ஆபிரிக்காவில் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்ட் David Livingstone  ன் கருத்துப்படி இந்த தர்ப்பூசணியின் பூர்வீகம் Botswana வும் Namibia வும் South Africa சேரப்பட்ட Kalahari  பாலைவனப்பகுதியை சேர்ந்தாகும்.

David Livingstone                         கலகாரி பாலைவனம்.

Born 19 March 1813(1813-03-19)
Blantyre, Scotland
Died 4 May 1873 (aged 60)
near Lake Bangweulu, Zambia

கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர்  (Second millennium BC) எகிப்தின் நைல் வெளிப்பகுதிகளில் பயிடப்பட்டது. பின்னர் 10ம் நூற்றாண்டு காலவாக்கில் சீனாவில் பயிரிடப்பட்டது. 13ம் நூற்றாண்டு பொழுதுகளில் மூர்கள் (Moor என்பது முஸ்லீம்களை குறிக்கும் பொதுவான பதம்) அதனை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினர்.

John Mariani’s The Dictionary of American Food and Drink என்னும் புத்தகத்தின் படி தர்பூசணி 1615 ல் தான் ஆங்கில டிக்ஸனரியில் தோன்றியது (“watermelon” made its first appearance in an English dictionary in 1615.)

சீனாவில் பயிடுவதற்கு முன்னமே அது வியட்நாம் நாட்டில் இருந்ததாகவும் தகவல் உண்டு. மேற்குலகில் இருந்து பறந்து வரும் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளின் எச்சத்தில் இருந்து வந்த விதைகளினால் உருவாகியதாகவும் கூறப்பட்கின்றது.

இதைவிட இன்னும் பல கதைகளும் உண்டு. அவைகள் அப்படியே நிற்க இனி தர்ப்பூசனி பற்றி சிறிது பார்ப்போம்.

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.

மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.


மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

அதைவிட நம்ம ஆளு வாணி- இரண்டு கறண்டி வனிலா ஐஸ்கிறிம் சேர்த்தாங்களே…. ஆகா… அருமை :-

வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.

இந்த தர்பூசணி பற்றி சுவையான தகவல் ஒன்று:-

ஜப்பானில் சில்லறைக்கடைகளும்,பழங்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஒரு பிரச்சினையைச் சந்தித்தன.அவர்களது கடைகள் மிகப்பெரியதாக இல்லை.ஆகவே கடையிலிருக்கும் சிறிய இடமும் வீணாகக் கூடாது எனக் கருதினர்.

தர்ப்பூசணிப் பழங்கள் பெரிய உருளைவடிவானவை.வாடிக்கையாளர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுபவை.ஆனால் கடைகளில் மிகப்பெரும் இடத்தை அவை அடைத்துக்கொண்டன.
இதனால் விவசாயிகளிடமிருந்து கடைச் சொந்தக்காரர்களால் அவை வாங்கப்படும் வீதம் குறைந்தது.

எனவே விவசாயிகள் ஒன்று கூடிச் சிந்திக்கத் தொடங்கினர்.தர்ப்பூசணிகளை பெட்டிவடிவில் வளர்த்தெடுப்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர்.அதன் முடிவில் தர்ப்பூசணிகள் சிறிதாக இருக்கும்போதே பெட்டியில் அடைக்கப்படுமிடத்து அது பெரிதாகும் போது பெட்டிவடிவிலேயே இருக்குமெனக் கண்டறிந்தனர்.

அதன்படியே காய்களை உருவாக்கத்தொடங்கினர்.கடையிலும்,வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியிலும் பெரும் இடத்தை அடைக்காத காரணத்தால் கடைக்காரர்களாலும்,வாடிக்கையாளர்களாலும் விரும்பி வாங்கப்பட்டன அப்பெட்டி வடிவக் காய்கள்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எமக்கு ஒரு பாடமுள்ளது.
அநேகமாக நம் மனதில் ‘இது இப்படித்தான் இருக்கும்’என்ற உறுதி தோன்றிய ஒன்றை மாற்றுவது பற்றிச் சிந்திக்கவே மாட்டோம்.ஆனால் நாம் சிந்திக்குமிடத்து பலவழிகள் இருக்கும்.
முயற்சித்துப் பார்க்கவேண்டும். முயற்சில் எடுத்து வைக்கும் முதலடி தோல்வியைத் தழுவிடினும், ஏதாவதொரு வழியில் வெற்றி நிச்சயம்.