இப்போது எங்குபார்த்தாலும் மாம்பழம் தான்.

இந்த மாம்பழ சீசனில் மிக எளிதான, மிக விரைவாக செய்யக்கூடிய ஒரு அருமையான பானம் தான் இந்த மாம்பழ ஸ்மூத்தி.

தேவையானவை:

1 கப் சிறிது துண்டுகளாக நறுக்கிய மாம்பழம்.

1 கப் யோக்கட் (Yogurt) அல்லது வனிலா ஐஸ்கிறீம்

1/2 கப் தூளாக்கிய ஐஸ் கட்டிகள்

செய்முறை:

நறுக்கியா மாம்பழங்கள், யோக்கட் (Yogurt) அல்லது வனிலா ஐஸ்கிறீம், தூளாக்கிய ஐஸ் கட்டிகள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் விட்டு மீண்டும் ஒரு சுற்று சுற்றுங்கள்.

Yogurt சேர்ப்பதால் சற்று இனிப்பு குறைவாக தென்பட்டால் சிறிது சீனி சேர்த்தால் சரியாகிவிடும்.