிப்படை காரணத்தை கூர்ந்துபார்த்தால் மனித தவறுகளே காரணமாக இருக்கும்.

வேகம், மதுபோதை, தூக்கம், கவனச்சிதரல்…

முன்னனயது மூன்றைப்பற்றியும் விளக்கங்கள் தேவையிலை. நாலாவதாக உள்ள கவனச்சிதரல் என்பது பலவகையாக பாகுபடுவதை உணரமுடியும்.

நானே என் கண்ணால் கண்ட – கார் ஓட்டும் போது தொலைபேசி உரையாடலையும், வீடியோ படம் எடுபதையும், கொக்கக்கோலாவை அண்ணாந்து குடிப்பதையும், வானில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்ப்பதையும்…. இப்படியே அடிக்கிக்கொண்டு போகலாம் இந்த கவனச்சிதரல்களுக்கு எடுத்துக்காட்ட.

விபத்து என்பது கார்விபத்து மட்டும் இல்லை, வேலைசெய்யும் இடத்திலும், விளளயாடும் இடத்திலும் ஏன் வீட்டில் கூட வரும்.

1998ம் ஆண்டு நான் yahooவில் முதல்முதலில் e-mail ஆரம்பித்தபோது மிகச்சிலரிடமே e-mailகள் இருந்தன. பேனா நண்பர்களுக்கு கடிதம் எழுதுவதுபோல் அப்போது சிலர் e-mailலில் தொடர்புகொள்ளுவார்கள். அப்போது எனக்கு e-mailலில் ஒரு முகம் தெரியாத நண்பர் அனுப்பிவைத்த சில படங்களை – இன்று என் பழைய சேமித்துவைத்த e-mailகளை திரும்பிப்பார்க்கும் போது கண்ணுக்குப் பட்டது !

அதில் அவர் அனுப்பிவைத்த சில படங்கள் இவை…

சுரங்கப்பாதையில் ஓடும் ரயிலில் இருந்து இப்படி ஒருவர்…

சலூனினுள் கத்தியால் சவரம் செய்பவர் இப்படி…

 ஒருவர் காதினுள் வாக்மென்னனப் போட்டுக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்டுக்கொண்டு புற்தரையில் புத்தகம் படிக்க, அந்தநேனரம் புல்வெட்டிக்கொண்டு வருபவர் இப்படி…

கடற்கரையில் காத்துவாங்கும் காட்சிகளை எல்லாம் கண்டுகொண்டு காரேட்டத்தை கைவிட்ட இப்படி ஒருவர்…

விபத்துக்கு இவையும் காரணம் தான் !

மேலை உள்ள படங்கள் நகைச்சுவைக்கு எடுக்கப்பட்டாலும் இனி சில் நிஜப்படங்களையும் பார்ப்போம்…

குடிமக்களை மனவருத்தம் அடையச்செய்யும் படம் !??!

இந்தபெரிய குண்டை கொண்டுசெல்ல இப்படி கவனம் இன்மை!  வெடிக்காதது Forklift ஓட்டுனரின் மனைவியின் தாலிபாக்கியம் !


தேவையானப்பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
எண்ணை 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை சிறிது
உப்பு 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து, சற்று வதக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும். பின்னர், தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். கடைசியில், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறி விடவும். சிறு தீயில் வைத்து சிறிது நேரம் வத‌க்கி, கீழே இறக்கி வைக்கவும்.

தோசை, இட்லி, சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: தக்காளி வத‌க்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால், சீக்கிரம் வதங்கி விடும்.

கர்மவீரர் காமராஜரைப்பற்றி அவரது வாழ்வில்

நடந்த சுவையான சம்பவங்கள்

அடங்கிய ஒரு மென் புத்தகம்

Right click and Save.Download

Toronto நேயர் R அவர்கள் விரும்பிகேட்ட பாடல்

MP3 வடிவில் Download( Right click பண்ணி Save Target As)

நேற்று இங்கு Long weedend ஆனபடியால் குடும்பத்தாருடன் குதுகலாமாக்  சில இடங்களுக்கு பயணமாணோம். அப்போது காரினுள் வானொலியை பல அலைவரிசைகளை திருப்பியபடி வந்த போது ஒரு நிலையத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உலகில் மனிதனின் தோற்றத்தை ஆதாம் ஏவாள் உடனும், டாவின்சியின் உயிரியல் கோப்புடனும் ஒப்பிட்டு – இதுசரி, இதுபிழை என்று பைபிளைஎல்லாம் ஆதாரம் காட்டி களளகட்டியது அந்த நிகழ்ச்சி!
அட என்னதான் இந்த ஆதாம் ஏவாள் விடயம் என்று ஆராய் வீட்டிற்கு வந்ததும் முதல்வேலையா என் Computer முன் உற்காந்தேன்….

சரி சரி…. என் ஆராட்சிக்குமுன் இந்த ஜோக்கை கொஞ்சம் படியுங்களேன்…

[ஆதாம் ஏவாள் (மட்டும் வாழ்ந்த காலம்) இவர்கள் தவிர வேறுயாரும் இல்லை, இவர்களுக்கு இன்னும் முதல் மகன்கூட பிறக்கவில்லை.
ஆதாம் மாலை மயங்கும் நேரத்தில் வேலையெல்லாம் செய்துவிட்டு, மிகவும் சோர்வாக வீட்டிற்கு வருகிறார்.]

ஏவாள்: ஏன் இவ்வளவு லேட்டு.
ஆதாம்: இன்னிக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது
ஏவாள்: எனக்கு தெரியும், நீங்கள் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கீங்க. அங்கேயிருந்து தானே வரீங்க?
ஆதாம்: இல்லை. அப்படி யாரும் இல்லை. உனக்கு தெரியும் இல்லே, நீயும், நானும் தவிர வேறு யாரும் இல்லை இவ் உலகில் என்று.
ஏவாள்: சரி போங்க, நம்பரேன்.

[ஆதாம், ஏவாள் இருவரும் சாப்பிட்டார்கள். ஆதாம் தூங்கிவிட்டார். சிறிது நேரம் சென்றவுடன், ஏவாள் ஆதாமின் பக்கம் வந்து, அவர் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு, 1, 2, 3, என்று எண்ணிக்கொண்டு இருந்தார். என்ன இது? யாரொ எண்ணுகின்ற சத்தம் வருகிறது என்று, ஆதம் தூக்கத்திலிருந்து எழுந்து பார்க்கிறார்.]

ஆதாம்: என்ன செய்கிறாய்?
ஏவாள்: ஒன்னுமில்லே, உங்க விலா எலும்புகள் எத்தனை இருக்கு என்று பார்க்கிறேன்.
ஆதாம்: இப்போ அதுக்கு என்ன அவசரம், அதுவும் இராத்திரியிலே?
ஏவாள்: இல்லே, உங்க விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து தேவன் என்னை படைச்சாரு இல்லையா? அதே போல இன்னொரு எலும்பு எடுத்து எனக்கு தெரியாம, வேறு ஒரு பொம்பளையை படைச்சு இருப்பரோ?! என்று எண்ணிப் பார்க்கிறேன். ….

சரி இப்ப விசயத்திற்கு வருவோம். பலவருடத்திற்கு முன் ஒருமுறை என் நண்பர்கள் எல்லாரும் கூடியிருந்த வேளை இந்த ஆதாம் ஏவாள் விடயம் வந்து பலதரப்பட்ட விவாதங்கள் வந்து, சரியான விடைதெரியாமல் விலகிச்சென்றோம்.

அப்போதெல்லாம் Computer, Internet எதுவுமே கிடைக்காத காலம். அப்போது நாம் விவாதித்த விடையம் பளிச்சென்று ஞாபகத்துக்கு வர… அதையே பிடித்துக்கொண்டு தேடல் தொடங்கியது…!

அதாவது ஆதாம் ஏவாளை ஆண்டவன் உலகில் முதல்முதல் மனித உருவில் படைத்தான் என்பது. ஆதாமை முதலில் படைத்த இறைவன் ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாளை படைத்தாக பைபிள் கூறுகின்றது.

சரி அதுவேதான் உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அத்தனை ஆதாம் ஏவாள் படங்களிலும் எப்படி இருவருக்கும் தொப்புள் இருக்கின்றது?

தொப்புள் என்பது தாயில் இருந்து சேயிற்கு கற்பகாலத்தில் உணவு குருதி போன்றன வளங்குவதற்கு இருவருக்கும் இடையில் ஏற்படுத்தப்டுத்தப்பட்ட ஒரு குளாயின் (தொப்புள்கொடி) அடையாளமே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

இது இப்படி இருக்க ஒரு தாயிற்கும் பிறக்காமல் – ஆண்டவனால் படைக்கப்பட்ட ஆதாமிற்கும் ஏவாளிற்கும் எப்படி தொப்புள் வந்தது என்பதுதான்!!!

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »