நாம் அவற்றை ஐந்தறிவென்று கூறிச் சுருக்கமாக அடக்கிவிடுகிறோம்.ஆனால் அவையோ மனித உணர்வுகளைப் போன்றே தமக்குள்ளும் உணர்வுகளைக் கொண்டவை என்பவற்றை இது போன்ற படங்களைப் பார்த்தே ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

படங்களைப் பாருங்கள்,அவ்வேளையில் மனிதனின் நடவடிக்கையையும்,நாயின் நடவடிக்கையையும்..!

ஒரு நாய் காரினால் மோதப்பட்டு செத்துக்கிடக்கிறது.
இன்னொரு நாய் அதைக் கண்டுவிடுகிறது.
மின்னலைப் போல விரையும் வாகனங்களுக்கு மத்தியில் எந்த அச்சமுமின்றி தன்னைப் போல ஒரு உயிரைக் காப்பாற்ற இறந்த நாயின் அருகே ஓடி வந்து அதனைத் தட்டியெழுப்புகிறது.


“எழும்பு நண்பா எழும்பு,இங்கேயெல்லாம் தூங்கக் கூடாது.பாரு வாகனமெல்லாம் எவ்வளவு விரைவாகப் போகுதுன்னு”


“நீ எழும்புகிற மாதிரித் தெரியவில்லை.இரு நான் இந்த வீதியின் ஓரத்துக்கு உன்னைப் பாதுகாப்பாகத் தள்ளிச் செல்கிறேன்”


“இவன் மிகவும் பாரமாக இருக்கிறான்.என்னால் தனியாகத் தள்ள முடியவில்லை.தயவுசெய்து யாராவது உதவுவீர்களா?”


“எனக்கு உதவுவதை விட்டு போட்டோ எடுக்கிறீர்களா?யாராவது உதவும் வரையில் நானும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்”

நமது மனிதாபிமானங்கள் எந்தளவுக்கு இருக்கின்றன என்பதற்கு இப்படங்கள் ஒரு சிறிய உதாரணம் மாத்திரமே.
ஐந்தறிவான அந்த ஜீவனுக்கு உதவாமல் ஆறறிவான நாம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறொம்.
“ஆணென்ன,பெண்ணென்ன,நீயென்ன,நானென்ன..எல்லாம் ஓரினம்தான்… ” போன்ற பாடல்களில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கின்றன நம் மனிதாபிமானங்கள்

நன்றி: ரிஷான் ஷெரிப்