ஞாயிறு, ஜூன் 8th, 2008


Croc Cage Diving என அழைக்கப்படும் இந்த முதலையுடன் சேர்ந்து மூள்கும் விளையாட்டு முன்பு அறிமுகமான shark cage divingஐ ஒத்ததாகும். அதாவது ஒரு கூண்டினுள் உங்களை இறக்கி கூண்டை அப்படியே முதலை உள்ள தடாகத்தினுள் இறக்குவார்கள்.

இவ் விளையாட்டை 12வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களும் + மனதிலே தில் உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவர். பளிங்குபோல் தெளிந்த, வெதுவெதுப்பான நீர் உள்ள தடாகத்தினுள் 4மீட்டர் நீளமான ஆளைக்கொல்லும் ‘நைல் முதலை’ களுடன் நீங்கள் உல்லாசமாக (?!) விளையாடலாம்!

நைல் முதலையின் அடக்கமான தொற்றம் !

உங்கள் முகத்திற்கு சில அங்குலம் முன்னால் வரை அகோர பற்களுடன் உலாவும் முதலைகளை – உங்கள் கைகளை நீட்டி தடவிப்பார்ப்பது உங்கள் சொந்தவிருப்பம் ! அதற்குமுன்னால் சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலையின் வாயில் எதுவாகினும் மாட்ட அது ஒரு செல்லக்கடி கடிக்கும். அந்தக்கடினின் அளவு ஒரு சதுர அங்குலத்திற்கு ஒரு தொன் அழுத்தம் இருக்கும் ! பரவாயில்லையா?

உலகில் முதல் முறையும், ஒரே ஒரு இடத்திலும் இது தற்போதைக்கு அமைந்துள்ளது. பின்னர் மக்களின் வரவேற்பையும், முதலையின் ஒத்துளைப்பைபும் பொறுத்து மற்றய இடங்களிலும் அதாவது நம்ம ஊர் மிருகக்காட்சி சாலைகளிலும் அமையல்லாம் !

பொறுமை இல்லா வீரத்தமிழர்கள் இப்பவே போய் முதலையுடன் குளிக்க South Africa நாட்டின் Western Cape மாகானத்தில் அமைந்துள்ள Oudtshoorn நகருக்கு செல்லவும்.

 


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் – 4 (பெரியதாக இருந்தால் 2)
துவரம்பருப்பு – 1/2 கப்
புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு
பெரிய வெங்காயம் – 1 (நடுத்தர அளவு)
தக்காளி – 1
பூண்டுப்பற்கள் – 4
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிப்பதற்கு:

எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

துவரம்பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக பிழிந்தெடுக்கவும். 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் கெட்டி புளிச்சாறு தேவை. (புளி பேஸ்ட் இருந்தாலும் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்).

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு ஒரிரு வினாடிகள் வதக்கி, பின் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பானதும், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்புப் போட்டு நன்றாக சேர்த்து விடவும். இப்பொழுது கத்திரிக்காய்த் துண்டங்களைப் போட்டு கிளறவும். காய் மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் விட்டு, ஒரு மூடியால் மூடி விட்டு, மிதமான் தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வைத்திருக்கவும். காய் வேகவில்லையென்றால், இன்னும் சிறிது நேரம் வைத்திருந்து, காய் வெந்தவுடன், வேகவைத்தப் பருப்பைக் கொட்டிக் கிளறி, கொதிக்க விடவும். கூட்டு கொதிக்க ஆரம்பித்ததும், புளித்தண்ணிரைச் சேர்த்துக் கிளறிவிட்டு, மீண்டும் நன்றாகக் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாயிருக்கும். தொட்டுக்கொள்ள பொரித்த கூழ்வடவம் இருந்தால் இன்னும் சுவை கூடும்.

By Kamala

திரைப்படம் எடுக்கனும்னு எனக்கும் ஆசைதான் – ஆனா வாய்ப்பு எங்க கிடக்குது?
இதோ வந்துவிட்டது – அதுவும் ஹாலிவுட்ல; இந்தியர் அஷோக்கு தான் தர்றாருங்க – அதான் அஷோக் அமிர்தராஜ் தானுங்க.

அவரும், சோனி பிக்ஸ் (Sony PIX) ம் இணைந்து ‘கேட்வே’னு ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா ஒரு திரைப்பட இயக்குனரை தேர்வு செய்து, அவருக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தருகின்றனர்.

இந்த விபரத்தை  பார்க்கும் போது போட்டி முடிஞ்சிடுச்சு. ச்சே நம்ம நேரம். மிஸ் பண்ணிவிட்டோமே (

போட்டில கலந்துகொண்ட போட்டியாளர்களையும் அவர்களுடய படைப்புக்களையும் இங்க கிளிக் பண்ணி பார்க்கலாம்.