வெள்ளி, ஜூன் 6th, 2008


தேவையான பொருள்கள்:

 

புளி – எலுமிச்சை அளவு
கொண்டைக் கடலை – 1/2 கப்(காய்ந்தது)
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
கத்தரிக்காய் – 4, 5  (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்.)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை.

தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்.

uppuchchaar 2

செய்முறை:

  • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும்.
  • கத்தரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் (மண்சட்டி என்றால் நன்றாக ஒரேமாதிரியாக வறுக்கலாம்) போட்டு (எண்ணையில்லாமல்) வறுக்கவும். இதிலேயே ஓரளவு நன்றாக வெந்துவிடும்.
  • அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் பயறு, புளிக்கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக்கலவையை ஊற்றியபின் கரண்டி போடமல் இருக்கவேண்டும். பயறு வேகாதாம். (வறுத்த பயறு புளிக்கலவையில் வேகவேண்டும். வறுபட்டதினால் சீக்கிரம் வெந்துவிடும். குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை.)
  • தேவையான அளவு உப்பு போட்டு, மேலும் சிறிது எண்ணையை ஊற்றவும்.
  • பயறு வெந்ததும் (கரண்டி போடமல் தெரிந்து கொள்ளவேண்டுமாம்!), புளி நன்றாகக் காய்ந்ததும் இறக்கிவிடவும்.

* மண்சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.

* கத்திரிக்காய்க்குப் பதில் தனியாக வெண்டைக்காய் மட்டும் போட்டும் செய்யலாம்.

By: Jayashree Govindarajan

ஒரு அதிசயப் படம் இது. இப்போது இடது பக்கத்தில் உள்ளவர் சினத்துடனும், வலது பக்கத்தில் உள்ளவர் சாந்தத்துடனும் இருக்கின்றார்.

அப்படியே எழுந்து ஒரு 10அடி பின்னால் போங்கள்… இப்ப பாருங்கள் எப்படி இருவரும் முகத்தை மாற்றுகின்றனர் என்று !!!

எதுக்கும் நீங்களும் ஒருதரம் கண்ணாடிமுன் நின்று கிட்டவும் தூரவும் ஒருதரம் முகங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள் 🙂