திங்கள், ஜூன் 23rd, 2008


“Dexter” என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்திருக்கின்றீர்களா ?

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Dexter என்பவன் தொடர் கொலைகளை செய்பவன். அதாவது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் கொலையாளிகளை இவர் கொலைசெய்வது போல் இருக்கும் இந்த நிகழ்ச்சி.

அட, ” சட்டத்தின் பிடியில் இருந்து யார் தப்பினாலும் என் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது” என்று வசனம் பேசும் நம்ம தமிழ் கதாநாயர்களை போல என்று வையுங்களேன்.

கொஞ்கம் நெஞ்சை ‘திக்..திக்’ என வைக்கும் காட்சிகள், இரத்தங்கள் வளிந்தோடும் காட்சிகள் உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அமேக வரவேற்பு உள்ளது அமெரிக்காவில்.

இந்த “Dexter” நிகழ்ச்சிக்கு ஆதரவு + அர்பபணிப்பு கொடுக்கும் விதமாக சில நீரூற்றுகளை இவ்வாறு அமைத்திருக்கின்றனர்.

ஆதி காலம் தோட்டு பரம்பரை பரம்பரையாக கட்டவுட் வைத்து, கழுதையில் ஊர்வலம் வந்து, கற்பூரம் காட்டி, பூ எறிந்து, பாலபிஷேகம் செய்து கொண்டுவரும் நமது தமிழ் சினிமா ரசிகர் மன்றங்களே… எப்போது நீங்கள் வித்தியாசமாக எதையாவது செய்து, பழைய பஞ்சாங்கத்தில் இருந்து வெளியே வந்து, எம்மை அத்தப்போகின்றீர்கள்???

இதோ கீளே அசத்தும் அமரிக்க ரசிகர்கள் !